விளையாட நாங்க வரலாமா ?? Mass காட்டிய அணில் !!!

சமீப காலத்தில் சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் விலங்குகளின் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் அணில் ஒன்று கூடைப்பந்து மைதானத்துக்குள் நுழைந்து பந்தை வைத்து விளையாடும் வீடியோ தற்போது வைரலாகிறது.
இணையத்தில் பகிரப்படும் இந்த வீடியோவில் கூடைப் பந்து மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு இருக்கும்போது அணில் ஒன்று திடீரென மைதானத்திற்குள் வருகிறது. விளையாட்டு வீரர்களை கண்டு அஞ்சாமல் பந்தை உருட்டி விளையாடுவதற்கு அது தயாராகிறது.

அழகாக தனது இரு கரங்களால் பந்தை உருட்டி விட்டு விளையாட ஆரம்பித்தது அந்தச் சுட்டி விலங்கு. இதை கண்டு வியந்துபோன விளையாட்டு வீரர்கள் பந்தை மீண்டும் அந்த அணிலுக்கு அருகில் உருட்டி விடுகின்றனர். இப்போது தனது வாலை வைத்து அந்த பந்தை அழகாக அந்த விளையாட்டு வீரருக்கு திருப்பி அனுப்புகிறது .
அங்கிருந்த விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமின்றி இந்த வீடியோவை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இந்த அணிலின் செயல் வியப்பூட்டுகிறது. மனிதர்களைக் கண்டு அஞ்சாமல் அவர்களுடன் விளையாடி மகிழ்ந்த அந்த அணிலுக்கு நெட்டிசன்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
- பொன்னியின் செல்வன் முழு கதை | Ponniyin Selvan Full Story
- Ponniyin Selvan Story Part 05 – பொன்னியின் செல்வன் பாகம் 5
- Ponniyin Selvan Story Part 04 – பொன்னியின் செல்வன் பாகம் 4
- Ponniyin Selvan Story Part 03 – பொன்னியின் செல்வன் பாகம் 3
- Ponniyin Selvan Story Part 02 – பொன்னியின் செல்வன் பாகம் 2
அணில் பந்தை உருட்டி விளையாடும் அழகிய வீடியோவை கீழே காணுங்கள்.
இதுபோன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.