Skip to content
March 13, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil

Deep Talks Tamil

Uncover the Depths of Tamil Culture & Literature | Daily Motivational Inspiration | Tamil Audiobooks

cropped-website-banner-copy.jpg
Primary Menu
  • Home
  • கட்டுரைகள்
    • சிறப்பு கட்டுரை
    • சுவாரசிய தகவல்கள்
    • மர்மங்கள்
    • Viral News
    • வெற்றி உனதே
    • Uncategorized
  • Podcast
  • சினிமா
    • Cinema News
  • Videos
    • தமிழனின் அறிவியல்
    • Deep Interesting Facts
    • மதுரை தெருக்கள் வரலாறு
    • தமிழும் தமிழர்களும்
    • Tamil Motivation – தன்னம்பிக்கை வீடியோ
    • சிவ தத்துவம்
    • தமிழ் மாவீரர்கள்
    • சித்தர்கள் வரலாறு
  • கவிதைகள்
  • Contact Us
    • About Us – Deep Talks Tamil
    • Privacy Policy
    • Terms and Conditions
Watch Video
  • Home
  • சிறப்பு கட்டுரை
  • ஸ்லீப் டூரிஸம்: தூங்குவதற்காகவே சுற்றுலா செல்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதா?
  • சிறப்பு கட்டுரை

ஸ்லீப் டூரிஸம்: தூங்குவதற்காகவே சுற்றுலா செல்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதா?

Vishnu March 7, 2025 1 minute read
tour
444

தொழில்நுட்ப யுகத்தில் ஓய்வின்றி இயங்கும் நம் வாழ்க்கையில், நிம்மதியான தூக்கத்திற்காக மட்டுமே சுற்றுலா செல்லும் புதிய போக்கு உலகெங்கும் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இந்த ஸ்லீப் டூரிஸம் உண்மையில் ஆரோக்கியமானதா?

ஸ்லீப் டூரிஸம் என்றால் என்ன? இது ஏன் பிரபலமாகிறது?

சுற்றுலா என்றால் புதிய இடங்களைப் பார்ப்பது, புகைப்படங்கள் எடுப்பது, பிரபலமான உணவுகளைச் சுவைப்பது என்பதே பெரும்பாலானோரின் எண்ணம். ஆனால் தற்போது ‘ஸ்லீப் டூரிஸம்’ எனும் புதிய போக்கு உலகெங்கும் வேகமாக பரவி வருகிறது.

ஸ்லீப் டூரிஸம் என்பது வித்தியாசமான இடங்களைப் பார்ப்பதற்கோ, சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கோ அல்லாமல், நன்றாக தூங்குவதற்காக மட்டுமே மேற்கொள்ளப்படும் சுற்றுலா பயணம். இதில் நகர வாழ்க்கையின் பரபரப்பிலிருந்து விலகி, அமைதியான இயற்கைச் சூழலில் தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுப்பதே முக்கிய நோக்கம்.

“எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல், ஒரு நல்ல தூக்கத்திற்காக ஏங்கியிருக்கிறேன். பள்ளி காலம், கல்லூரி நாட்கள், அதன் பிறகு வேலை என வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும்போது, மெய் மறந்து தூங்கிய நாட்கள் குறைவுதான்,” என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த பங்குச் சந்தை வணிகரான ஹரி.

ஹரி போன்ற பலர் சில மாதங்களுக்கு ஒருமுறை தூங்குவதற்காக மட்டுமே சுற்றுலா செல்கிறார்கள். “அப்படிச் செல்லும்போது, நான் புதிய இடங்களுக்கு செல்வதில்லை. பழக்கப்பட்ட மலை அல்லது கடல் சார்ந்த பகுதிகளுக்கே செல்வேன். அங்கு செல்லும்போது, எனது வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, 2-3 நாட்கள் ஓய்வெடுப்பேன்,” என்று விளக்குகிறார் அவர்.

உலகளாவிய போக்காக மாறும் ஸ்லீப் டூரிஸம்

இளம் தலைமுறையினர் மற்றும் உயர்நடுத்தர வர்க்கத்தினருக்கான ஒரு சிறிய போக்கு என நினைக்கலாம். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த 105 ஆண்டுகள் பழமையான ‘ஹில்டன்’ நிறுவனத்தின் ஆய்வு, இது உலகளாவிய போக்காக மாறிவருவதைச் சுட்டிக்காட்டுகிறது.

உலகின் பல பாகங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி:

  • ஜென் ஸி (1997-2012 காலத்தில் பிறந்தவர்கள்) தலைமுறையில் 55% பேர்
  • மில்லனியல் (1981-1996) தலைமுறையில் 60% பேர்
  • ஜென் எக்ஸ் (1965-1980) தலைமுறையில் 68% பேர்
  • பேபி பூமர்ஸ் (1946-1964) தலைமுறையில் 67% பேர்

தூங்குவது மற்றும் ஓய்வெடுப்பதற்காக மட்டுமே சுற்றுலா செல்வதை விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனில் ஸ்கைஸ்கேனர் என்ற பயண வலைதளத்தின் தகவலின்படி, பிரிட்டன் சுற்றுலாப் பயணிகளில் 33% பேர் தங்கள் விடுமுறைத் திட்டத்தில் தூக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள்.

கோடிக்கணக்கில் வளரும் ஸ்லீப் டூரிஸம் சந்தை

கிரெடென்ஸ் ரிசர்ச் அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டில் ஸ்லீப் டூரிஸம் சந்தை தோராயமாக 70.14 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 6.13 லட்சம் கோடிகள்) என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2032ஆம் ஆண்டில் 127.91 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 11.18 லட்சம் கோடிகள்) எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

See also  யார் இந்த பகளா முகி? - இந்த தேவிக்கும் விக்ரமாதித்தனுக்கும் என்ன சம்பந்தம்..

இத்தகைய போக்கை கவனத்தில் கொண்டு, சுற்றுலாத் துறையில் பல நிறுவனங்கள் தங்கள் வசதிகளை மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளன. யோகா, நீச்சல் பயிற்சி, ஸ்பா, ஆரோக்கியமான உணவுகள் போன்ற வசதிகளுடன், நகரங்களிலிருந்து தொலைவில், இயற்கைச் சூழலில் அமைந்த விடுதிகள் அதிகரித்து வருகின்றன.

“நகர வாழ்க்கையில் இருந்து ஒரு பிரேக்”

மும்பையைச் சேர்ந்த ஜோதி ஷிங்கே, தற்போது உத்தராகண்ட் மாநிலத்தில், கடல்மட்டத்திலிருந்து 2,118 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சக்ரதா எனும் மலை கிராமத்தில், சொந்தமாக ஒரு தங்கும் விடுதி மற்றும் கஃபே நடத்தி வருகிறார்.

“தன்னுடைய விடுதிக்கு வரும் வாடிக்கையாளர்கள் பலரும் இயற்கைச் சூழலில் நிம்மதியாக ஓய்வெடுக்கவே வருகிறார்கள். மருத்துவர்கள், ஆசிரியர்கள், தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் என பலரும் குடும்பத்துடன், நண்பர்களுடன், நகர வாழ்க்கையிலிருந்து ஒரு ‘பிரேக்’ எடுத்துக்கொள்ள வருகிறார்கள்,” என்று விளக்குகிறார் ஜோதி.

ஜோதியின் விடுதியில் ‘வை-ஃபை’ இணைய வசதி கிடையாது. “இங்கு வருபவர்கள், இணைய உலகிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்ற மனநிலையோடு வருகிறார்கள். வை-ஃபை இல்லாத காரணத்தால், ஸ்மார்ட்போன் பார்ப்பது குறைந்து, அவர்கள் உண்மையான ஓய்வை அனுபவிக்கிறார்கள். அருகில் இருக்கும் காடுகள், நீர்வீழ்ச்சிகள் என எல்லாம் சேர்ந்து ஒருவித புத்துணர்ச்சியை அளிக்கிறது,” என்கிறார்.

“சுற்றுலா தொடர்பான மக்களின் ரசனை மாறிவருகிறது. குறைவான மனிதர்கள் இருக்கும் இடத்தையே பலரும் விரும்புகிறார்கள். அத்தகைய வாடிக்கையாளர்களை மனதில் வைத்துதான், மணாலி, ஷிம்லா, போன்ற பிரபல சுற்றுலா தலங்களில் விடுதி தொடங்காமல், இந்த சிறிய மலை கிராமத்தில் தொடங்கினேன்,” என்று கூறுகிறார்.

ஸ்லீப் டூரிஸம் ஆரோக்கியமானதா? மருத்துவர்கள் கருத்து

“நகரங்களில் இருக்கும் இரைச்சல், அன்றாட பரபரப்பிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க இதை பலர் விரும்பலாம். ஆனால், நீண்ட கால நோக்கில் பார்க்கும்போது நிச்சயமாக நல்லதல்ல,” என்கிறார் மனநல மருத்துவரும், சென்னை கீழ்பாக்கம் மனநல மையத்தின் முன்னாள் இயக்குநருமான பூர்ண சந்திரிகா.

அவரது கருத்துப்படி, 7 முதல் 8 மணிநேர தூக்கம் என்பது ஒரு தினசரி வழக்கமாகவே இருக்க வேண்டுமே தவிர, அதற்காக சேர்த்து வைத்து வார இறுதியில் அல்லது விடுமுறை நாட்களில் அல்லது சுற்றுலா சென்று தூங்குவது உடலுக்கு நல்லதல்ல

“பலரும் நினைப்பது நேற்று 3 மணிநேரம் தூங்கிவிட்டு, இன்று 10 மணிநேரம் தூங்கினால் சரியாகிவிடும் என்று. ஆனால் மனித உடல் அப்படி இயங்குவதில்லை. தினசரி முறையாக தூங்குவதற்கான வழிகளை ஆராய வேண்டும். முடியவில்லை என்றால் மருத்துவரை அணுகலாம்,” என்று எச்சரிக்கிறார் மருத்துவர் பூர்ண சந்திரிகா

இந்தியர்களின் தூக்கப் பழக்கங்கள்: ஆய்வு முடிவுகள்

2019இல், ‘இந்தியன் ஜர்னல் ஆப் ஸ்லீப் மெடிசினில்’ வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி:

  • இந்தியாவின் நகர்ப்புற மக்கள்தொகையில் 64% பேர் காலை 7 மணிக்கு முன்பே எழுந்திருக்கிறார்கள்
  • 61% இந்தியர்கள் ஒரு நாளைக்கு 7 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்குகிறார்கள்
  • 31–50 வயதுக்குட்பட்டவர்களில் தூக்கமின்மை அதிகமாக (47.91%) காணப்படுகிறது
  • 16–30 வயதுக்குட்பட்டவர்களில் இந்த விகிதம் 31.66% என்ற அளவில் உள்ளது
See also  Dollar Surges: Billions in Cash Hit the Table Amid Market Fears

இந்திய இளைஞர்களிடையே அதிகரித்துவரும் நாள்பட்ட தூக்கமின்மைக்கு பின்வரும் காரணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன:

  • நவீன வாழ்க்கை முறை
  • முறையற்ற தூக்க சுழற்சி
  • பல்வேறு நோய்கள்
  • ஷிஃப்ட் முறையிலான வேலை மற்றும் அடிக்கடி பயணம்
  • குறட்டை போன்ற தூக்கக் கோளாறுகள்
  • மருந்துகள் மற்றும் குழந்தை வளர்ப்பு

ஒய்வு தேவை, ஆனால் சீரான தூக்கமே சிறந்தது

நகர வாழ்க்கையின் பரபரப்பிலிருந்து தற்காலிக ஓய்வுக்காக ஸ்லீப் டூரிஸம் உதவலாம். ஆனால் மருத்துவர்கள் கருத்துப்படி, தினசரி சீரான தூக்கப் பழக்கத்திற்கு மாற்றாக இதைக் கருத முடியாது.

நாள்பட்ட தூக்கமின்மை உடல் மற்றும் மனநலத்தில் பல தீவிரமான பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே தூங்குவதற்காக சுற்றுலா செல்வது ஒரு தற்காலிக தீர்வாக மட்டுமே இருக்க முடியும், நிரந்தர தீர்வாக இருக்க முடியாது.

அன்றாட வாழ்வில் சீரான தூக்கப் பழக்கத்தை வளர்த்துக்கொள்வதே, உடல் ஆரோக்கியத்திற்கும் மன ஆரோக்கியத்திற்கும் சிறந்தது என மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

About the Author

Vishnu

Editor

View All Posts
Tags: Health Lifestyle mental wellness sleep tourism Travel ஆரோக்கியம் சுற்றுலா தூக்கம் மனநலம் வாழ்க்கை முறை ஸ்லீப் டூரிஸம்

Post navigation

Previous: மொழிக் காக்கும் போராட்டங்கள்: தமிழ்நாடு மட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும் நடந்த வரலாற்று போராட்டங்கள் என்ன?
Next: மகளிர் தினம்: தொழிலாளர் போராட்டத்தின் உன்னத வரலாற்றை அறிவோமா?

Related Stories

Manifesting
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

Deepan November 13, 2025
ens
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

Vishnu August 30, 2025
fg
  • சுவாரசிய தகவல்கள்
  • சிறப்பு கட்டுரை

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

Vishnu August 22, 2025

Motivation

Untitled-1-thum
  • Tamil Motivation Videos
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

பல்லாங்குழி: நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அறிவுக் களஞ்சியமா?

Vishnu September 11, 2024
idQK7Buuk8Q-HQ
  • Tamil Motivation Videos

தோல்வி தடைகளை உடைத்தெறிவது எப்படி?

Brindha August 6, 2023
GoMD6uHHGYo-HQ
  • Tamil Motivation Videos

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

Brindha August 6, 2023
mS70MkocDlE-HQ
  • Tamil Motivation Videos

21 நாட்களும் அதன் இரகசியமும்

Brindha August 6, 2023
4i8Iz_Hfk5I-HQ
  • Tamil Motivation Videos

வேண்டிய நேரத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா? 

Brindha August 6, 2023

Mystery

rg
  • மர்மங்கள்

ஒரு பெண்ணுக்குள் இப்படியொரு மின்சார சக்தியா? விஞ்ஞான உலகையே மிரள வைத்த 14 வயது சிறுமியின் அமானுஷ்ய கதை!

Vishnu July 28, 2025
5
  • மர்மங்கள்

சென்னையின் இந்த 5 இடங்களுக்கு தனியாக செல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா? ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் திகில் ஸ்பாட்ஸ்!

Vishnu July 23, 2025
Black-Holes
  • மர்மங்கள்

கருந்துளையின் மையம் ‘சிங்குலாரிட்டி’: இயற்பியல் விதிகள் உடையும் பிரபஞ்சத்தின் விசித்திரமான இடம்!

Vishnu June 21, 2025
je
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025
mar
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025
11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்! Manifesting 1
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

November 13, 2025
எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை ens 2
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

August 30, 2025
விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா? vi 3
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

August 25, 2025
விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன? vijay 4
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

August 22, 2025
மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்! fg 5
  • சுவாரசிய தகவல்கள்
  • சிறப்பு கட்டுரை

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

August 22, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram

You may have missed

Manifesting
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

Deepan November 13, 2025
ens
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

Vishnu August 30, 2025
vi
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

Vishnu August 25, 2025
vijay
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

Vishnu August 22, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil Copyright © All rights reserved. | MoreNews by AF themes.