• April 10, 2024

வேந்தனின் வர்ணனை

ரம்பா, ஊர்வசி, மேனகையிடமே மதிமயங்காத மன்னனடி,உன்னைக் கண்டதும் கண்கள் பூத்தது,அது உன் கூந்தல் செய்த மாயமடி!பூமியில் பிறந்த மேனகை நீயடி!! உன்னைக் கவர அந்த விஸ்வாமித்ரனை வீழ்க்கும் வேந்தன் நானடி..உன் கூந்தல் வாசம் என்னைக் கூப்பிடும் நேரம்மனதின் ஓரம் ஏதோ ஒரு பாரம்.. – இரா.கார்த்திக்காRead More

பூட்டி வைத்த நினைவுகள்

தேக்கி வைத்த வார்த்தைகள் தவித்துக் கொண்டிருக்கிறது விழிகளில்,பூட்டி வைத்த நினைவுகள் பொங்கிக்கொண்டிருக்கிறது நெஞ்சினில்,சாத்திவைத்த கதவுகளாய் கவிதைப் பாடுது இதழ்ளில்,தோண்டிப் புதைத்த நியாபகம் யாவும் தாளம்போடுது உயிரினில், பார்த்துப் பார்த்துப் பழகிய காலம்மீண்டும் பிறந்தது நொடியினில்! – இரா. கார்த்திகாRead More

பெண்மையின் உவமை

புன்னகை வீசும் பனிமலர் நீயோ!ஆழ்கடல் அலைகள் சொல்லும் அழகிய கன்னியும் நீயோ!! பறவைகள் பரவசமாக பாடும் பாட்டொலி நீயோ!பெண்மையின் உவமையும் நீயோ!உன் வசம் வீழ்ந்த வீரனும் நானோ!! இரா.கார்த்திகாRead More

கடிகார சுழற்சியும் – மனிதர்களின் சூழ்ச்சியும்

கடிகார முட்களின் சுழற்சியாய் சுழலும் வாழ்க்கையில்,அசையாமல் நிற்கும் கடிகாரமுல் போலச் சட்டென்று பிணியால் சரியும் மாந்தர்களும்,அரசாலும் அதிபதிகள் செல்வத்தை சாமானியர்களிடம் வரியாக பெற்றாலும்,கடனாக சிறுதுளியும் விவசாயி பெறவில்லை. சிறப்பாக சீமையில் ஓடி ஒலிந்த செல்வந்தனோ,ஒய்யாரமாய் உணவுண்ணகடனைத் தள்ளுபடி செய்தஇந்த நாட்டின் நிலையும் என்னவோ?Read More

புத்தனும் பித்தனாய் மாறும் மர்மம்!

கண்கள் வாசிக்க கவிதையாய் நீ!இதயம் நேசிக்கும் இனிமையாய் நீ!! கனவில் வருகின்ற கடவுளாய் நீ!உன்னை யாசிக்கும் பக்தனாய் நான்!! வானில் ஒளிரும் திங்களாய் நீ!உன்னை தீண்டும் மேகமாய் நான்!! நீ என் உயிரில் நிறைந்திருக்ககாற்றும் மழையும் கதை சொல்லபுத்தனும் பித்தனாய் மாறினேனே!Read More

ஆண்கள் ஏன் வீட்டு வேலை செய்வதில்லை? இதற்கான தீர்வு என்ன?

‘ஆண்கள் ஏன் வீட்டு வேலை செய்வதில்லை’ என்று யோசித்துப் பார்த்தால், சில நொடிகளிலேயே நமக்கு இரண்டு விஷயங்கள் புலப்படும். ஆண்களின் வளர்ப்பு முறை ஆண்களின் சுயநலம் ஆண்களின் வளர்ப்பு முறை ஆண்களின் வளர்ப்பு முறை என்று எடுத்துக்கொண்டால் ஒரு வீட்டில் ஆண், பெண் இரண்டு குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் பெண் குழந்தைக்களுக்கே தன்னுடைய தாய், வீட்டு வேலைகளை சொல்லித் தருகிறாள். மகனை ஒரு இளவரசனை போன்று வளர்க்கிறார்கள். நாளை படித்து வேலைக்கு போய் ஒரு குடும்பத்தை காப்பாற்றும் […]Read More

உன்னால் கவிஞன் ஆனேன்!

மங்கையின் முன்னே மதிமயங்கி நின்றேன்!வஞ்சி அவள் நீசம் வலையினில் விழுந்தேன்!! கண்களை திறந்தே கனவுகள் கண்டேன்!கன்னியே உன்னால் நான் கவிஞனும் ஆனேன்!! எழிலுடன் திரியும் திருமகள் நீயோ!உன் திருமுகம் மலர நானும் மலர்ந்தேன்!!Read More

விஷமாக இல்லாமல், உரமாக இருந்திடுவோம்!

விடியலைத் தேடி நீளும் இரவுகள்,உறங்காமல் மறைவது போல,மழைத் தேடும் மரமாக,மனம் வாடும் நேரங்களில்..விதையாக நாம் விதைத்த பாவங்களின் பலனாக,இயற்கை தரும் பாடங்களைக் கொரோனாவில் காண்கிறோம்! விஷமாக இல்லாமல், உரமாக இருந்திடுவோம்!இயற்கைதனைக் காத்திடுவோம்!!Read More

பகைகள் யாவும் பதற பதற!

தலைநிமிர்ந்து வாழ்ந்து பாருடாஅவமானங்கள் யாவும் சிதறும் மானுடா! தோல்வி யாவும் கதற கதறபகைகள் யாவும் பதற பதறமாற்றங்கள் இங்கு படர படரநரிக்கூட்டம் யாவும் மிரள மிரளபதுங்கி நின்று வேட்டையாடுடா..இங்கு ஒளிரும் உன் முயற்சிஅதற்கு இல்லை என்றும் நிகழ்ச்சிஎன்று துணிந்து நில்லடா…!Read More

அழகான தனிமை!

தனிமையில் தோன்றும் வெறுமையும்,வெறுமையில் தோன்றும் புதுமையும்,புதுமையில் தோன்றும் இனிமையும்,இனிமையில் தோன்றும் உண்மையும்,அகிலத்தை விட அழகானது!Read More