விண்வெளியில் Hair Wash செய்வது எப்படி ? வீடியோ வெளியிட்ட விஞ்ஞானி !!

பூமியை விட்டு வெளியே சென்றால் வாழ்க்கை எப்படி இருக்கும் என ஒரு தடவையாவது நாம் எண்ணிப் பார்த்திருப்போம். விண்வெளி நிலையத்தில் விஞ்ஞானி ஒருவர் தனது தலைமுடியை எப்படிக் கழுவினார் என்பதை வீடியோவாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவின் நாசா விஞ்ஞானியான Megan McArthur என்பவர் அவ்வப்போது விண்வெளி நிலையத்தில் அவரது வாழ்க்கை எப்படியெல்லாம் நகர்கிறது என்பதை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்.
உலகில் நாம் வாழும் வாழ்க்கையை விட விண்வெளி நிலையத்தில் இருக்கும் வாழ்க்கையானது மிகவும் வித்தியாசமானதாகும். மேகன் வெளியிட்ட வீடியோவில் gravity கம்மியாக இருக்கும் ஒரு இடத்தில் தலை முடியை எப்படி கழுவலாம் என செயல்முறை விளக்கத்தை அளித்துள்ளார்.
மேலும் அப்பதிவில், பூமியில் நாம் செய்யும் சாதாரண காரியங்கள் கூட விண்வெளியில் கடினமான ஒன்றாக இருக்கக்கூடும் என குறிப்பிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள பதிவிற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- பொன்னியின் செல்வன் முழு கதை | Ponniyin Selvan Full Story
- Ponniyin Selvan Story Part 05 – பொன்னியின் செல்வன் பாகம் 5
- Ponniyin Selvan Story Part 04 – பொன்னியின் செல்வன் பாகம் 4
- Ponniyin Selvan Story Part 03 – பொன்னியின் செல்வன் பாகம் 3
- Ponniyin Selvan Story Part 02 – பொன்னியின் செல்வன் பாகம் 2
Megan McArthur வெளியிட்ட செயல்முறை வீடியோ அடங்கிய ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.
இது போன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழ் உடன் இணைந்திருங்கள்.