Deep Talks Tamil

“சங்க இலக்கியத்தில் கணிதம்” – ஓர் ஆய்வுப் பார்வை..

Maths

கணிதம் என்றாலே அனைவருக்கும் கசப்பு என்றுதான் கூற வேண்டும். எனினும் கணிதம் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்று கூறக்கூடிய அளவு அன்றாட மனிதனின் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்து காணப்படுகிறது.

இந்த கணிதமானது சங்க இலக்கிய நூல்களில் அதிகளவு தாக்கத்தைக் கொண்டிருந்தது என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். உதாரணமாக புலவர் கபிலன் ஒரு புள்ளி விவர இயல் நிபுணர் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

Maths
Maths

அந்தக் காலத்திலேயே பாரியின் பரம்பு மலையில் 300 ஊர்கள் இருந்திருப்பதை 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பாடலில் (புறம் 210) ல் கூறியிருக்கிறார்.

மேலும் இருங்கோ வேளின் 49 ஆவது தலைமுறை பற்றி பாடியிருக்கிறார், குறிஞ்சிப் பாட்டில் ஒரே மூச்சில் 99 மலர்கள் பற்றி கூறியிருக்கிறார். இதையெல்லாம் விட மிகப் பெரிய விஷயம் ஒன்று உள்ளது.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் தான் அணுகுண்டுகள் பயன்படுத்தப்பட்டது. அப்படிப்பட்ட அணுவைப் பற்றி திருவள்ளுவர் மாலையில் இடைக்காட்டார் பாடலில் குறளின் பெருமையை கூற வந்த இவர், அணுவை துளைத்து ஏழு கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குரல் என்று கூறியிருக்கிறார்.

மேலும் அன்றே அணுவை பகுக்க முடியும் என்ற செய்தியை உணர்த்துவது போல அணுவை துளைத்து என்ற வார்த்தையை போட்டு, அதில் ஏழு கடல் அளவுக்கு சக்தி உள்ளதை தெரிவித்து இருப்பதைப் பார்க்கும் போது அணு பற்றிய முதல் கொள்கையை இடைக்காட்டார் தான் கூறினாரா? என்ற கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளது.

Maths

இது மட்டுமா? உலகத்தில் உள்ள உயிரினங்களின் வடிவங்களை சொல்ல வந்த திருமூலர் ஒரு மாட்டின் முடியை எடுத்து ஆயிரம் கோடி இழைகளாக பிரிப்பது பற்றி பேசுவதும் அணுவைப் பிளப்பது போலத்தான் என்று கூறலாம்.

இதற்குக் காரணம் அந்த மாட்டின் முடியை எடுத்து அதை 100 கூறாக போட சொல்கிறார். அதன் பின்னர் ஒரு முடியை எடுத்து ஆயிரம் கூறாக்குகிறார். பின்னர் இதை மீண்டும் ஆயிரம் ஆகப் பகுக்கச்சொல்லி இருக்கிறார். இப்படி பகுத்தபின் கிடைக்கக் கூடிய வடிவமே ஒரு ஜீவனின் வடிவம் என கூறுகிறார்.

இதனை என்று ஆண்களின் விந்துக்களை மைக்ரோஸ்கோப் அடியில் வைத்து பார்க்கும் போது அந்த உயிரணுக்களை மில்லியன் கணக்கில் பகுப்பதை இவர் உணர்த்தி இருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

Maths

ரோம எழுத்துக்களைக் கொண்டு எங்களை எழுதிய மேலை நாட்டவரை நம் கணித முறை கொண்டு ஆய்வு செய்து பார்க்கும் போது கணிதத்தில் நம்மவர்கள் ஒரு படி முன் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

அதாவது திருமூலரின் கூற்றுப்படி 100×1000×100000=100 000 00 000 இந்தக் கணக்கானது மாட்டின் முடியை ஆயிரம் கோடி இழைகளாக பிரிக்க சொல்கிறது. இந்திய விஞ்ஞானிகள் அவர்களுடைய ஞானக்கண்களால் கண்டு சொல்லி இருக்கலாம்.

அதுபோலவே ஒரு கடுகில் 2,62,144 ஆணுக்கள் உள்ளதாக கூறப்படுகிறது கண்ணுக்கு தெரியாத அணுவைப் பற்றி நமது முன்னோர்கள் எப்படி கணக்கு போட்டார்கள் என்பது தெரியவில்லை.

அது மட்டுமல்லாமல்

1\8  – அரைக்கால்

1\16 – மாகாணி

1\32 – அரை வீசம்

1\160 – அரைக்காணி

1\320 – முந்திரி இதுபோன்ற அளவு முறைகள் லிட்டர் அளவு முறைக்கு முன்னரே தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது இதை படி அளவு முறை என்றும் கூறலாம்.

எனவே எண்ணியலை பொருத்தவரை தமிழர்கள் கணக்குப் புலிகளாக இருந்திருக்கிறார்கள்.

Exit mobile version