Deep Talks Tamil

ராமாயண காலத்தில் இராமரால் கட்டப்பட்ட ராமர் சேதுபாலம்..! – மர்மமான உண்மைகள்..!

Ram Setu Bridge

சீதையை மீட்பதற்காக இலங்கைக்குச் செல்ல கடலில் கட்டப்பட்ட பாலம் தான் சேது பாலம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த பாலம் ஆனது இலங்கை தீவை இணைக்க கூடிய ஒரு தரை பாலம் என்று கூட கூறலாம். தமிழ்நாட்டில் இருக்கும் பாம்பன் தீவையும், மன்னார் தீவையும் இணைக்க கூடிய வகையில் இந்த பாலம் உருவாக்கப்பட்டது.

ஆனால் அறிவியல் ஆய்வாளர்களின் ஆய்வுப்படி பாக் ஜலசந்தி ஒரு சுண்ணாம்பு கல்லால் உருவாக்கப்பட்ட இயற்கையான பாலம் தான் இது என்று கூறியிருக்கிறார்கள். இதில் வியத்தகு விஷயம் என்னவென்றால் இந்த பாலத்தை நீங்கள் வான்வழி பார்வையில் இருந்து பார்த்தால் மிக நன்றாக தெரியுமாம்.

Ram Setu Bridge
Ram Setu Bridge

இந்த பாலம் கட்டப்பட்ட போது கடல் மட்டத்திற்கு மேலாக இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் பதினைந்தாம் நூற்றாண்டு வரை அது நடக்கக்கூடிய பாலமாகவே இருந்துள்ளது. இந்த பாலத்துக்கு பல்வேறு பெயர்கள் உள்ளது. ராமர் சேது பாலம், ஆதம் பாலம், நள சேது மற்றும் சேதுபான்டா பாலம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இந்த பாலத்தை கட்டுமானம் செய்தவர் நளன் என்பதால் இது நள சேது பாதம் என்று அழைக்கப்பட்டது.

மேலும் இந்த பாலம் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு பழமையானது என்று கடல் சார் ஆய்வுகள் நிரூபித்துள்ளது. எனவே தனுஷ்கோடி மற்றும் மன்னர் தீவு அருகே இருக்கக்கூடிய கடற்கரைகளில் கார்பன் டேட்டிங் செய்தது மூலம் அது எந்த ஆண்டு என தெரியவந்துள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளுமே ராமாயண தேதியோடு ஒத்துப் போவதால் அது உண்மையான பாலமாக இருக்குமோ? என்று அனைவருக்கும் சந்தேகங்கள் வந்துள்ளது.

Ram Setu Bridge

விஞ்ஞான ரீதியாக இதை இயற்கையான முறையில் கடலில் நீண்ட அளவு தூரமாக இருக்கக்கூடிய இயற்கை திட்டுக்கள் என்ற போதிலும் இந்துக்களின் நம்பிக்கை படி வானரங்களால் இந்த பாலம் கட்டப்பட்டு ராமருக்கு சீதையை மீட்க உதவியுள்ளது.

மிதக்கும் கற்களை கொண்டு இந்த பாலம் கட்டப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள். இன்றும் ராமேஸ்வரம் முழுவதும் இத்தகைய மிதக்கும் கற்கள் உள்ளது ஆச்சரியமாகவே உள்ளது. அறிவியல் ரீதியாக  எரிமலை பாறைகள் தண்ணீரில் மிதக்கும் என்று அறிவியலாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

இன்னும் இந்த ராமர் பாலத்தை பற்றிய மர்ம முடிச்சு அவிழ்க்கப்படாத சூழ்நிலையில் எப்போது இதன் உண்மை தெரியும் என்று பலரும் காத்திருக்கிறார்கள்.

Exit mobile version