• March 29, 2024

பதக்கம் நம்பர் 3 – லவ்லினா அசத்தல் | Tokyo Olympics !!!

 பதக்கம் நம்பர் 3 – லவ்லினா அசத்தல் | Tokyo Olympics !!!

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவுக்காக மூன்றாவது பதக்கத்தை மகளிர் குத்துச்சண்டை பிரிவில் லவ்லினா பார்கோஹேன் இன்று வென்றுள்ளார். ஏற்கனவே மீராபாய் சானு, பி.வி.சிந்து ஆகியோர் இந்தியாவுக்காக வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


PV Sindhu To Bag Two Brand Deals, Endorsement Fees To Double After Bronze  Win At Tokyo Olympics

இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் எத்தனை பதக்கங்கள் வெல்லப் போகிறார்கள் என்று விளையாட்டு ரசிகர்களும் நாட்டு மக்களும் மிக ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில் இதுவரை மூன்று பதக்கங்களை வென்று நம் வீரர்கள் அசத்தியுள்ளனர்.

லவ்லினா காலிறுதிப் போட்டியில் சீன நாட்டை சேர்ந்த நியென் சின் சென்னை தோற்கடித்தார். அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய லவ்லினா துருக்கியைச் சேர்ந்த சுர்மெனெலி புசெனாஸிடாவுடன் போட்டி போட்டார். கால் இறுதிப் போட்டி வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லவ்லினாவால் அரையிறுதியில் ஜொலிக்க முடியவில்லை.


புசெனாஸிடாவிடம் 5 க்கு 0 என்ற கணக்கில் லவ்லினா தோல்வியைத் தழுவினார். அரையிறுதியில் தோற்றது வருத்தம் அளித்தாலும் காலிறுதி வரை தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதன் விளைவால் லவ்லினா வெண்கலப் பதக்கத்தை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். பிரதமர் உட்பட பல பிரபலங்களும், நாட்டு மக்களும் லவ்லினாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Lovlina Borgohain qualifies to semi finals assures second medal for India -  Tamil News - IndiaGlitz.com

பதக்கம் வென்றது குறித்து லவ்லினா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “இது ஒரு அருமையான பயணம், என்னுடைய இத்தனை வருட உழைப்பிற்கு ஊதியமாய், இந்த பதக்கத்தை நான் வென்றுள்ளேன். தங்கத்திற்காக தான் நான் விளையாடினேன், நிச்சயம் 2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்ஸில் தங்கப்பதக்கம் வெல்ல முயற்சிப்பேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி தனக்கு உறுதுணையாக இருந்த இந்திய குத்துச்சண்டை அமைப்பிற்கும், விளையாட்டுத் துறைக்கும், மாநில அரசுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார். லவ்லினா வெளியிட்ட ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.