• April 19, 2024

அசர வைக்கும் One Man Orchestra !!!

 அசர வைக்கும் One Man Orchestra !!!

ஒரு தனி மனிதனால் ஒரே நேரத்தில் ஒன்று அல்ல இரண்டு இசைக்கருவிகளை ஒரு சேர வாசிக்க முடியும். ஆனால் ஒரு இசை குழுவிற்கு தேவைப்படும் இசைக்கருவிகளை ஒன்றாக சேர்த்து வாசித்து சமூக வலைதளங்களில் ஒரு நபர் வைரல் ஆகி வருகிறார்.


அர்ஜெண்டினாவின் சாண்டியாகோ மொரேனோ எனும் இளம் பாடகர் இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களால் “One Man Orchestra” என கொண்டாடப்பட்டு வருகிறார். தனது உடலில் இசைக் கருவிகளை பொருத்தி இவர் வாசிக்கும் வீடியோவானது உலகளவில் பகிரப்பட்டு வருகிறது.


சாண்டியாகோவின் வைரலாகும் விடியோவை கீழே உள்ள twitter பதிவில் காணுங்கள்.


ஒரே ஒரு கருவியை நன்றாக வாசிக்கும் இசைக் கலைஞர்களையே இந்த இண்டர்நெட் சமூகம் பெரிதளவில் கொண்டாடும் நிலையில் இதுபோன்ற One Man Orchestra-வை கொண்டாட தவறுமா என்ன. சாண்டியாகோ இசைக்கருவிகளை கையாண்டு வாசிக்கும் வீடியோவானது ஆயிரக்கணக்கான பார்வைகளை பல்வேறு வலைதளங்களில் பெற்று வருகிறது.

இவரது திறமையை பாராட்டி நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துகளையும் கருத்துக்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து சாண்டியாகோ இசைக்கருவிகளை வாசிக்கும் இன்னொரு வீடியோவும் நெட்டிசன்களால் கண்டறியப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.


சாண்டியாகோ இசைக்கருவிகளை வாசிக்கும் வீடியோவை கீழே காணுங்கள்.

இதுபோன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.