தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால் 593 பேர் பணிநீக்கம் !!!

கொரோனா பெருந்தொற்றில் இருந்து உலகம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் இந்த சூழலில் பெரும்பாலான நிறுவனங்களிலும், பள்ளிக் கல்லூரிகளிலும் தடுப்பூசி சான்றிதழ்கள் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத 593 பணியாளர்களை ஒரு தனியார் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.
வாஷிங்டனின் முன்னணி விமான நிறுவனமான யுனைடெட் ஏர்லைன்ஸ் தங்களது நிறுவனத்தில் பணிபுரிவோர் கட்டாயம் கொரோனா தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை வகுத்துள்ளது. அந்நிறுவனத்தில் பணிபுரியும் 67 ஆயிரம் பணியாளர்களில் 97% பணியாளர்கள் இந்த விதிமுறைக்கு கட்டுப்பட்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

பல்வேறு காரணங்களை கூறி தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுத்த பணியாளர்களுக்கு தங்களது தடுப்பூசி சான்றிதழ்களை நிறுவனத்திடம் சமர்ப்பிக்க கடந்த திங்கட்கிழமை கடைசி நாள் என அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நிறுவனத்தின் விதிமுறைக்கு கட்டுப்படாமல் இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களை யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்ய தொடங்கியுள்ளது.
முதற்கட்டமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளாத சுமார் இரண்டாயிரம் பணியாளர்களில் 593 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது இந்த நிறுவனம். தடுப்பூசி உயிரை மட்டுமல்ல வேலையையும் காக்கும், என இந்த செய்தி குறித்து பலரும் விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த 593 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அந்த நிறுவனத்தில் இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத பணியாளர்கள் விரைந்து தடுப்பூசி செலுத்திக் கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. “ரொம்ப strict ஆன கம்பெனியா இருக்குமோ???”, என்ற வடிவேலுவின் வசனத்திற்கு ஏற்ப விதிமுறைகளை பின்பற்றாத தொழிலாளர்களுக்கு கடுமையான தண்டனையை யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொடுத்துள்ளது.
- விமானத்தில் எந்த வகையான பிரச்சனை ஏற்படும் போது மே டே (May day) என்று சொல்ல வேண்டும்?
- விமானம் எழும்பும் போதும் தரை இறங்கும் போதும் ஏன் பயணிகள் நேராக அமர வேண்டும்?
- ஹோட்டல்களில் வெள்ளைநிற படுக்கை விரிப்புகள் மட்டுமே பயன்படுத்தப்படுவது ஏன் ?
- தவறாக புரிந்து கொள்ளபட்ட தமிழ் பழமொழி இது. உண்மை அர்த்தம் என்ன தெரியுமா?
- உங்கள் வாழ்க்கையில் எது வந்தாலும், இனி நீங்கள் சமாளிக்கலாம்!
இதுபோன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.