மனிதர்களின் தொன்மையான வரலாற்றை அறிந்து கொள்வதற்கு அகழ்வாய்வு ஒரு முக்கிய இடத்தை பிடிக்கிறது. இதன் மூலம் பல வியத்தகு விஷயங்கள் நமக்கு ஆதாரப்பூர்வமாக கிடைக்கும். அந்த வகையில் கொந்தகை என்ற இடத்தில் நடந்த அகழ்வாய்வில் பல அரிய விஷயங்கள் வெளி வந்துள்ளது.
அந்த வகையில் சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகே உள்ள கொந்தகை என்ற ஊரில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று உள்ளது. இந்த ஆய்வில் பலவிதமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பாக அந்த அகழ்வாராய்ச்சியில் சுமார் 5 அடி உயரம் கொண்ட எலும்புக்கூடு கிடைத்து.இது பலரையும் பிரமிக்க வைத்துள்ளது. கீழடியில் ஆறாம் கட்ட அகழ்வாய்வு நடந்து கொண்டிருக்கும் வேளையில் தான் கொந்தகை, மணலூர் போன்ற இடங்களிலும் இந்த ஆராய்ச்சி விரிவுபடுத்தப்பட்டது.
இந்த ஆராய்ச்சியில் ஏற்கனவே பல முதுமக்கள் தாழிகள் கிடைத்த நிலையில், தற்போது இந்த எலும்புக்கூடு கிடைத்திருப்பதால் இது இடுகாடாக இருந்ததற்கு வாய்ப்புகள் இருக்கலாம் என்று பலரும் கருதி வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் தான் ஐந்தடி நீளமுள்ள முழு மனித உருவ எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இந்த எலும்பு கூடானது 183cm நிலத்திலும் 35 சென்டிமீட்டர் அகலத்திலும் உள்ளது.
இந்த எலும்புக்கூட்டை தொல்லியல் ஆய்வாளர்கள் எடுத்து சுத்தம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டார்கள். மேலும் இந்த எலும்பு கூடு வாழ்ந்து வந்த காலம், அதனுடைய வயது, பாலினம் போன்றவை ஆய்வுக்குப் பிறகு தெரிய வரலாம்.
மேலும் இந்தப் பகுதியில் குழந்தைகளின் எலும்புக்கூடு முழு அளவில் கிடைத்துள்ளது. பொதுவாகவே கற்காலத்தில் இறந்தவர்களை மூன்று வெவ்வேறு வழிமுறைகளின் மூலம் புதைக்கும் பழக்கம் இருந்துள்ளது. அவை பூமியில் போட்டு மூடுவது, பள்ளம் தோண்டி புதைப்பது, தாழியில் வைத்து புதைப்பது போன்றவை ஆகும்.
இதுபோன்ற ஆய்வுகளை மீண்டும் இந்த பகுதியில் அதிகப்படுத்துவதின் மூலம் மேலும் பல உண்மைகள் நமக்கு கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதன் மூலம் தமிழரின் நாகரீகம் வரலாறு முழுமையாக நமக்கு கிடைக்கும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.
இது போல தமிழர்களின் தொன்மையை பறைசாற்ற கூடிய வகையில் கீழடியில் கிடைத்த சான்றுகள் தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உலகிற்கு பறைசாற்றுகிறது.