• April 19, 2024

நம்மை வியப்பூட்டும் ஆன்மீகமும், அறிவியலும் நிறைந்த மார்கழி மாதம்!

 நம்மை வியப்பூட்டும் ஆன்மீகமும், அறிவியலும் நிறைந்த மார்கழி மாதம்!

ஆன்மீகமும், அறிவியலும், வெவ்வேறு துருவங்கள் என்பது போன்ற தோற்றத்தை அளித்தாலும், பல விஷயங்களில், இரண்டும் ஒரே கருத்தைக் கொண்டு, ரயில் தண்டவாளக் கம்பிகள் போல, இணைந்து பயணிப்பது அவ்வப்போது நிரூபணமாகிக் கொண்டுதான் இருக்கிறது. ஆடி மாதத்திற்குப் பிறகு, நம் முன்னோர்களால், அதிகம் கவனிக்கப்பட்ட ஒரு மாதம் மார்கழி மாதம் .


மார்கழி மாதம் என்றாலே, அனைவரும் ஆன்மீகத்திற்குள்தான், மூழ்கி இருப்பார்கள். ஆனால், அந்த ஆன்மீகத்திற்குள் பல அறிவியல் கருத்துக்களை, மறைத்து வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

உடல் எடை ஏன் அதிகரிக்கிறது?

நீங்கள், நன்றாக கவனித்துப் பார்த்தால், உங்களுக்கு, ஒரு உண்மை புலப்படும். மற்ற மாதங்களை விட, இந்த குளிர் காலங்களில் பொதுவாக நம்முடைய உடல் எடை அதிகரிக்கும்.


Image from Google
Image from Google

மார்கழி மாதம் என்றாலே, நம் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது, குளிர் மட்டும்தான். இந்த குளிர்காலத்தில், நம் உடலில் உள்ள, மெலட்டோனின் அளவு அதிகரிக்கிறது.

இந்த மெலட்டோன் என்பது என்னவென்றால், நம்முடைய பசி மற்றும் தூக்கம், விழிப்பு, சுறுசுறுப்பு, இதை அனைத்தையும் தொடர்புபடுத்திய, ஒரு ஹார்மோன் ஆகும்.

பொதுவாகவே, குளிர்காலங்களில், நாம் அதிக நேரம் தூங்குவோம். அதைவிட, அதிகமாக சாப்பிடுவோம். இதனாலேயே, இந்த ஹார்மோன் மாற்றத்தால் நம்முடைய உடல் எடை அதிகரிக்கும்.

பொதுவாகவே குளிர்காலங்களில், பகல் நேரத்தை விட, இரவு நேரம் அதிகமாக இருக்கும். மற்ற மாதங்களில், நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்பவர்கள் கூட, இந்த குளிர் காலத்தில், வீட்டை விட்டு வெளியே வருவதற்காகவே, யோசிப்பார்கள்.


காரணம், அந்த குளிர். ஆக, பொதுவாகவே, அதிகாலையில் எழுபவர்கள் கூட, இந்த குளிர் மாதத்தில், சிறிது தாமதமாகத்தான் எழுவார்கள். அதே போல், மாலை நேரமும், சீக்கிரம் இருட்டி விடுவதால், அந்த குளிர் அவர்களை, வீட்டிற்கு சென்று, உறங்க சொல்லும்.

ஆக, எவ்வளவு சுறுசுறுப்பாக இருப்பவர்கள் கூட, இந்த குளிர் மாதத்தில், உடற்பயிற்சிகளைத் தவிர்த்து, தூக்கத்திற்கு, அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

விடியல் விடிந்து, தூக்கம் போனாலும் அந்த போர்வைக்குள்தான், அவர்கள் இருப்பார்கள். அந்த கதகதப்பு, அவர்களுக்கு தேவைப்படும். அவ்வாறு தூங்குவதற்கும், நம் உடல் சோம்பேறித்தனமாக ஆவதற்கும், ஒரு காரணம் இருக்கிறது.


இந்த குளிர் மாதத்தில், பருவ கால மாற்றம் ஏற்படும் பொழுது, நம்முடைய மனநிலை மாற்றமும் ஏற்படுகிறது. ஆக, தினமும் செய்து வரும், பல செயல்கள், இந்த மனநிலை மாற்றத்தால், அதை நாம் தாமதப்படுத்துவோம், அல்லது தள்ளிப் போடுவோம்.

அதுமட்டுமில்லாமல், இந்த குளிர்காலங்களில், இயற்கையாகவே, நம்முடைய மனம் சொல்வது என்னவென்றால், சூடான பானங்களை அருந்த சொல்வது மற்றும் இனிப்பு வகைகள் அதிகமாக சாப்பிடத் தோன்றும்.


ஆக, எவ்வளவுதான், உணவு கட்டுப்பாட்டுடன் இருப்பவர்கள் கூட, இந்த குளிர் மாதங்களில், அதிகப்படியான உணவுகளையும், இனிப்புகளையும் எடுத்துக் கொள்வதால், அவர்களின் உடலில், கலோரிகள் அதிகமாகி, கொழுப்பு அளவுகள், அதிகமாகிறது.

ஆக, காலம் காலமாக, நன்றாக உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமாக இருப்பவர்கள் கூட, இந்த குளிர் காலம் வந்துவிட்டால், கொஞ்சம் சோம்பேறித்தனமாக ஆகிவிடுவார்கள்.

அதனால், இயற்கையாகவே, அவர்களுடைய எடை அதிகரிக்க ஆரம்பித்துவிடும்.


பின்பு, குளிர்காலம் சென்ற பிறகு, வெயில் காலத்தில், உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பார்கள். Gymக்கு போவார்கள். மீண்டும் பழைய நிலைக்கு வர, முயற்சி செய்வார்கள். இதுதான், குளிர் மாதத்தில் எடை கூடுவதற்கான, அறிவியல் காரணங்கள்.

ஆன்மீகமும் – அறிவியலும் !

இப்பொழுது, நம்முடைய முன்னோர்களின், ஆன்மீகத்திற்குள்ளே வைத்திருக்கும், அறிவியலை நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டும்.


இதுவரை நாங்கள் சொன்ன, எடைக் கூடுதல் பிரச்சனைக்கான முற்றுப்புள்ளிதான், கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில், நாம் பின்பற்றும் முறைகள்.

அந்த மாதங்களில், அவர்கள் சோம்பலாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தான், சபரிமலைக்கு மாலை போடுவார்கள்.



Image from Google

மாலை போட்டு விட்டாலே, நீங்கள் அதிகாலை எழுந்து, குளிக்க வேண்டும். பின்பு, இரவு நேரமும், நீங்கள் குளிக்க வேண்டும். அதைவிட, உங்களுக்கு உணவுக் கட்டுப்பாடு, இங்கு மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

இயற்கையாகத் தோன்றும், அந்த பசி உணர்வை, இந்த ஆன்மீகம் அடக்குகிறது. சபரிமலைக்கு மாலை போடுபவர்கள், கண்டிப்பாக ஒருவேளை விரதம் இருப்பார்கள். அதே சமயம், அவர்களுடைய உணவில், இறைச்சி இருக்காது. ஆரோக்கியமான உணவை மட்டுமே, மேற்கொள்வார்கள்.


தினமும் காலையும், மாலையும் கோவிலுக்கு செல்வார்கள். மேலும், இரவு உறக்கத்தில் கூட, அவர்கள் சில கட்டுப்பாட்டை வைத்திருப்பார்கள். தலையணை பயன்படுத்தக் கூடாது. போர்வைகள் பயன்படுத்தக் கூடாது. வெறும் தரையிலே படுக்க சொல்வார்கள்.

இவ்வாறு செய்வதால், நம்மால் அதிக நேரம், இரவில் உறங்க முடியாது. இவ்வித உறக்கத்தால், அதிகாலை சீக்கிரமே விழிப்பு வந்து விடும்.



ஆக, மற்ற மாதங்களைப் போல, இந்த மாதமும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், ஆண்கள் சபரிமலைக்கு, மாலை போடும் பழக்கத்தைக் கொண்டு வந்து, உணவுக் கட்டுப்பாட்டையும், உறக்கத்திற்கும் கட்டுப்பாடு வேண்டும் என்பதற்காகவும், பல விதிமுறைகளை வகுத்து, ஆன்மீகத்தோடு இணைத்து விட்டார்கள்.

எப்படி, ஆடி மாசம் அம்மனுக்கும், புரட்டாசி மாசம் பெருமாளுக்கும் உகந்தது என்பது போல, இந்த மார்கழி மாதம், அனைத்து தெய்வங்களுக்குமான மாதம் என்று, நம் முன்னோர்கள் சொன்னார்கள்.

ஆடியில், பலமுள்ள காற்று வீசும். அப்படி வீசும் காற்று, விஷக்காற்று என்பதால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு, வெளியே வந்து, அம்மன் கோவிலில் உள்ள, கிருமி நாசினியான, வேப்பிலையின் மணத்தை, சுவாசிக்கும் பொழுது, விஷக்காற்று முறியடிக்கப்பட்டதுடன், இயற்கையான ஆக்சிஜனும் கிடைக்கிறது.

அதேபோல், புரட்டாசி மாசம், மழை மாதம் என்பதால், மக்கள் வீட்டுக்குள்ளே இருந்து, சத்து மிகுந்த காய்கறிகளை, பெருமாளுக்கு படைத்து, உடலுக்கு தேவையான, ஆரோக்கியத்தை, தக்க வைத்துக் கொள்கிறார்கள்.


அதே போல்தான், மார்கழி மாதத்தின், அதிகாலையில் ஓசோன் படலத்தின் வழியாக, ஆரோக்கியமான, உடல் நலனைத் தருகின்ற காற்று, அதிகமாக பூமியில் இறங்குவதால் இது நம் வியாதிகளை கட்டுப்படுத்தும் என்பதால்தான், மார்கழி அதிகாலையில், பெண்கள் எழுந்து, சாணம் தெளித்து, கோலம் இட வேண்டும் என்று, நம் முன்னோர்கள் கூறினார்கள்.

Image from Google

கோலம் போடுதல் என்பது, இயற்கையாகவே ஒரு உடற்பயிற்சி ஆகும். இந்த பலனை, ஆண்களும் பெற வேண்டும் என்பதற்காகத்தான், சபரிமலைக்கு மாலை போட வைத்து, அதிகாலை எழுந்து, குளித்துவிட்டு, வெறும் காலோடு, கோவிலுக்கு செல்வார்கள்.


நம்முடைய உடலில், 80% ஆக்சிஜனும், 20% கரியமில இருக்க வேண்டும். தவறான பழக்க வழக்கங்களால், கூடுதலாகிவிட்ட விஷ வாயுவான, Carbon Dioxideஐ விரட்டி, ஆக்சிஜனை நம் உடல் பெறுவதால், வெள்ளை அணுக்கள் ரத்தத்தில் பெருகி, நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது.


ஆக, அப்படிப்பட்ட ஒரு நல்ல வாயுவை, நல்ல Oxygen-ஐ, நாம் சுவாசிக்க வேண்டும் என்பதற்காகத்தான், அதிகாலையில் மார்கழியில் எழுவது என்பது, தெய்வத்தின் பெயரால் கட்டாயப்படுத்தப்பட்டு, அதை புழக்கத்தில் வைத்தார்கள் நம் முன்னோர்கள்.

பீடை மாதம்

மார்கழி மாதம், பீடை மாதம் என்று இந்த மாதங்களில், திருமணம் போன்ற “மங்கள நிகழ்வுகளுக்கு, உகந்த மாதம் இல்லை” என்று கூறுவதும் உண்டு. மற்ற மாதங்களில், புவியின் ஈர்ப்பு சக்தியானது, மூலதரத்தை நோக்கி இருக்கும். ஆனால், மார்கழியில், பூமியில் வட பாதையில் இருக்கும் நமக்கு, அது சற்று குறைவாகவே இருக்கும்.

இந்த நேரத்தில், விதை விதைத்தால், அது சரியாக முளைக்காது. அந்த விதைக்கு, உயிர் சக்தி இருக்காது. விவசாயத்திலும், இதைத்தான் சொல்லி இருப்பார்கள். மார்கழி மாதத்தில், யாரும் புதியதாக விதைய நடமாட்டார்கள். ஆடியில் நட்டு, தை மாதம்தான் அறுவடை செய்வார்கள். ஆக, இந்த காலகட்டத்தில், நம்முடைய உயிர் சக்தி, கொஞ்சம் மந்தமாகத்தான் இருக்கும்.


நம்முடைய தமிழ்நாட்டில், பொதுவாக தை மாதங்களில்தான், அதிகமான சுப நிகழ்ச்சிகளை நம் முன்னோர்கள் மேற்கொண்டது உண்டு. திருமணத்தையும், அப்பொழுதுதான் அதிகமாக வைத்திருப்பார்கள்.

ஆக, பெண்கள் திருமணத்திற்கு பிறகும், சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், திருமணத்திற்கு பின்பு அவர்கள் சீக்கிரம் கருவுற வேண்டும் என்பதற்காகவும், அந்த மாதத்திற்கு முன்பே இருக்கும் மார்கழி மாதத்தில், அவர்கள் தயார் செய்கிறார்கள்.

Image from Google

கோலமிடுவது, அதிகாலையில் எழுபது, மூச்சுப் பயிற்சிக்குத் தேவையான மந்திரங்களைச் சொல்வது, தூரத்தில் இருக்கும் கோவிலுக்கு நடந்தே செல்வதன் மூலம் ஏற்படும் நடைப்பயிற்சி, மார்கழி மாதத்தில் நம் உயிர் சக்தியை, நாம் அதிகமாக சேமித்து வைக்க வேண்டும். அதற்கான முயற்சியில், நாம் ஈடுபட வேண்டும். அதற்காகத்தான், இந்த சமயங்களில், திருமணங்கள் பொதுவாக நடைபெறுவதில்லை.

மேலும், பெண்கள் கருவுறுவதற்கான, ஏற்ற மாதமும், இந்த மார்கழி மாதம் இல்லை. எனவே, ஆண்களும், பெண்களும், புலனடக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், ஆன்மீக வழிபாட்டோடு, அதைக் கொண்டுவந்தார்கள்.

இது விட, மிக முக்கியமானது என்ன தெரியுமா?

நம்முடைய மனம், பொதுவாக நம் கட்டுப்பாட்டில், அனைத்து நேரமும் இருப்பதில்லை. மற்ற மாதங்களை விட, மார்கழி மாதத்தில், நம் மனதை, நம்மால் எளிதாக கட்டுக்குள் கொண்டு வர முடியும். தியானங்கள், உடற்பயிற்சிகள் வழியாக, மற்ற மாதங்களில் கூட, நம் மனம் நம் பேச்சைக் கேட்காமல் போகும். ஆனால், மார்கழி மாதத்தில், நம் மனநிலையை நம்மால் சமநிலைக்குக் கொண்டு வர முடியும். அதற்கு இயற்கையும், நமக்கு ஒத்துழைக்கும்.


Image from Google

எனவே, மார்கழி மாதத்தில், அதிகாலையில் எழுந்து, நமக்கு கிடைக்கும் அந்த சுத்தமான பிராண வாயுவை, நாம் சுவாசித்து, உடல் ஆரோக்கியத்தோடு, நீண்ட ஆயுளை பெறுவோம்.

இது போல, மற்ற மாதங்களைப் போல், மார்கழி மாதத்திலும், நாம் நிலையாக இருக்க வேண்டும் மற்றும் அந்த கால ஓட்டத்தில், நாமும் நேராக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், ஆன்மீகம் என்ற பெயரில், நம்மை நிலையாக வைத்திருக்க, முயற்சி செய்தார்கள், நம் முன்னோர்கள்.

இதுதான், ஆன்மீக அறிவியலில், பின்புலத்தில் இருக்கும், மிகப்பெரிய உண்மை.


இந்த பதிவை வீடியோவாக பார்க்க கீழே கிளிக் செய்யுங்கள்!