• March 28, 2024

Covaxin-ஐயும் Covishield-ஐயும் கலந்து போட்டுக் கொள்ளலாமா ?

 Covaxin-ஐயும் Covishield-ஐயும் கலந்து போட்டுக் கொள்ளலாமா ?

கொரோனா நோயிலிருந்து தப்பிக்க தடுப்பூசி தான் ஒரே வழி என்பதை உணர்ந்து நாட்டு மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர். இந்தியாவில் பெரும்பாலும் Covaxin மற்றும் Covishield தடுப்பூசிகள் போடப்படுகின்றன.


இந்த இரண்டு தடுப்பூசிகளுமே 2 Dose ஆக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. Covaxin தடுப்பூசியின் முதல் dose-ஐ போட்ட பின் ஒரு மாத இடைவெளியில் இரண்டாம் Dose-ஐ எடுத்துக்கொள்ள வேண்டும். Covidshield தடுப்பூசியை போட்டுக் கொள்ளும் பட்சத்தில் மூன்று மாத இடைவெளியில் இரண்டாம் Dose-ஐ எடுத்துக்கொள்ள வேண்டும்.

FAQ: Can I Get COVID-19 After Vaccination? What Are The Chances? Covishield  And Covaxin

ஒருவேளை Covaxin-ல் ஒரு Dose-உம் Covishield-ல் ஒரு Dose-உம் எடுத்துக் கொண்டால் நம் உடலில் அது எப்படி செயல்படும் என்ற சந்தேகம் மருத்துவ நிபுணர்களுக்கும் மக்களுக்கும் இருந்தது. இந்த சந்தேகத்திற்கு தீர்வு காணும் எண்ணத்தில் வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் ஒரு ஆய்வு நடைபெற்றது.


அந்த ஆய்வில் சுமார் 300 தன்னார்வலர்களுக்கு 2 ஊசியிலும் ஒவ்வொரு டோஸ் அளிக்கப்பட்டது. ஆய்வின் முடிவில் இரண்டு தடுப்பூசியும் கலந்து போடும் பட்சத்தில் கொரோனாவை எதிர்க்கும் தடுப்பாற்றல் உடலில் அதிகரிக்கிறது என தெரியவந்துள்ளது. இதை ICMR அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இரண்டு தடுப்பூசிகளையும் கலந்து போட்டுக் கொள்வதற்கு மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. கொரோனாவுக்கான தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ஆய்வின் முடிவு நாட்டு மக்கள் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த உதவும் விதத்திலேயே அமைந்துள்ளது.