• March 28, 2024

மீசையை Trim செய்யாததற்கு இடைநீக்கம் !!!

 மீசையை Trim செய்யாததற்கு இடைநீக்கம் !!!

விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் போன்று மீசையை வளர்த்ததற்காக போலீஸ் கான்ஸ்டபிள் டிரைவர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


மத்திய பிரதேச காவல் துறையின் கூட்டுறவு மோசடி மற்றும் பொது சேவை உத்தரவாத பிரிவு அந்த கான்ஸ்டபிளுக்கு இந்த இடைநீக்க உத்தரவை அளித்துள்ளது. அவர்கள் கான்ஸ்டபிளுக்கு அனுப்பியுள்ள இடைநீக்க கடிதம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.


ஜனவரி 7 2022 அன்று வெளியிடப்பட்ட அந்த உத்தரவில் மகாராஷ்டிர மாநிலத்தின் காவல்துறை உதவி ஆய்வாளர் பிரஷாந்த் ஷர்மாவின் கையொப்பம் இருக்கிறது. இச்சம்பவம் குறித்த தொலைபேசி அழைப்புகளுக்கு அந்த மாநிலத்தின் காவல்துறை தலைமை இயக்குனர் விவேக் மற்றும் ஏஐஜி பிரசாந்த் எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


வெளியிடப்பட்ட உத்தரவின்படி கான்ஸ்டபிள் டிரைவர் ராகேஷ் ராணா தனது மீசையை சரியான வடிவத்தில் ட்ரிம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த உத்தரவை பின்பற்றாததால் அவரை உடனடியாக இடை நீக்கம் செய்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

My Pride: Madhya Pradesh Cop Suspended For Refusing To Trim Moustache

ராணா தனது மீசையை அபத்தமான முறையில் அசிங்கமாக வளர்த்ததாகவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இது மற்ற துறை ஊழியர்கள் மீதும் தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிறது என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனக்கு பிடித்த படி மீசையை வைத்தது ராணாவின் குற்றமா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் காரசாரமான விவாதத்தை நடத்தி வருகின்றனர். ராணாவிற்கு ஆதரவளிக்கும் வகையிலும் காவல்துறைக்கு ஆதரவளிக்கும் வகையிலும் பல தரப்பு மக்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மத்திய பிரதேஷ் காவல்துறை வெளியிட்டுள்ள இடைநீக்க உத்தரவு கடிதத்தை கீழே உள்ள புகைப்படத்தில் காணுங்கள்.


இது போன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.