Whatsapp-ன் புதிய Reaction Update !!!

வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் தங்களது செயலியில் பல்வேறு புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் குறுஞ்செய்திகளுக்கு Reaction கொடுக்கும் புதிய அப்டேட்டை வாட்ஸ்அப் வெளியிடப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே வாட்ஸ்அப்-ன் தந்தை நிறுவனமான ஃபேஸ்புக் தங்களது ஃபேஸ்புக் மொபைல் செயலி, மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகளில் இந்த ரியாக்சன் கொடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் வாட்ஸ்அப்பிலும் இது போன்ற ஒரு அப்டேட்டுக்கான முன்னோட்டம் அந்த நிறுவனத்தில் நடந்து வருகிறது.

இந்த அப்டேட் ஆனது தற்போது பீட்டா version- இல் வெளியிடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் உள்ள அனைத்து தொழில்நுட்ப கோளாறுகளையும் சரி செய்துவிட்டு உலக அளவில் இந்த அப்டேட் ஆனது வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.
இதுபோன்ற ஒரு அப்டேட் இல்லை என்று வாட்ஸ்அப் பயனாளர்கள் அந்த நிறுவனத்திடம் பலமுறை கோரிக்கை வைத்ததுண்டு. பயனாளிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் முயற்சியில் வாட்ஸ்அப் இந்த அப்டேட்டை வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.

சமீபத்தில் வாட்ஸ்-அப்பில் வெளியிடப்பட்ட ஸ்டிக்கர் அப்டேட் பயனாளர்களை பெரிதளவில் கவர்ந்தது. எமோஜிகளுக்கு பதில் மக்கள் ஸ்டிக்கரை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கினர். Reaction அப்டேட் வந்த பிறகு sticker-ஐ போல ரியாக்சனைம் பயனாளர்கள் அதிக அளவில் உபயோகிப்பர் என எதிர்பார்க்கலாம்.
- விமானத்தில் எந்த வகையான பிரச்சனை ஏற்படும் போது மே டே (May day) என்று சொல்ல வேண்டும்?
- விமானம் எழும்பும் போதும் தரை இறங்கும் போதும் ஏன் பயணிகள் நேராக அமர வேண்டும்?
- ஹோட்டல்களில் வெள்ளைநிற படுக்கை விரிப்புகள் மட்டுமே பயன்படுத்தப்படுவது ஏன் ?
- தவறாக புரிந்து கொள்ளபட்ட தமிழ் பழமொழி இது. உண்மை அர்த்தம் என்ன தெரியுமா?
- உங்கள் வாழ்க்கையில் எது வந்தாலும், இனி நீங்கள் சமாளிக்கலாம்!
தகவல் பரிமாற்றம் முறையில் இது ஒரு எளிமையான கருத்து பகிரும் அப்டேட் ஆக இருக்கக் கூடும்.
இது போன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.