• March 29, 2024

Month: December 2021

Kit Kat-ஐ கத்தியாக உபயோகிக்கலாமா ???

நம்மில் நிறைய பேர் கிட் கேட் சாக்லேட்-ஐ விரும்பி சாப்பிடுவது உண்டு. அப்படிப்பட்ட கிட் கேட்டை கத்தி போல உபயோகிக்கும் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீங்கள் வழக்கமாக சமூக வலைதளங்களில் உலா வருபவர் என்றால் உங்களுக்கு ஆயிரக்கணக்கான கேள்விகளை எழுப்பும் சில வினோதமான வீடியோக்களை நீங்கள் அவ்வப்போது காண்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அப்படி உங்களுக்குள் கேள்வியைக் எழுப்பும் ஒரு வீடியோவை பற்றிய பதிவுதான் இது. இந்த வீடியோவில் ஒரு நபர் கிட்கேட் […]Read More

கடற்கரை மணலில் 50 அடி நீள சாண்டா கிளாஸ் !!!

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, புகழ்பெற்ற மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் சனிக்கிழமை (டிசம்பர் 25, 2021) ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் சாண்டா கிளாஸின் 50 அடி நீளமும் 28 அடி அகலமும் கொண்ட மணல் சிற்பத்தை உருவாக்கினார். பத்மஸ்ரீ விருது பெற்ற இவர் அவர் உருவாக்கிய மணல் கலையின் படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். சுமார் 5,400 சிவப்பு ரோஜாக்களை பயன்படுத்தி இந்த சாண்டா கிளாஸ் உருவத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த கலையின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த […]Read More

Bluetooth விக் உபயோகித்து Copy அடிக்க முயன்ற மாணவர் !!!

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் நேர்மையான படிப்பில் கவனம் செலுத்துவது குறைந்து தேர்வில் மோசடி செய்வதற்கான புதிய மற்றும் புதுமையான முறைகளை முயற்சிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. உத்தரபிரதேச மாணவர் ஒருவர் செய்த காரியம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்ததோடு சமூக வலைதளங்களிலும் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான தேர்வில் கலந்து கொண்ட போது தேர்வு விதிகளை மீறியதற்காக பிடிபட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தியபோது அவரது தலையில் ப்ளூடூத் […]Read More

உங்கள் வாழ்க்கையை மாற்றும் 7 தாரக மந்திரம்! கண்டிப்பாக இதை முயற்சித்து பாருங்கள்!

எடுக்கும் அனைத்து முயற்சிகளும், தோல்வியில்தான் முடிகின்றன என்று, மனம் தளர்ந்து போய் இருக்கிறீர்களா? உண்மையில், அந்த தோல்வியில் காத்திருக்கும் வெற்றி, நமக்கானதுதான். தோல்வி தோல்வி, நமது வெற்றியை மறைத்து வைத்திருக்கும் அட்சய பாத்திரம். தோல்வி, நம் மனோதடத்தை சோதிக்கும் கருவி. தோல்வி, நண்பர்கள் யார்? துரோகிகள் யார்? என காட்டும், காலக்கண்ணாடி. தோல்வி, நமக்கான வாழ்க்கைத் தேடலில், நாம் சரியாக சென்று கொண்டிருக்கிறோம் என்பதற்கான அடையாளம். தோல்வி, நம்பிக்கை என்பதற்கான உரம். விதை வெடிக்கும் போதுதான், மரம் […]Read More

நம்மை வியப்பூட்டும் ஆன்மீகமும், அறிவியலும் நிறைந்த மார்கழி மாதம்!

ஆன்மீகமும், அறிவியலும், வெவ்வேறு துருவங்கள் என்பது போன்ற தோற்றத்தை அளித்தாலும், பல விஷயங்களில், இரண்டும் ஒரே கருத்தைக் கொண்டு, ரயில் தண்டவாளக் கம்பிகள் போல, இணைந்து பயணிப்பது அவ்வப்போது நிரூபணமாகிக் கொண்டுதான் இருக்கிறது. ஆடி மாதத்திற்குப் பிறகு, நம் முன்னோர்களால், அதிகம் கவனிக்கப்பட்ட ஒரு மாதம் மார்கழி மாதம் . மார்கழி மாதம் என்றாலே, அனைவரும் ஆன்மீகத்திற்குள்தான், மூழ்கி இருப்பார்கள். ஆனால், அந்த ஆன்மீகத்திற்குள் பல அறிவியல் கருத்துக்களை, மறைத்து வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். உடல் எடை […]Read More

Jogging செய்வதால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா !!!

ஜாகிங் (Jogging) என்பது ஒரு நிலையான மற்றும் மெதுவான வேகத்தில் ஓடுவதாகும். ஜாகிங் செய்வதால் பல நன்மைகள் உண்டு. ஜாகிங்கின் முக்கிய நோக்கம் உடலுக்கு அதிக சிரமத்தை ஏற்படுத்தாமல் உங்களது உடலை பராமரிப்பதாகும். ஜாக்கிங் செய்வதால் ஏற்படும் பத்து நன்மைகளை பற்றிய பதிவுதான் இது. ஜாகிங் உடல் எடையை குறைக்க உதவுகிறது அரை மணி நேரம் ஜாகிங் செய்தால் சுமார் 300 கலோரிகளை எளிதில் எரிக்கலாம். நடைபயிற்சி செய்வதைவிட ஜாகிங் செய்வதே எடையை குறைக்க சிறந்த வழியாகும். […]Read More

வைரலாகும் Miranda பாணி பூரி !!!

இந்தியா பல்வேறு கலாச்சாரங்களின் பூமி, ஆனால் உண்மையில் நம் அனைவரையும் ஒன்றாக இணைப்பது ஒவ்வொரு மாநிலத்தின் உணவு பழக்கங்களே. பல்வேறு வகையான உணவுகள் கிடைப்பதாலும் உணவு ஆர்வலர்கள் மற்றும் பதிவர்களின் வருகையாலும் நம் நாடு வித்தியாசமான உணவுகளின் சங்கமமாக கருதப்படுகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டில் Fanta Maggi, ஃபயர் மோமோ, ஓரியோ பக்கோடா, டிக்கி ரசகுல்லா போன்ற பல்வேறு வினோதமான உணவு வகைகள் சமூக வலைத்தளங்களில் trend ஆனது. இந்த அனைத்து உணவுப் பொருட்களை குறித்த பதிவுகளும் […]Read More

பாம்பை வைத்து Skipping விளையாடும் இளைஞர் !!!

விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாகி வருகின்றன. பெரும்பாலும் வேடிக்கையாக இருக்கும் இந்த வீடியோக்கள் நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவது வழக்கம். ஆனால் இந்த பதிவில் நாம் காணப்போகும் வீடியோ நமக்கு சுவாரசியத்தை ஏற்படுத்துவதற்கு பதில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது. இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. இந்த வீடியோவில் ஒரு நபர் ஒரு பெரிய பாம்பை இருகைகளால் பிடித்து அதை வைத்து ஸ்கிப்பிங் (Skipping) […]Read More

3 லட்சம் டிப்ஸ் வாங்கிய Hotel Waiter-ஐ பணிநீக்கம் செய்த உணவகம் !!

அமெரிக்காவில் உள்ள ஆர்கன்சாஸில் உள்ள ஒரு பணிப்பெண், மற்ற உணவக ஊழியர்களுடன் வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து பெற்ற $4,400 (ரூ. 3,33,490) டிப்ஸைப் பகிராததால் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். உணவக பணியாள், ரியான் பிராண்டுக்கு ஒரு பணக்கார வாடிக்கையாளர் கிராண்ட் வைஸால் பெரிய அளவிலான tips-ஐ கொடுத்தார். சக ஊழியர்களுடன் டிப்ஸைப் பிரிக்கும்படி பிராண்டிடம் அந்த பணக்காரர் கூறினார். கொரோனா பெருந்தொற்றின் போது கடுமையாக பாதிக்கப்பட்ட உணவாக ஊழியர்களுக்கு பரிசாக £ 75 (ரூ. 7,519) உதவித்தொகையை அனைவருக்கும் […]Read More

கடவுளே, நீ எங்கே? நகைச்சுவை கலந்த பதிவு

உருகி உருகி பிரார்த்திக்கும் முருகேசுக்கு, கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. முருகேசு: கடவுளே..! நான் உங்க கிட்டே ஒரு விளக்கம் கேட்கலாமா.????? கடவுள் : தாராளமாகக் கேள் மகனே.. முருகேசு : பொறுமையாக, கோபப்படாமல் பதில் சொல்வீர்களா..? கடவுள் : கண்டிப்பாக.. முருகேசு : இன்றைய தினம், ஏன் எனக்கு இப்படி ஒரு மோசமான நாளைக் கொடுத்தீங்க..????? கடவுள் : என்னப்பா சொல்ற நீ..? முருகேசு : எப்பவும் சரியா எழுந்திருக்கிற நான் இன்னைக்கு […]Read More