800 ஆண்டுகள் பழமையான மனிதனின் உடல் கண்டுபிடிப்பு !!!
உலகெங்கிலும் பல்வேறு இடங்களில் தொல்பொருள் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 800 ஆண்டுகள் பழமையான உடல் ஒன்றை பெரு நாட்டில் தொல்லியல் வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த 800 ஆண்டுகள் பழமையான மனிதரின் உடலை வைத்து பார்க்கும்போது இந்த மனிதன் தென் அமெரிக்காவின் ஏதோ ஒரு நாட்டில் வாழ்ந்து இருக்ககூடும் என கணிக்கின்றனர். இந்த உடல் ஒரு ஆணின் உடலா அல்ல பெண்ணின் உடலா என்பதை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
பெரு நாட்டில் உள்ள லீமா பகுதியில் இந்த 800 ஆண்டுகள் பழமையான உடலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் இந்த உடலைப் பார்க்கும் போது இந்த உடல் கை கால்கள் கட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த உடல் தனது கைகளை வைத்து முகத்தை மூடி கொண்டவாறு கட்டப்பட்டிருந்தது.
பெரு நாட்டில் மச்சுபிச்சு மலைகள் இருப்பதால் அங்கு ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னரே மனிதர்களும் நாகரிகமும் இருந்திருக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கணிக்கின்றனர். அதனாலேயே அந்த பகுதியில் தொல்லியல் வல்லுனர்கள் அதிகளவில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த உடலை மேலும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தி இன்னும் நிறைய தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் கொடுப்பார்கள் என தெரிகிறது. தற்போது செய்யப்பட்டுள்ள ஆராய்ச்சிகளை வைத்து பார்க்கும் போது இன்கா எனும் ராஜ்ஜியம் 500 ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்காவில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது.
ஆனால் 800 ஆண்டுகள் பழமையான இந்த உடல் இன்கா ராஜ்ஜியத்திற்கு முன்னரே இங்கு மக்கள் நடமாட்டம் இருந்துள்ளதை உறுதிசெய்துள்ளது. இந்த உடல் கண்டறியப்பட்ட சக்லா மலைப்பகுதியில் ஆதி சமூகத்தை சார்ந்தவர்கள் இறந்தவர்களின் உடலை கயிறு கட்டி புதைப்பதை கலாச்சாரமாக பின்பற்றி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரு நாட்டில் கண்டறியப்பட்ட 800 ஆண்டுகள் பழமையான அந்த உடலை கீழே உள்ள படத்தில் காணுங்கள்.
இதுபோன்ற தகவல்களுக்கு தீப் டாக்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.