• April 25, 2024

இந்த 13 நகரங்களுக்கு தான் முதலில் 5G சேவை !!!

 இந்த 13 நகரங்களுக்கு தான் முதலில் 5G சேவை !!!

ஏற்கனவே இந்தியாவில் 4ஜி, Fiber நெட் போன்ற இணைய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் 5G இணைய சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளதாக நாட்டின் தொலைதொடர்பு துறை (DoT) அறிவித்துள்ளது.


வெளியான செய்தி அறிக்கையின்படி நாடு முழுவதும் 13 நகரங்களில் இந்த 5G தொழில்நுட்பம் முதலில் அறிமுகப்படுத்தப்படும். அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் புனே ஆகிய 13 நகரங்களில் 5ஜி சேவை முதலில் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Roll-out of 5G technology to drive mobile gaming in India in 2022 |  Business Standard News

எந்த தொலைத்தொடர்பு நிறுவனம் முதலில் 5ஜி சேவைகளை வெளியிடும் என்பது குறித்த சரியான தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஜியோ, ஏர்டெல், மற்றும் வோடபோன் போன்ற முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே 5ஜி சேவைகளுக்கான சோதனை தளங்களை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவில் 5ஜி முன்னோட்டத்தை ஐஐடி உடன் இணைந்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆராய்ச்சி செய்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வருகிற டிசம்பர் 31-ஆம் தேதி இந்த சோதனை படுக்கை முடிக்கப்பட உள்ளது.


ரூபாய் 224 கோடி செலவில் நிறுவப்பட்ட இந்த சோதனை படுக்கை தற்போது ஒரு முடிவுக்கு வருகிறது. 5ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் வரப்போவதை முன்பே கணித்த செல்போன் நிறுவனங்கள் தங்களது புதிய மாடல்களில் 5ஜி சேவையை அனுமதிப்பதற்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

What Is 5G Technology And How Must Businesses Prepare For It?

விரைவில் 5ஜி சேவை மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு இந்தியாவிற்கு 5G ஆண்டாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். தொழில்நுட்பத்தின் வளர்ச்சி புதிய பரிமாணங்களை அடையும்போது அது அனைத்து மக்களின் பயன்பாட்டிற்கும் வர வேண்டியது அவசியமாகிறது.


5G தொழில் நுட்பம் வெளியான பிறகு இந்தியாவில் இணையத்தை உபயோகப்படுத்துவோரின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிக்கலாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கணிக்கின்றனர். நாடு முழுவதும் வேகமான இணைய சேவை விரைவில் கிட்டும்.

இது போன்ற தகவல்களுக்கு www.deeptalks.in தமிழுடன் இணைந்திருங்கள்.