3 லட்சம் டிப்ஸ் வாங்கிய Hotel Waiter-ஐ பணிநீக்கம் செய்த உணவகம் !!

அமெரிக்காவில் உள்ள ஆர்கன்சாஸில் உள்ள ஒரு பணிப்பெண், மற்ற உணவக ஊழியர்களுடன் வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து பெற்ற $4,400 (ரூ. 3,33,490) டிப்ஸைப் பகிராததால் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
உணவக பணியாள், ரியான் பிராண்டுக்கு ஒரு பணக்கார வாடிக்கையாளர் கிராண்ட் வைஸால் பெரிய அளவிலான tips-ஐ கொடுத்தார். சக ஊழியர்களுடன் டிப்ஸைப் பிரிக்கும்படி பிராண்டிடம் அந்த பணக்காரர் கூறினார்.

கொரோனா பெருந்தொற்றின் போது கடுமையாக பாதிக்கப்பட்ட உணவாக ஊழியர்களுக்கு பரிசாக £ 75 (ரூ. 7,519) உதவித்தொகையை அனைவருக்கும் நன்கொடையாக வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வாடிக்கையாளர் கிராண்ட் வைஸால் சுமார் 40 விருந்தினர்களுடன் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
விருந்து முடிந்த பின்னர், தான் கொடுக்க வேண்டும் என்று நினைத்த உதவித்தொகையை மொத்தமாக ரியான் பிராண்ட் எனும் பணியாளிடம் கொடுத்துள்ளார். சக ஊழியர்களுக்கு அந்த பணம் சம பங்காக கொடுக்கபட்டதா என உணவகத்திற்கு அழைத்து கிராண்ட் கேட்டுள்ளார்.
அந்த டிப்ஸ் தொகையை கிராண்ட் பகிர சொன்னதாக தங்களிடம் ரியான் கூறவில்லை என உணவக நிர்வாகம் தெரிவித்தது. டிப்ஸ் குறித்த எந்த ஒரு தகவலையும் நிர்வாகத்திடம் சொல்லாததற்கும், கிராண்ட் கேட்டுக்கொண்டபடி டிப்ஸை சக ஊழியர்களுடன் பகிராததற்கும் ரியானை உணவக நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.
கிராண்ட் கொடுத்த மொத்த தொகையையும் வைத்து தனது படிப்பு கடனை செலுத்த திட்டமிட்டுள்ளதாக ரியான் கூறியுள்ளார். ரியான்-ஐ பணி நீக்கம் செய்வதற்கு முன் அவரிடம் இருந்த டிப்ஸ் தொகையை உணவகம் பெற்றுக்கொண்டது.

இந்த சம்பவத்தை அறிந்த கிராண்ட் உணவக நிர்வாகத்திடமிருந்து தனது டிப்ஸ்-ஐ திரும்பப் பெற்று ரியானுக்கு அவரின் படிப்பு கடனை செலுத்த அந்த தொகையை கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தை கிராண்ட் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
- 1999-க்குப் பின்னர் இந்திய அளவில் மிக மோசமான ரயில் விபத்து இதுதான்!
- பொன்னியின் செல்வன் முழு கதை | Ponniyin Selvan Full Story
- Ponniyin Selvan Story Part 05 – பொன்னியின் செல்வன் பாகம் 5
- Ponniyin Selvan Story Part 04 – பொன்னியின் செல்வன் பாகம் 4
- Ponniyin Selvan Story Part 03 – பொன்னியின் செல்வன் பாகம் 3
ரியான் தற்போது வேறு ஒரு உணவகத்தில் பணிபுரிகிறார் எனவும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் தங்களது மாறுபட்ட கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதுபோன்ற தகவல்களுக்கு தீப் டாக்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.