• September 10, 2024

சஞ்சீவி மூலிகை ரகசியம் என்ன?

 சஞ்சீவி மூலிகை ரகசியம் என்ன?

“உடலை கிழித்து சஞ்சிவினி மூலிகையை உள்ளே வைத்து தைத்துவிட்டால், நமக்கு இறப்பே கிடையாது. நமக்கு சாவே வராது” என ஒரு நம்பிக்கை நம் மக்களிடையே இருக்கிறது. இது நம்பிக்கையா? மூடநம்பிக்கையா? என்று உங்களை நான் குழப்பாமல், இது உண்மை என்று தான் இந்த பதிவில் சொல்லப்போகிறேன். சஞ்சீவி மூலிகை ரகசியம் என்ன?

இராமாயணத்தில், லட்சுமணன் உயிரை காப்பாற்ற, ஆஞ்சநேயர் சஞ்சிவினி மலையில் இருந்து சஞ்சீவினி மூலிகை கொண்டு வந்து, அவரின் உயிரை காப்பாற்றுவது போல் சொல்லப்பட்டிருக்கும். இந்தியாவின் முக்கிய இதிகாசமான இராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கும் இந்த சஞ்சீவி மூலிகை இருப்பது உண்மையா என்றும்? இந்த பெயரை வைத்துக்கொண்டு செய்யப்படும் மோசடி என்னென்ன? என்பதையும் தெரிந்துகொள்வோம்!

Sanjeevi Mooligai – Ramayanam

சஞ்சீவினி மூலிகை புகழ் பெற காரணமே ராமாயணம் தான். ராமாயணத்தில் லட்சுமண் அவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்றால், சஞ்சிவினி மலையில் இருக்கும் சஞ்சீவினி மூலிகையால் தான் முடியும் என சொல்ல, அவர் அந்த மூலிகை எது என்று தெரியாமல், மலையையே பெயர்த்து எடுத்துவந்து, லட்சுமண் உயிரை காப்பாற்றுவார் ஹனுமான்.

இராமாயணத்தில் சொல்லப்படும் இடங்களும், அதில் வரும் கதாபாத்திரமும் உண்மையா? என்பது கடந்த சில ஆண்டுகளாக ஆராய்ச்சியில் இருக்கும் பட்சத்தில், இதில் வரும் சஞ்சீவினி மூலிகையும் உண்மையா என்ற ஆராய்ச்சியும் ஒரு பக்கம் நடைபெற்றது. அதில் 2009-ல் இராமாயணத்தில் சொல்லப்பட்ட சஞ்சீவி மூலிகை உண்மையா என்றும், அது எங்கே இருக்கிறது என்றும் ஆராய்ச்சி செய்யப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில், பல்வேறு மூலிகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் சஞ்சீவி மூலிகை மட்டும் கண்டுபிடிக்கப்படவில்லை.

https://www.researchgate.net/publication/237568098_In_search_of_Sanjeevani

ஆக அறிவியல் ரீதியில் கண்டுபிடிக்கமுடியாத மூலிகையாக சஞ்சீவி மூலிகை இருக்கும்பட்சத்தில் சஞ்சீவி வேர் என்று ஒன்று இணையதளத்தில் உலாவி வருகிறது. அதாவது இந்த வேறானது நீருக்கு எதிர்த்திசையில் செல்லும் என்றும், இந்த வேரை வைத்து இருப்பையும் உடைக்கலாம் என்றும் சதுரங்க வேட்டை படப்பாணியில் மக்களை ஏமாற்றுபவர்களும் இங்கு உண்டு.

இப்படி ஒரு மூலிகையை இல்லாதபட்சத்தில் எப்படி இதைப்பற்றி நம் சித்தர்கள் “உடலை கிழித்து சஞ்சிவினி மூலிகையை உள்ளே வைத்து தைத்துவிட்டால், நமக்கு இறப்பே கிடையாது என்று சொன்னார்கள். இதற்கு பின் இருக்கும் உண்மையான உண்மை என்ன தெரியுமா?

சஞ்சீவி என்று நம் சித்தர்களும், முன்னோர்கள் சொன்னது காற்றை தான். இந்த காற்றான சஞ்சீவினியை, யார் முறையாக பயன்படுத்திகிறார்களோ அவர்களுக்கு ஜீவன் அழியாது. உடல் சமாதியானாலும் ஜீவசமாதியாக இருப்பார்கள் என்பதே சித்தர்களின் ரகசியம். இதை தான் சிவானந்தர் சுவாமிகள் மறைபொருளாக, சஞ்சீவியை உள்ளே வைத்து அடைத்தால் உயிர் போகாது என்று கூறினார். அதாவது நிலையான மூச்சின் பக்குவத்திலே, திருமூச்சு சித்திக்கும், அந்த திரு மூச்சே சஞ்சிவி. அதுவே சிரஞ்சியாய் வாழ வைக்கும் என அவர் கூறினார்.

இந்த உடலினுள் காற்று உள்ள வரை தான் மரியாதை.
அதன் பின் இந்த உடல் மண்ணுக்கான உணவு.

ஆக ஜீவ சஞ்சிவியான காற்றை நாம் முறையாக பயன்படுத்தினால் அழியாத சிரஞ்சீவியாக வாழலாம் என திருமூலரும் கூறியுள்ளார். இதை மூளை இல்லாதவர்கள் புரிந்துகொண்டதால் தான் இது இன்று மூலிகை ஆகிவிட்டது. ஆக சஞ்சிவி என்பது காற்று – சிரஞ்சிவி என்பது உயிர். இதைத்தான் சித்தர்கள் சஞ்சிவி உள்ளவரை யாவரும் சிரஞ்சிவியாக வாழலாம் என கூறினார்கள். சஞ்சிவி ஏன் மூலிகை ஆனது என்ற கேள்விக்கும் பதில் சொல்கிறேன். சித்தர்கள் ஏன் காற்றை மறைமுகமாக சஞ்சீவி மூலிகை என்று சொன்னார்கள் தெரியுமா? அதில் ஒரு சூழ்ச்சுமம் உள்ளது.

வான மண்டலத்தில் இருந்து கிடைக்கும் காற்று, மனிதன் சுவாசிக்க ஏற்ப்புடையதல்ல. எனவே அந்த காற்றை மரம், செடி, கொடிகள் உறிஞ்சி மீண்டும் மனிதனுக்கு சுவாசிக்க உகந்த காற்றாக வெளியிடுகிறது. ஆக மரம் செடி கொடி போன்ற மூலிகைகளே, காற்றை தருவதால் காற்றும் மூலிகையானது அதாவது சஞ்சிவினி மூலிகையானது. இதையெல்லாம் விட சஞ்சிவினி மூலிகை என்பதற்கு சித்தர்களுக்கு மட்டுமே தெரிந்தே மற்றொரு ரகசியமும் ஒன்று உள்ளது.

ஒரு மூலிகையை பறிப்பதற்கு முன் செய்யவேண்டிய பார்க்கவேண்டிய பல விஷயங்கள் இருக்கிறது. சித்தர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், உயிர்ப்புள்ள ஒரு ஞாயிற்றுக்கிழமையில், பிரம்ம முகூர்த்ததில், நேத்திரம் ஜீவன் உள்ள நாளில், வளரக்கூடிய வளர்பிறை சந்திர நாளில், குரு சுக்ர ஓரையும் வரும் நாள் பார்த்து முகூர்த்தம் கனித்து பின்பு குறித்த நாளில் காப்பு கட்டி, அந்த மூலிகையை பிடுங்கும்முன்- உன் உயிர் உடலில் நிற்க- என்னும் மந்திரத்தையும் பலமுறை ஓதி, அந்த மூலிகையின் உயிர் வேரான ஆனிவேர் அறாமலும், உயிர் நீரோட்டம் உள்ள வடக்கு கிளை வேர் அறாமலும். அந்த மூலிகைமேல் எவ்வித ஆயுதத்தால் பாதிக்கப்படாமல் மெல்ல எடுத்து, அந்த மூலிகை உயிர் வாடும் முன் செயலுக்கு பயன்படுத்த வேண்டும். இது பொதுவாக எல்லா மூலிகைகளும் இப்படித்தான் எடுப்பார்கள், இதில் உள்ள சூழ்ச்சுமம் என்னவென்றால் இந்த முறையில் எடுக்கப்படும் மூலிகைகள் எல்லாமே சிரஞ்சீவினி சஞ்சிவினி மூலிகைதான். இதைத்தான் சித்தர்கள் மறைமுகமாக சிரஞ்சீவி சஞ்சிவி மூலிகையே பலன் தரும் என கூறினார்கள். ஆக இவ்வாறு மூலிகை எடுத்தால்தான் அந்த மூலிகை பலன் தரும் என்று சித்தர்கள் கூறியுள்ளார்கள். இதற்கு பெயர்தான் காலம் காலமாக எல்லோரும் கூறும் சஞ்சிவினி மூலிகையாகும்.

சிரஞ்சீவி என்பது மாறாத தன்மையோடு அல்லது இளமையோடு என்பது பொருள்படும். இந்த முறை தெரியாததால் தான் இராமாயணத்தில் ஹனுமான் மலையையே பிடிங்கி வந்திருக்க வேண்டும். இதுபோல சித்தர்கள் மறைமுகமாக பல விஷயங்கள் கூறியுள்ளார்கள். மூலிகையின் சஞ்சிவி பிரியும் முன் பயன்படுத்து, மனித சஞ்சிவி பிரியும் முன் பயன்பெறு, பயன்கொடு என்றும், தர்ம கர்ம முறை மாறினால் சஞ்சிவி மாறும், மறு பிறவிக்கு… சூழ்ச்சியை சூழ்ச்சியால் அறிவது போல வாசியை வாசியால் அடக்க, சிரஞ்சிவி ஆவாய் என நிறைய பொருள் விளங்க சித்தர்கள் கூறியுள்ளார்கள். மேலும் சஞ்சிவினி என்பது ஒரு உயிர் வாழ உதவும் தன்மையை சுட்டி காட்டும் பெயராகும். திருக்குறளும் உயிர்ப்புள்ள சஞ்சீவி தன்மை பெற்றதே, மூத்தோரின் பல மொழிகள் இன்றும் உதவக்கூடிய வார்த்தைகளாக இருக்கின்றன, அவை யாவுமே சஞ்சிவிதான்.

இந்த உலகில் சாகாவரம் பெற்ற அனைத்துமே சஞ்சீவி என்று தான் சொல்லுவார்கள். சஞ்சீவி என்றால் மரணமில்லாதது என்று பொருள். அதேபோல் ஒரு உயிரை காபந்து பண்ணக்கூடிய யாவும், அதாவது காப்பாற்ற கூடிய யாவும் சஞ்சீவி என்று தான் சொல்லப்படும். இந்த உலகில் உள்ள பஞ்ச பூதங்கள் ஐந்தும் சஞ்சீவி தான். ஆக சஞ்சீவி என்பது காப்பாற்ற கூடிய பாதுகாப்பான ஒன்று என்பதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஆக சஞ்சீவி என்பது தனித்த ஒரு மூலிகையை மட்டும் குறிப்பது அல்ல.

உதாரணமாக பாம்பு கடித்த ஒருவருக்கு சிரியா நங்கை . பெரியா நங்கை மூலிகை சஞ்சீவி மூலிகையாகும். மண்மேல் வாழும் உயிரினங்களுக்கு காற்று இல்லை எனில் வாழ முடியாது எனவே காற்று சஞ்சீவியாகும். சூரிய கதிர்கள் இல்லாமல் எதுவும் வாழாது, வளராது, எனவே சூரியன் ஒரு சஞ்சீவியாகும்.

உணவு இல்லாமல் வாழ முடியாது, ஆக உணவும் ஒரு சஞ்சீவியாகும். இதுபோல் எந்த சூழலில் எது காப்பாற்றுமா, எது பாதுகாப்பாக இருக்குமோ, எது காபந்தாக உள்ளதோ அது அனைத்தும் சஞ்சீவிதான். மருத்துவ குணம் கொண்ட மூலிகைகள், குறிப்பாக உயிர்களின் ஆயுளை குறைக்காத மூலிகைகள் அனைத்தும் சஞ்சிவினி மூலிகைகள் தான். பாம்பிடம் கடிபட்ட கீரிபிள்ளை அருகம்புல் மேல் விழுந்து புரண்டாலே விஷம் அதன் உடலில் இருந்து இறங்கிவிடும், ஆக கீரிபிள்ளைக்கு அருகம்புல்லே சஞ்சீவினி மூலிகையாகும்.

எதையும் சூட்சமமாக சொல்லிச்செல்வதில் சித்தர்களுக்கு நிகர் சித்தர்களே!

இந்த பதிவை வீடியோவாக காண…


இதையும் படியுங்கள்..!


Watch full video in YouTube and Don’t forget to Subscribe