• November 14, 2024

About Us – Deep Talks Tamil

தமிழுக்கும் தமிழர்களுக்கும் வணக்கம்

தமிழோடு பிறந்து, தமிழால் பிழைத்து,
தமிழுடன் வளர்ந்து, வாழ்ந்துகொண்டிருக்கும் Deep Talks Tamil.

இந்த வலைத்தளம் எங்களுடைய நீண்ட நாள் ஒரு கனவு. அந்த கனவிற்கான பாதையை உருவாக்க, கொரோனா காலம் கொஞ்சம் உதவியது. Work From Home எனப்படும், வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளை செய்துகொண்டே,
கனவிற்கான பாதையை வடிவமைத்தோம்.

இந்த வலைத்தளம்
ஒரு குழந்தை தான்.
இதன் அன்னை
Deep Talks Tamil – YouTube
பக்கமாகும்.

துவக்கம்

23 ஆண்டுகளுக்கு பிறகு, தஞ்சை பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கு நடைபெற்ற நாளான பிப்ரவரி 5, 2020 அன்று YouTube பக்கத்தை ஆரம்பித்தோம். எங்களுடைய முதல் பதிவே, சங்க தமிழ்நாட்டின் பொற்கால ஆட்சி புரிந்த ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயில் பற்றியதுதான்.

ஆரம்பித்த போது சரியாக கிடைக்காத வரவேற்பு, 5 மாதங்களுக்கு பிறகு
படிப்படியாக முன்னேற ஆரம்பித்தது.

தமிழ் பற்றியும், சங்ககால தமிழர்கள் பற்றியும், சுயமுன்னேற்ற மற்றும் தன்னம்பிக்கை வளர்க்கும் பல பதிவுகளை தொடர்ந்து பதிவேற்றம் செய்து 50,000 Subscribers (12.07.2020 ) பெற்றோம்.

என் கனவின் தொடர் உந்துதலால் 20.07.2020 அன்று YouTube பக்கத்தின் வழியாக அந்த 50,000 மக்களின் முன்னிலையில் www.deeptalks.in வலைத்தளத்தை ஆரம்பித்தேன்.

நோக்கம்

எங்களுடைய தனிப்பட்ட பங்களிப்பு மற்றும் கருத்துக்கள் மட்டும் இல்லாமல், திறமையான பல நண்பர்களின் கவிதைகளும், கட்டுரைகளும், ஆய்வுகளும், சிறப்பு கட்டுரைகளும் அவர்களின் அனுமதியோடு இந்த வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய www.deeptalks.in உதவுகிறது. உங்கள் படைப்புக்களை எங்களுக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யுங்கள்!


உள்ளடக்கம்

  • தமிழ் கவிதைகள்
  • தன்னம்பிக்கை தொடர்கள்
  • தமிழ்மொழி ஆய்வுகள்
  • சிறப்பு கட்டுரைகள்
  • தெரியாத மற்றும் இதுவரை நீங்கள் அறியாத தகவல்கள் – என பல்சுவை தளமாக இந்த வலைத்தளம் இருக்கிறது.

YouTube Channel