அழகாய் பந்தை கவ்வி Fielding செய்த சுட்டி நாய் !!!

மனிதர்களுடன் சமமாக நாய்கள் விளையாடுவது வழக்கமே. அயர்லாந்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஒரு அழகிய நாய் செய்த சுட்டித்தனமான காரியம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அயர்லாந்தில் பெண்களுக்கான டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் நடுவே ஸ்டேடியத்தில் இருந்த நாய் ஒன்று திடீரென மைதானத்திற்கு நடுவே ஓடி வந்தது.

பேட்டிங் செய்தவர் அடித்த பந்தை அழகாக தனது வாயில் கவ்விக் கொண்டு அங்கிருந்த விளையாட்டு வீரர்களுக்கு தனது விளையாட்டை காட்டியுள்ளது இந்த செல்ல நாய்.

பந்தை வாயில் கவ்விக் கொண்டு அந்த நாய் ஓடும்போது விளையாட்டு வீரர்களும் அதன் பின்னாலேயே பந்தை அதனிடமிருந்து வாங்க ஓடினர். இந்த காட்சி பார்ப்பவர்களுக்கு சிரிப்பையும், புத்துணர்ச்சியையும் அளிக்கிறது.

மைதானத்திற்கு நடுவே அந்த நாய் பந்தை கவ்விக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த போது பேட்டிங் செய்த பெண் அந்த நாயை தடவிக்கொடுத்து கொஞ்சி பந்தை திரும்பப் பெற்றார். அந்த நாயின் உரிமையாளரும் மைதானத்திலிருந்து அந்த நாயை எடுத்துச் செல்ல அதன் பின்னாலேயே ஓடி வந்தார்.

இந்த நாய் செய்த சுட்டித்தனமான காரியத்தை அயர்லாந்து பெண்கள் கிரிக்கெட் வாரியம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கிரிக்கெட் போட்டியின் நடுவே இந்தச் சுட்டி நாய் செய்த சுட்டித்தனத்தை கீழுள்ள ட்விட்டர் பதிவில் கண்டு மகிழுங்கள்.

இது போன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.

Sha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *