இல்லறம் ஆளும் பெண்ணே!நீ உன் உறவுகளின் நல்லறம் கருதிஉன்னைத் தொலைப்பது ஏனோ? திருமணம் என்னும் தூண்டிலில் நீ சிக்காமல்,உன் சிறகுகளை விரித்துஉன் திறமையை நோக்கி நீ செல்.. வானவில் உன் வாழ்வில்வண்ணம் தூவதூயவள் நீயும் தலைநிமிர்ந்து செல்..!Read More
மழையில்லாக் காட்டிடம் கேட்டுப்பார்வறட்சியின் வலி தெரியும்! பகையில்லா பிள்ளையிடம் கேட்டுப்பார்அன்பின் மொழிப் புரியும்! வீடில்லா விலங்கிடம் கேட்டுப்பார்வாழ்வின் வேதனை விளங்கும்! வாயில்லா பறவையிடம் கேட்டுப்பார்காற்றின் மொழி புரியும்! நீ உன்னையே கேட்டுப்பார் நீ யாரென்று உனக்கே தெரியும்உன் வலிமையும் புரியும்!Read More
அழகு மெய்பேசும் விழி அழகு,கவிபாடும் குயில் அழகு,அழியாத தமிழ் அழகு,அறிவான பெண் அழகு! பேரழகு மெய்யாக வாழ வழிச்செய்வது பேரழகு,குயில் பாட மரம் வளர்தல் மெய்யாக பேரழகு,உயிராக தமிழ் காத்தல் பேரழகில் பேரழகு,அறிவான பெண்களுக்கு அனுபவமே பேரழகு! – இரா.கார்த்திகாRead More
இரவின் மடியில் உன்னை நினைத்தேன்என்னைத் தேடி கண்களை விழித்தேன்நிலவின் ஒளியில் பனி வீசும் பொழுதில்ஓர் நதியாய் நாளும் மிதந்தேன்மழைவீசி மலராட சிறு துளியாக என் கைகளில் சேர்ந்தாய்!Read More
தன்னைத் தானே தேடிக்கொண்டு,துள்ளித் திரியும் தாமரை மொட்டு!காற்றில் கலையாத கனவுகள் கண்டுவானவில் வண்ணம் அள்ளிக்கொண்டு…தன் பாதையை தேடி பயணம் மேற்கொண்டுஇவ்வுலகை வென்றாள் தீயான நின்று! – இரா.கார்த்திகாRead More
கனவுகளுக்கு இல்லை கட்டுப்பாடு!வானின் எல்லையை தொட,நீ வழிகளை தேடு! நீ விரும்பும் பாதையைநோக்கி நீ ஓடு!! யார் உன்னைத் தாழ்த்தினாலும்,அதை தவிர்த்து உன் தடத்தை நீ நாட்டு!!! சமானியனாய் வாழ்ந்து மாண்டு போவதை நீ தூக்கிப்போடு..பணம் உன்னை கீழே போட்டாலும்,உன் திறமையே உன்னை தாலாட்டும்..! – இரா.கார்த்திகாRead More
என் கண்களைத் திறந்து,இந்த நாட்டின் நடப்பையும்அறிய பல விஷயங்களையும்எனக்குக் கற்றுக் கொடுத்தது நீதான்! என்னைக் கையால் ஆக்கியதும் நீதான்!காதல் ஒன்றால் மட்டும் தான்,ஒரு மனிதனை முழுமனிதனாக்கி முன்னேற்றவும் அழிக்கவும் முடியும்!! நீயே என் காதல் கைபேசியே ! – இரா. கார்த்திகாRead More
கனவே நீ கைகூட நான் என்ன செய்வேனோ!கண்ணீரும் கதைச் சொல்ல நீ என் கையில் சேர்வாயோ!! உடல் மட்டும் உயிர் வாழ, உன்னைத் தேடி திரிந்தேனே!கனவே நீ சூரியனா!உன் ஒளிக்காக தவிக்கின்றகண்மணி நானும் தாமரையா!! நம்பிக்கை ஒன்றைத் தவிரஎன்னிடமும் ஒன்றும் இல்லை..என் கையில் சேர்வாயோஎன்னைத் தாங்கிச் செல்வாய்யோ!! – இரா. கார்த்திகாRead More
தீண்டும் திங்களின் துகள்களில் ஒளிறவே,மீண்டும் பூமியில் மலர்ந்தேன்!ஓடும் நதியின் ஓசை கேட்கவே,கரையினில் மண்ணென சேர்ந்தேன்!!காலைக் கதிரவன் கதிரினில் திரவமாய்,தீயை மூட்டி தடம் ஒன்று செய்தேன்!!! விழிகளில் விழுந்த விதையெனமுளைத்தாய்…உணர்வினில் மதுரமாய் கலந்தெனைச் சாய்த்தாய்…! நீங்காமல் நீங்கியே சேராமல் சேர்வோம்;காதலின் உள்ளே மழையென பொழிவோம்! – இரா.கார்த்திகாRead More
இரவில் பூத்த மல்லிகையை போல,தேனில் மூழ்கிய வண்டைப் போல,மழைத் தீண்டிய மயிலைப் போல,சூரியனால் மலர்ந்த தாமரையைப் போல,திருமாலைத் தரிசித்த ஆண்டாலைப் போல, உன்னை கண்டபின் மானைப் போலஎன் மனம் துள்ளிக் குதித்து ஓடியது! – இரா. கார்த்திகாRead More