• March 29, 2024

மரங்கள் நம் வரங்கள்

 மரங்கள் நம் வரங்கள்

பல நூறு மரங்களை
அழித்து வீழ்த்தி விட்டு
இளைப்பாற இன்னொரு
மரத்தடி தேடிச் சென்று
நிம்மதி பெரு மூச்சி விடுகிறாய்


மனிதா மனம் மரத்துப்போன
மடமனிதா வேரறுக்கும் உனக்கு வேரில்லாததால் மரத்தின்
வேதனை தெரிவதில்லை

மதங்களை பிடித்த உனக்கு
மரங்களை வெட்டும்
மதம்பிடித்து கொண்டதோ


மரங்களை வெட்டி கீழ் வீழ்த்தும்
அறைகுறை மனிதா
வெட்டவெளியில் வேல் வெயில் உன்னை சுட்டுக்குடைந்து உயிர்வருத்தி வதம் செய்யும்

உள்ளுணர்வகளுக்குள் கடைசி ஓலம் உன் சந்ததியின் காதில்
நுழைந்து ஊடுருவி
உயிரணுவரை சென்று
உருத்தி கிரங்கடிக்கும்

மடமனிதா ஒருபோதும்
மறந்துவிடாதே மரங்கள்
மனிதனை விட மிகவும் மகத்துவம் வாய்ந்தது

நாம் ஆரோக்கிய வாழ்வை
வளமாய் நலமாய் வாழ
பூமி நமக்கு தந்த எழில் மிகு வரங்கள் மரங்கள்.


கவிஞர் சென்

கவிஞர் சென்