இந்த தீபாவளிக்கு சரவெடி வெடிக்க தடை !!!

இந்தியா முழுவதும் சரவெடி மற்றும் குறிப்பிட்ட ரசாயனத்தால் உருவாக்கப்படும் பட்டாசுகளை உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. வருகிற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை நாடெங்கும் கொண்டாடப்பட உள்ள நிலையில் உச்சநீதிமன்றம் இந்த தடையை பிறப்பித்துள்ளது.
பட்டாசுகளால் காற்று மாசுபடுகிறது என பல்வேறு தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் கடந்த பல ஆண்டுகளாக வழக்குப்பதிவு செய்து வந்திருந்த நிலையில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட ரசாயன பட்டாசுகளுக்கு மட்டும் தடை விதித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தாக இருக்கக்கூடிய பேரியம் எனப்படும் ரசாயனம் கலந்து தயார் செய்யப்படும் பட்டாசுகளுக்கு இந்த தடை பொருந்தும் என உச்சநீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.

அதேபோல ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு பட்டாசுகளை பொது போக்குவரத்து மூலமாகவோ தனியார் போக்குவரத்து மூலமாகவோ கொண்டு செல்லவோ விற்பனை செய்யவோ தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டெல்லி அரசாங்கம் பட்டாசுகள் வெடிக்க ஜனவரி மாதம் வரை தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் நாடெங்கும் சரவெடி தடை விதித்துள்ளது. பட்டாசுகளை வாங்கும்போது அதை வெடிக்க அரசாங்கம் அனுமதித்துள்ளதா என்பதை விசாரித்து வாங்குமாறு மக்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சுற்றுச்சூழலை அதிகம் மாசுபடுத்தாமல் இருக்கும்வரை பட்டாசு ஆபத்தானவையாக இருக்காது என சில தரப்புகள் கருத்து கூறி வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பட்டாசு விற்பனை நாடெங்கும் அமோகமாக நடைபெற்று வருகிறது.
- பொன்னியின் செல்வன் முழு கதை | Ponniyin Selvan Full Story
- Ponniyin Selvan Story Part 05 – பொன்னியின் செல்வன் பாகம் 5
- Ponniyin Selvan Story Part 04 – பொன்னியின் செல்வன் பாகம் 4
- Ponniyin Selvan Story Part 03 – பொன்னியின் செல்வன் பாகம் 3
- Ponniyin Selvan Story Part 02 – பொன்னியின் செல்வன் பாகம் 2
அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை பொதுமக்கள் வாங்கி வெடிக்க வேண்டாம் என deep talks தமிழ் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது போன்ற தகவல்களுக்கு deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.