
நாக வழிபாடு மிகவும் தொன்மையானது. முதலில் இயற்கை வழிபாட்டை அறிந்த மனிதன் பின்னர் ஆவி வழிபாட்டை மேற்கொண்டான். பின்னர் தனக்கு நல்வாழ்வு தரும் சக்திகளை மனிதன் பல்வேறு உருவங்களில் கண்டு அவற்றிற்குக் கோவில் எழுப்பி வழிபட்டான். இது தொடர்பான சம்பவங்கள் தான் புராணங்களாகவும் இதிகாசங்களாகவும் மலர்ந்தன. இவற்றின் அடிப்படையிலேயே பாம்பு கோவில்கள் தோன்றின.
நல்ல பாம்பு சிவனின் கழுத்தை அலங்கரிப்பதாகக் கருதி மக்கள் வழிபட்டனர். நாகதோஷம் இருந்தால் குழந்தை பிறக்காது என்று நம்பினர். இன்றும் புற்றுக்குப் பால் வார்த்து வழிபடும் வழக்கம் உள்ளது.
முதலில் பயம் காரணமாக நாகங்களை வழிபட்டவர்கள் பின்னர் அது ஏதோ ஒரு தெய்வ சக்திக்குக் கட்டுப்பாடு நடப்பதாகவும், விதி முடிந்தவரை மட்டுமே அது கடிப்பதாகவும், நம்பினார்கள்.
நாளடைவில் அனைத்து விலங்கு வழிபாட்டு முறைகளிலும் பாம்பு வழிபாட்டிற்கு எனத் தனி முக்கியத்துவம் ஏற்பட்டது. அன்று முதல் இன்று வரை பாம்பு வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாம்பு வழிபாடு வேறு பல நாடுகளிலும் இருந்து வந்துள்ளது. பொனீசியா, மெஸபடோமியா, கிரேக்கம், இத்தாலி, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, எகிப்து, நேபாளம் ஆகிய நாடுகளிலும் பாம்பு வழிபாடு இருந்து வருகிறது.
இந்தியாவை பொருத்த வரை இமயம் முதல் குமரி வரை பாம்பு வழிபாடு இருந்து வருகிறது. குறிப்பாகத் தென் இந்தியாவில் பாம்பு வழிபாடு அம்மன் வழிபாட்டுடன் இணைத்தே நடைபெறுகிறது. தமிழ்நாட்டிலும் பாம்பு வழிபாடு புகழ் பெற்றது. பாம்பின் பெயர்கள் கொண்ட இறைவனது பெயர்கள் பல உள்ளன. நாக ஆபரண விநாயகர், சர்ப்பபுரி ஈசுவரர், நாகநாதர், நாகேசுவரர், புற்றீசர், வன்மீக நாதர் போன்ற பெயர்கள் இறைவனுக்கு வழங்கப்படுகின்றன.

அதே போல் நாகத்தின் பெயர் கொண்ட தலங்கள் பல உள்ளன. நாகர்கோவில், நாகபட்டினம், நாகமலை, ஆலவாய், கோடநல்லூர், திருப்பாம்புரம், பாம்பணி, காளத்தி போன்ற பெயர்கள் பாம்பின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டவை.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Discover Crime SeriesRajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Now
பாம்பின் பெயர்களோடு பொருந்தி இருக்குமாறு பெயர் வைக்கும் பழக்கமும் தமிழ் மக்களிடம் உள்ளது. நாகராஜன், நாகப்பன், நாகமணி, நாகரத்தினம், நாகபூஷணம், நாகார்ஜுனன், நாகநாதன், நாகலட்சுமி, நாகம்மை, நாகலிங்கம், நாககுமாரி, நாகநந்தினி போன்ற பெயர்கள் குறிப்பிடத்தக்கவை. கருவுற்ற பெண் நாகம் ஒன்றைப் பார்த்து விட்டால் அவள் பெற்றெடுத்த குழந்தைக்கு நாகத்தின் பெயரோடு பொருந்தி வருமாறு பெயர் வைப்பது நாட்டுப்புற வழக்கமாகும்.
பழங்காலத்தில் நாகர் என்ற இனத்தவர் இருந்தனர். இவர்களில் தீவுகளில் வாழ்ந்தனர். இவர்கள் தலையில் ஐந்து தலைநாகம் போல் அமைந்த குடைபோன்ற அமைப்பைச் சூடியிருந்தனர். கைகளிலும் நாகப்படம் பொறித்த வளையங்களை அணிந்திருந்தனர்.

கருவுற்று, மழைநீரால் நனைந்தும், இடருற்ற தவளைக்கு, படமெடுத்த நல்ல பாம்பு குடைபிடித்த புனித இடம் சிருங்கேரி. அந்தக் காட்சியைக் கண்ட ஆதிசங்கரர் அங்கே சாரதா பீடத்தை நிறுவினார். அதேபோல மதுரைக்கு எல்லை வரைந்தது மற்றொரு பாம்பு. இதனால் மதுரைக்கு ஆலவாய் என்ற பெயர் உண்டானது. இவ்வாறு பாம்பு வழிபாடு பழமை வாய்ந்த வழிபாடாகத் திகழ்கிறது.
பாம்பு உடம்பிற்குள் வாழும் சித்தர்கள்
நாம் நாகத்தை பாம்பாக மட்டுமே பார்க்கிறோம். ஆனால் நமது பண்டைய கால ஞானிகள் பாம்பு வடிவத்தை மூலாதார சக்கரத்தில் உறங்கி கொண்டிருக்கும் குண்டலினி சக்தியாக பார்த்தார்கள். புற்றுக்குள் இருக்கும் பாம்பு சீண்டி விட்டால் சீறிக் கொண்டு எப்படி கிளம்புமோ அதே போலவே யோக பயிற்சியால் சீண்டப்படும் குண்டிலினி தண்டுவடத்தை பற்றிக் கொண்டு சரசரவென பிரம்ம கபாலத்தை நோக்கி எழும்பும் என்று சொன்னார்கள். இதனால் தான் கடவுள்களின் உருவத்தோடு நாகத்தை சம்பந்தப்படுத்தினார்கள்.பரந்தாமனின் பாம்பு படுக்கை பரமசிவனின் பாம்மனி எல்லாமே குண்டலினி தத்துவத்தை விளக்க எழுந்ததேயாகும்.

இந்திய துணைக்கண்டம் முழுவதுமே ஆதிகாலம் தொட்டே நாக வழிபாடு, இருந்து வருகிறது. சைவம், வைஸ்ணவம், பௌத்தம், ஜைனம் போன்ற மதங்கள் வளர்ச்சி அடைந்த காலத்தில் அந்தந்த சமயத்தின் சாயல்களை கொண்டு இந்திய துணைக் கண்டம் முழுவதுமே நாக வழிபாடு விரிவடைந்தன என சொல்லலாம். திருமாலும் சிவபெருமானும் மட்டுமே நாகங்களை துணையாக கொள்ளவில்லை. பல புத்தர் சிலைகளை பார்க்கும் போதும் மகாவீரரின் சில தோற்ற கோலங்களை காணும் போதும் ஐந்து தலை நாகம் அவர்களுக்கு குடைபிடித்து இருப்பது தெரிகிறது.
சிந்து சமவெளி நாகரிக காலத்திலும் அதற்கு முன்னரும் கூட நாகங்களை மக்கள் வழிபட்டு இருக்க வேண்டும். ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு முத்திரைகளில் வழிபாட்டுக்குரிய நாகங்கள் செதுக்கப்பட்டிருப்பதை வைத்து நாம் இந்த முடிவுக்கு வரலாம்.
வேதங்களின் பாம்புகள்
வேதகால மக்கள் பாம்புகளை “அஹீ” என்ற பெயரில் அழைத்திருக்கிறார்கள். ரிக், சாம வேதங்களில் வணக்கத்துக்றியதாக பாம்புகள் சொல்லப்படவில்லை. ஆனால் யஜூர் வேதம் பாம்புகளை தெய்வ நிலையோடு ஒப்பிட்டு பேசுகிறது. யஜூர் வேதம் பாஞ்சால நாடுகளில் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும்.
பழங்கால பாஞ்சல தேசத்திடில் தலைநகரம் அஹீசத்திரமாகும். அதாவது இதன் பொருள் பாம்புகளின் வீடு என்று சொல்லலாம். இந்த தேசத்தின் மன்னர்களாக விளங்கிய அக்னிமித்திரன், பானு மித்திரன் ஆகியோர்களின் காலத்து நாணயங்களில் பாம்பு முத்திரை பொறிக்கபட்டுள்ளது. அதர்வண வேதத்தின் சில பகுதிகளில் பாம்புகளை தாந்திரிக நெறிக்கு பயன்படுத்தும் விபரங்கள் உள்ளன.
நாக வழிபாடு பற்றி நித்தேஷ என்னும் பௌத்த நூலும் பேசுகிறது. அதில் சர்ஜீகோணோவில் உள்ள பகவா நாகோ என்ற வழிபாட்டுக்குரிய நாகத்தை பற்றி விளக்கங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. குஷான மன்னர்களின் காலத்தில் இந்த நாக வடிவம் சிலை வடிவாக உருவாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
மதுராவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் கனிஷ்க மன்னனால் செதுக்கி வைக்கப்பட்ட நாக வடிவம் இன்றும் இருக்கிறது. கடவுளின் பிரதிநிதியாக கருதப்பட்ட நாகங்கள் காலப் போக்கில் இறந்தவர்களின் ஆவியோடு தொடர்பு படுத்தப் பட்டும் புதையல்களை மர்மமான முறையில் பாதுகாக்கப்படுகின்றன என்றும் நம்பிக்கை ஏற்பட்டது.
பாம்புகளை பொறுத்த வரை எல்லா மதத்தினரும் அறிவு பூர்வமாகவும், மூடத்தனமாகவும் நம்பினர் என்றே சொல்ல வேண்டும். பண்டைய கால சிற்பங்களும், ஓவியங்களும், நாகர்களும், நாக கன்னிகளும் காட்டப்படுகிறார்கள். இவர்கள் பாதி மனித உருவம், பாதி பாம்பு வடிவமும் பெற்றவர்கள்.
பாலித்தீவில் நாக கன்னிகை மழை கடவுளான வருண தேவனின் பனிப்பெண்ணாக கருதுகிறார்கள். மகாபாரதத்தில் அனுசாய பருவத்தில் நாகத்தை வழிபடுவதன் மூலம் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான வராக அவதாரத்தின் பலத்தை பெறலாம் என்று சொல்லப்படுகிறது.
இதனாலேயே பிற்காலத்தில் உருவான வராக சிற்பத்தில் காலுக்கடியில் பாம்பு செதுக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் தனிப்பெரும் வாழ்க்கை முறையை விவரிக்கும் சங்க இலக்கியங்களில் நாக வழிபாடு சிறப்பாக கூறப்பட்டுள்ளதை காணலாம். பொதுவாக பாம்புகளை வழிபடுவது இந்து மதத்தில் உள்ள யோக சார மார்க்கத்தின் வழிபாட்டு முறையேயாகும். ஆனால் அந்த உண்மை நிலை மறைந்து இன்று கிராம தேவதைகளின் பட்டியலில் நாக தேவதைகள் சேர்ந்து விட்டன.
இதற்கு முக்கிய காரணம் இறந்தவர்களின் ஆன்மா பாம்பு வடிவத்தில் உலாவுவதாக உள்ள நம்பிக்கையே ஆகும் நல்லப்பாம்பு என்ற நாகத்தை வீணாக சாகடிக்க கூடாது என்று சொல்வதில் பல அமானுஷ்ய உண்மைகள் உண்டு சித்தர்கள் பரகாய பிரவேசம் என்ற கூடுவிட்டு கூடுபாயும் வித்தை தெரிந்தவர்கள் என நமக்குத் தெரியும். மனித ஆத்மாவானது மனித சரீரத்தை தவிற காக்கை மற்றும் நாகப்பாம்பின் உடல்களில் சுலபமாக பிரவேசிக்கலாம் என்று சித்தர்களின் ரகஸிய சித்தாந்தங்கள் சொல்கின்றன.
இதனால் தவ வாழ்வை எந்தத் தொந்தரவும் இல்லாமல் கழிக்க பாம்பின் உடல்களை தேர்ந்தெடுத்து பல சித்தர்கள் வாழலாம் நாம் தெரியாத்தனமாக சர்ப்பங்களை சாகடித்தால் அவர்களின் தவத்தைக் கலைத்த பாவத்திற்கு ஆளாவோம் எனவேத்தான் பாம்புகளை சாகடிக்க வேண்டாமென முன்னோர்கள் சொன்னார்கள்.