• March 28, 2024

Tags :தமிழ் கவிதைகள்

கனவுகளுக்கு இல்லை கட்டுப்பாடு!

கனவுகளுக்கு இல்லை கட்டுப்பாடு!வானின் எல்லையை தொட,நீ வழிகளை தேடு! நீ விரும்பும் பாதையைநோக்கி நீ ஓடு!! யார் உன்னைத் தாழ்த்தினாலும்,அதை தவிர்த்து உன் தடத்தை நீ நாட்டு!!! சமானியனாய் வாழ்ந்து மாண்டு போவதை நீ தூக்கிப்போடு..பணம் உன்னை கீழே போட்டாலும்,உன் திறமையே உன்னை தாலாட்டும்..! – இரா.கார்த்திகாRead More

என் கையில் தவழும் கைபேசியே!

என் கண்களைத் திறந்து,இந்த நாட்டின் நடப்பையும்அறிய பல விஷயங்களையும்எனக்குக் கற்றுக் கொடுத்தது நீதான்! என்னைக் கையால் ஆக்கியதும் நீதான்!காதல் ஒன்றால் மட்டும் தான்,ஒரு மனிதனை முழுமனிதனாக்கி முன்னேற்றவும் அழிக்கவும் முடியும்!! நீயே என் காதல் கைபேசியே ! – இரா. கார்த்திகாRead More

விடைதேடி உயிர்வாழும் ஜீவன்!

கனவே நீ கைகூட நான் என்ன செய்வேனோ!கண்ணீரும் கதைச் சொல்ல நீ என் கையில் சேர்வாயோ!! உடல் மட்டும் உயிர் வாழ, உன்னைத் தேடி திரிந்தேனே!கனவே நீ சூரியனா!உன் ஒளிக்காக தவிக்கின்றகண்மணி நானும் தாமரையா!! நம்பிக்கை ஒன்றைத் தவிரஎன்னிடமும் ஒன்றும் இல்லை..என் கையில் சேர்வாயோஎன்னைத் தாங்கிச் செல்வாய்யோ!! – இரா. கார்த்திகாRead More

காதல் துளி!

தீண்டும் திங்களின் துகள்களில் ஒளிறவே,மீண்டும் பூமியில் மலர்ந்தேன்!ஓடும் நதியின் ஓசை கேட்கவே,கரையினில் மண்ணென சேர்ந்தேன்!!காலைக் கதிரவன் கதிரினில் திரவமாய்,தீயை மூட்டி தடம் ஒன்று செய்தேன்!!! விழிகளில் விழுந்த விதையெனமுளைத்தாய்…உணர்வினில் மதுரமாய் கலந்தெனைச் சாய்த்தாய்…! நீங்காமல் நீங்கியே சேராமல் சேர்வோம்;காதலின் உள்ளே மழையென பொழிவோம்! – இரா.கார்த்திகாRead More

அழியாத காதல்

மொழி பேசாத காலத்திலேமொழி பேசிய காதலடி! நிறம் அறிந்த காலத்திலேஇனம் அறியாத காதலடி! போர் கொண்ட காலத்திலேபகை நாட்டவர் போற்றிய காதலடி! விழியற்று போனாலும்மனம் பார்க்கும் காதலடி! செவியற்ற நிலையிலும்இசை கேட்கும் காதலடி! நீ சொல்ல மறுத்தாலும்உன் விழி சொல்லும் காதலடி! Sarath Kumar WriterRead More

சிரிப்பால் சிறைப்பிடித்தாள்..

உன் முத்துப் பற்களால் நீ சிரிக்கஅதை பார்த்து என் மனம் பரிதவிக்க! உன் உதட்டோர புன்னகை என்னைக் கொல்லுதடி!அதை தொடர்ந்து என் கண்கள் செல்லுதடி!! என் மனம் கவர்ந்தவள் நீயடி..உன்னை பிரியும் நொடி என் மரணமடி!! – இரா. கார்த்திகாRead More

வேந்தனின் வர்ணனை

ரம்பா, ஊர்வசி, மேனகையிடமே மதிமயங்காத மன்னனடி,உன்னைக் கண்டதும் கண்கள் பூத்தது,அது உன் கூந்தல் செய்த மாயமடி!பூமியில் பிறந்த மேனகை நீயடி!! உன்னைக் கவர அந்த விஸ்வாமித்ரனை வீழ்க்கும் வேந்தன் நானடி..உன் கூந்தல் வாசம் என்னைக் கூப்பிடும் நேரம்மனதின் ஓரம் ஏதோ ஒரு பாரம்.. – இரா.கார்த்திக்காRead More

பூட்டி வைத்த நினைவுகள்

தேக்கி வைத்த வார்த்தைகள் தவித்துக் கொண்டிருக்கிறது விழிகளில்,பூட்டி வைத்த நினைவுகள் பொங்கிக்கொண்டிருக்கிறது நெஞ்சினில்,சாத்திவைத்த கதவுகளாய் கவிதைப் பாடுது இதழ்ளில்,தோண்டிப் புதைத்த நியாபகம் யாவும் தாளம்போடுது உயிரினில், பார்த்துப் பார்த்துப் பழகிய காலம்மீண்டும் பிறந்தது நொடியினில்! – இரா. கார்த்திகாRead More

கடிகார சுழற்சியும் – மனிதர்களின் சூழ்ச்சியும்

கடிகார முட்களின் சுழற்சியாய் சுழலும் வாழ்க்கையில்,அசையாமல் நிற்கும் கடிகாரமுல் போலச் சட்டென்று பிணியால் சரியும் மாந்தர்களும்,அரசாலும் அதிபதிகள் செல்வத்தை சாமானியர்களிடம் வரியாக பெற்றாலும்,கடனாக சிறுதுளியும் விவசாயி பெறவில்லை. சிறப்பாக சீமையில் ஓடி ஒலிந்த செல்வந்தனோ,ஒய்யாரமாய் உணவுண்ணகடனைத் தள்ளுபடி செய்தஇந்த நாட்டின் நிலையும் என்னவோ?Read More

புத்தனும் பித்தனாய் மாறும் மர்மம்!

கண்கள் வாசிக்க கவிதையாய் நீ!இதயம் நேசிக்கும் இனிமையாய் நீ!! கனவில் வருகின்ற கடவுளாய் நீ!உன்னை யாசிக்கும் பக்தனாய் நான்!! வானில் ஒளிரும் திங்களாய் நீ!உன்னை தீண்டும் மேகமாய் நான்!! நீ என் உயிரில் நிறைந்திருக்ககாற்றும் மழையும் கதை சொல்லபுத்தனும் பித்தனாய் மாறினேனே!Read More