• March 29, 2024

விளம்பர பலகை வெளியிட்டு காதலியை தேடும் இளைஞர் !!!

 விளம்பர பலகை வெளியிட்டு காதலியை தேடும் இளைஞர் !!!

டேட்டிங் செயலிகள் அதிகமாக உபயோகிக்கப்படும் இந்த காலத்தில், லண்டனில் ஒரு நபர் தனது காதலியை தேடுவதற்காக விளம்பரப் பலகையில் தனது தகவல்களுடன் புகைப்படத்தையும் கொடுத்துள்ளார். அந்த விளம்பரப் பலகையின் புகைப்படமானது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


லண்டன் மக்கள் இந்த விளம்பர பலகையில் உள்ள நபரை பார்த்து ஆச்சரியத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஊதா நிற திரையில் படுத்துக்கொண்டு, “நிச்சயமான திருமணத்தில் இருந்து என்னை காப்பாற்றுங்கள்” என்று ஒரு வரியை சுட்டிக்காட்டி தாடி வைத்த இளைஞன் இந்த விளம்பரப் பலகையில் இருக்கிறார்.

Find Malik a Wife - Get this Muslim boy married!
Malik

“எனக்கு ஒரு மனைவியை கண்டுபிடிக்க உதவுங்கள்” எனவும் அந்த விளம்பரப் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறும்பாகவும் நகைச்சுவையாகவும் தோன்றினாலும் அவரது இணையதளத்தை பார்த்தால் ஒன்று தெளிவாகிவிடும். உண்மையில் இது ஒரு தகுதியான இளங்கலை பட்டம் பெற்ற இளைஞர் தனது வருங்கால மனைவியை கண்டறியும் முயற்சியாகவே இருக்கிறது.


காதல் திருமணங்களுக்கு பெற்றோர்கள் மத்தியில் பயங்கர எதிர்ப்பு இருந்து வரும் சூழலில் இதுபோன்ற விளம்பரங்களால் காதலியை தேடுவதற்கு தனி தைரியம் வேண்டும். “எனக்கு இன்னும் சரியான பெண் கிடைக்கவில்லை வெளியே தேடுவதற்கு கடினமாக இருக்கிறது பெண் பார்ப்பதற்கு ஒரு விளம்பரப் பலகையை பெறவேண்டியிருந்தது” என இந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள மாலிக் அந்த விளம்பரப் பலகையில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த விளம்பரத்தை கொடுத்துள்ள மாலிக் ஒரு பஞ்சாப் குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் 20 வயதிற்கும் மேல் உள்ள ஒரு முஸ்லிம் பெண்ணை தனது மனைவியாக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். மாலிக்கின் வயசு இருபத்தி ஒன்பது.


இந்த விளம்பரப் பலகை இணையத்தில் வைரல் ஆன பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெயரை findmalikawife என்று மாற்றியிருக்கிறார் மாலிக். மாலிக்கின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஒரு புகைப்படத்தை கீழே காணுங்கள்.

காதலிப்பதற்கு இப்படிக்கூட பெண் தேடலாமா என மாலிக்கின் இந்த விளம்பரம் நம்மை வியப்பிற்கு உள்ளாக்குகிறது. மாலிக்கின் இந்த விளம்பரப் பலகை குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது சுவாரசியமான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மாலிக் லண்டனில் வெளியிட்டுள்ள விளம்பர பலகையின் புகைப்படம் அடங்கிய ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.


இது போன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.