Deep Talks Tamil

அழகிய ஓவியத்தை வாங்கி மனம் குளிர வைத்த பெண் !!

பாரிஸ் நகரத்தின் ஒரு குறிப்பிட்ட தெருவில் தனது ஓவியத்தை விற்க முயன்ற ஒரு பெரியவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்து அந்த வீடியோவை ஒரு பெண் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

கலைஞர்களின் கலை எப்போதுமே மதிக்கத்தக்க ஒன்றாக விளங்க வேண்டும். ஆனால் தான் வரைந்த ஒரு ஓவியத்தை நீண்ட நேரமாக விற்க முடியாமல் தெருவில் ஒரு வயது முதிர்ந்த ஓவியர் கஷ்டப்பட்டு வந்துள்ளார். இதை தூரத்தில் இருந்து வீடியோ எடுத்த ஒரு பெண் யாராவது இந்த ஓவியத்தை வாங்குவார்களா என ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஓவியத்தை

நீண்டநேரம் அந்த ஓவியத்தை யாரும் வாங்காமலேயே அந்த முதியவரை கடந்து சென்றனர். இதைப் பார்த்த அந்த வீடியோ எடுக்கும் பெண் மனம் பொறுக்காமல் தானே தெருவுக்கு இறங்கி வந்து முதியவரிடம் அவரது ஓவியத்தை விலைக்கு வாங்கி அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

30 யூரோக்களுக்கு விற்கப்பட்ட அந்த ஓவியத்தை 40 யூரோக்கள் கொடுத்து வாங்கியுள்ளார் இந்த உன்னத பெண். இந்த ஓவியத்தை இவர் வாங்கியதும் அந்த முதியவரின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது.

இந்த அழகான சம்பவத்தை வீடியோவாக சமூக வலைதளங்களில் அந்த பெண் பகிர்ந்துள்ளார். இச்சம்பவம் பார்ப்பவர்களுக்கு மனிதத்தின் மகிமையை உணர்த்துகிறது என்றே சொல்லலாம்.

இந்த சுவாரசியமான வீடியோ அடங்கிய ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.

https://twitter.com/GoodNewsCorres1/status/1432885507726487553

இது போன்ற பதிவுகளுக்கு Deep Talks தமிழுடன் இணைந்து இருங்கள்.

Exit mobile version