• March 28, 2024

இந்தியாவின் தங்க மகன் – Neeraj Chopra !!!

 இந்தியாவின் தங்க மகன் – Neeraj Chopra !!!

இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படும்படி ஈட்டி எறிதல் போட்டியில் Neeraj Chopra தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார். நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 7 பதக்கங்களை வென்றுள்ளது.


இந்தியாவில் வென்றுள்ள 7 பதக்கங்களில் 4 வெங்கல பதக்கங்களும், 2 வெள்ளிப் பதக்கங்களும், ஒரு தங்கப்பதக்கமும் அடங்கும்.

Tokyo Olympics: Neeraj Chopra is good but tough for him to beat me, says  Johannes Vetter | Tokyo Olympics News - Times of India

23 வயது ஈட்டி எறியும் வீரரான Neeraj Chopra இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 87.58 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார். இந்த ஒலிம்பிக் தொடங்கியதிலிருந்து தங்க பதக்கத்திற்காக காத்திருந்த இந்திய மக்களுக்கும் ரசிகர்களுக்கும் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று பதிலளித்துள்ளார்.


தங்கம் வென்ற பின் நீரஜ் சோப்ரா, “இது என்னால் நம்ப முடியாத தருணம், Athletics-ல் இந்தியா வெல்லும் முதல் தங்கப் பதக்கம் இது. இதை பெற்றதில் எனக்கு மிகப் பெருமையாகவும், ஆனந்தமாகவும் இருக்கிறது” என கூறியுள்ளார்.

வெற்றி பெற்ற நீரஜ் சோப்ராவுக்கு நாடெங்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இவர் ஒரு இந்திய ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற Neeraj Chopra அவர்களுக்கு Deep Talks தமிழ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். நீரஜ் சோப்ராவை பாராட்டி பிரபலங்கள் பகிர்ந்த வாழ்த்து பதிவுகளை கீழே காணுங்கள்.