• March 28, 2024

இடைநீக்கம் செய்யப்பட்ட ஒலிம்பிக்ஸ் வீராங்கனை !!

 இடைநீக்கம் செய்யப்பட்ட ஒலிம்பிக்ஸ் வீராங்கனை !!

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவரான வினேஷ் போகத் எனும் மல்யுத்த வீரர் இந்திய மல்யுத்த அமைப்பினால் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


வினேஷ் போகத் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் காலிறுதி வரை முன்னேறி சென்று காலிறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவினார். ஒலிம்பிக் போட்டிக்கான டோக்கியோ பயணத்தில் ஒழுக்கம் தவறி நடந்து கொண்டதால் இவரை நாட்டின் மல்யுத்த அமைப்பு இடைநீக்கம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

WFI suspends Vinesh Phogat: Tokyo Olympics: WFI suspends Vinesh Phogat for  indiscipline; WFI notice issued to Sonam for misconduct; WFI Suspends Vinesh  Phogat: रेसलिंग फेडरेशन ने अनुशासनहीनता के लिए विनेश ...
Vinesh Phogat

ஒழுக்கமின்மை குறித்த அறிவிப்புக்கு பதில் அளிக்க ஆகஸ்ட் 16 வரை வினேஷ் போகத்துக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஹங்கேரியில் இருந்து டோக்கியோவிற்கு போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பயணித்த வினேஷ் சக இந்திய வீரர்களுடன் தங்கி பயிற்சி மேற்கொள்ள மறுத்துள்ளார்.


மேலும் இந்திய அணியின் அதிகாரப்பூர்வ ஆதரவாளர்களின் முத்திரை பதிக்கப்பட்ட உடையை போட்டியில் கலந்து கொள்ளும்போது அணிய மறுத்துள்ளார். இவ்வாறு இவர் செய்துள்ளது இந்திய மல்யுத்தம் அமைப்பின் விதிகளுக்கு முரணானது என எண்ணி இவரை இடைநீக்கம் செய்துள்ளனர்.

வினேஷ் போகத் தரப்பிலிருந்து இன்னும் எந்தவித பதிலும் வராத நிலையில் ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் தனது பதிலை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பல தகவல்களுக்கு Deep Talks தமிழ் உடன் இணைந்திருங்கள்.