பறவை இனங்களிலேயே ராஜா என்று அழைக்கக்கூடிய கழுகுகள் பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். மிக உயரத்தில் பறக்கக்கூடிய ஆற்றல் கொண்ட இந்த கழுகுகள் தங்கள் வாழ்நாளில் மிகப்பெரிய தன்னம்பிக்கையோடு போராடக்கூடிய தன்மை கொண்டவை என்பது பலருக்கும் தெரியாது.
கழுகுகளின் வாழ்நாள் 70 ஆண்டுகள் என்றாலும் இந்த வாழ்நாள் முழுவதும் அவை வாழ்கின்றதா? என்றால் அது அவற்றின் சக்தியை பொறுத்து தான் உள்ளது என்று கூறலாம். ஏனென்றால் 40 வயதை தொட்ட உடனேயே பெரும்பாலான கழகுகள் முதுமையின் பிடியில் சிக்கிக் கொள்கிறது.

இந்த சமயத்தில் இந்த கழுகுகள் தங்களது இறகுகளை இழந்து வலுவிழந்து போய்விடும். அது மட்டுமல்லாமல் அதன் கூர்மையான அலகும் வளைந்து விடும். கால் நகங்கள் இரையைப் பிடிக்க முடியாமல் சக்தி இழக்கும்.
இந்தச் சூழ்நிலையில் தான் கழுகுகள் ஒரு முக்கியமான முடிவினை எடுக்க தள்ளப்படுகிறது. அந்த முடிவை தன்னம்பிக்கையோடு கழுகுகள் எதிர்கொள்ளும் போது தான் அவற்றால் 70 வயது வரை வாழ முடியும் என்ற நிலை ஏற்படும்.
அந்தத் தன்னம்பிக்கை இல்லாத கழுகுகள் முதுமையின் மாற்றங்களால் செத்தும் மடிய வேண்டும். இல்லையென்றால் கடுமையான ஒரு போராட்டத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு தன்னம்பிக்கையோடு இருப்பதின் மூலம் இரண்டாவது கட்டத்தை நோக்கி பயணத்தை மேற்கொள்ளலாம்.
தன்னம்பிக்கை உடைய கழுகுகள் இரண்டாம் கட்டம் நோக்கி நகர, மலையின் உச்சிக்குச் சென்று பாறையின் மீது மோதி தனது அலகை தானே உடைத்துக் கொள்ளும். பிறகு இறகுகளையும், நகங்களையும் பிய்த்துப் போடும் பல மாதங்கள் உணவின்றி அப்படியே இருக்கும்.
இதனை அடுத்து அதன் தன்னம்பிக்கைக்கு வலு சேர்ப்பதற்கும் வகையில் புதிய இறகுகளும், புதிய அலகும், நகங்களும் முளைக்கும். அந்த காலம் வரை இது காத்திருக்கும். அப்படி காத்திருந்த பிறகு அது 30 ஆண்டுகள் வரை மீண்டும் தொடர்ந்து வாழக்கூடிய நிலையை எட்டும்.
மனிதர்களும் இந்த கழுகுகளை போல நமது இலக்குகளை அடைய எத்தகைய இடங்கள் வந்தாலும் அவற்றை தகர்த்தெறிந்து குறிப்பிட்ட காலம் வரை காத்திருந்து, நமது இலக்கு நோக்கி முன்னேற வேண்டும் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.
எனவே நீங்களும் வாழ்க்கையில் தன்னம்பிக்கையோடு எதையும் சாதிக்க காத்திருப்பது தவறில்லை என்பது புரிந்து கொண்டு, அந்த தக்க சமயத்தை நீங்கள் சீரிய முறையில் பயன்படுத்தி வெற்றி கனிகளை எளிதில் தட்டிப் பறிக்கலாம்.