• March 29, 2024

காதல் பித்துப்பிடித்தவளாய் நான்!

 காதல் பித்துப்பிடித்தவளாய் நான்!

கை அருகில் நீ
இருந்தும் இல்லாமல் நான்…!!
ஏதுவும் பிடிப்பதில்லை
அழைத்தாலும் செவிமடுக்கவில்லை;
சொல்வதற்கு ஏதுமில்லை…,
சற்றே பித்துப்பிடித்தவளாய் நான்…!!!


உன் சுவாசக் காற்றில்
ஊசலாடும் இதயம்…!

‘நீதான்’ வேண்டும்
அடம்பிடிக்கும் மனது…!
கொடுக்கவியலா தூரத்தில் நீ…!
ஸ்பரிசம் உணரா தவிப்பில் நான்…!!
பெரிதாக ஒன்றுமில்லை..
சற்றே பித்துப்பிடித்தவளாய் நான்…!!!


கொடியாய் படர்கிறாய்
மலராய் மணக்கிறாய்
ஆலகால விஷமானவனே…!
என் காதலில் குரூரம்… நீ
சொல்வதற்கு ஏதுமில்லை..!!
சற்றே பித்துப்பிடித்தவளாய் நான்…!!!

உன் அருகாமை
வேண்டி தவமிருக்கும் மனது;
சாத்தியமாக்க வந்து சேர்….!
இணைந்து மகிழப்போகும்
வாழ்வின் நினைவுகளில்,
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்…!!
பெரிதாக ஒன்றுமில்லை…,
சற்றே பித்துப்பிடித்தவளாய் நான்…!!!