“தமிழர்களின் பாரம்பரிய இனிப்பு பண்டம் அதிரசம்..!”- உண்டான கதை தெரியுமா?

Adhirasam
தமிழர்களின் பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்றான அதிரசம் எப்படி பிறந்தது என்பதை நீங்கள் வரலாறு ரீதியாக ஆய்வு செய்து பார்க்கும்போது பிரமிப்பை ஏற்படுத்தும்.
அதிரசம் பற்றி கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளது என்றால் அது உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தும். உண்மையில் 16ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயரின் காலத்தில் இந்த அதிரசம் உருவாக்கப்பட்டதற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளது.

மேலும் இந்த கல்வெட்டில் அதிரசத்தை செய்வதற்கான அரிசி மாவு, வெல்லம், வெண்ணெய் மற்றும் மிளகினை கொண்டு இந்த இனிப்பினை செய்தை மிக நேர்த்தியான முறையில் தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த அதிரசத்தை தெலுங்கில் அரிசெலு என்று அழைக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் கஜாயா என்றும் இந்த அதிரசம் அழைக்கப்படுகிறது. பல தென்னிந்திய கோயில்களில் பிரசாதமாக இந்த இனிப்பு பண்டம் வழங்கப்படுகிறது.
கும்பகோணம் அருகில் உள்ள நல்லூரில் இருக்கும் பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் 6000 அதிரசங்கள் கடவுளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் தமிழர்களின் முக்கியமாக சம்பிரதாய சீர்களில் இந்த அதிரசம் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இன்றும் பல கிராமங்களில் தாய் மாமன்கள் கொடுக்கும் சீர் தட்டுகளில் அதிரசம் வைக்கப்படக்கூடிய முக்கியமான இனிப்பு பண்டமாக கருதப்படுகிறது.
இந்த அதிரசத்தை செய்வதற்கு ஒரு வாரம் முன்பே எல்லாவற்றையும் நாம் தயாராக வேண்டும். முதலில் அரிசியை நீரில் ஊறவைத்து நிழல் உலர்த்தி முக்கால் பங்கு காய்ந்த பிறகு சிறிதளவு ஈரப்பதம் இருக்கும் போதே அரிசியை பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு வெல்லத்தை நன்கு பொடியாக்கி லேசாக நீரில் கொதிக்க விட்டு வெல்லத்தை நன்கு கரைந்த பிறகு அதை அரிசி மாவோடு சேர்க்கும் போது கூடவே ஏலக்காயும் சேர்த்து மாவை கெட்டியாக கிளறி கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த கட்டியான மாவை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி அதன் மேல் ஒரு மெல்லிய வெள்ளைத் துணியால் மூடிவிட வேண்டும். பின்னர் இது புளிக்க 3 முதல் 4 நாட்கள் ஆகும்.
இந்த மாவு புளித்த பிறகு ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி இந்த மாவை உருண்டைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது உங்களுக்கு மிக நன்றாக புரிந்து இருக்கும் அதிரசம் உருவான வரலாறு பற்றி அதிரசத்தை அதிகளவு சாப்பிடுவதால் எந்த தீமையும் உடலுக்கு ஏற்படுவதில்லை மாறாத வெல்லம் சேர்த்த இனிப்பு பண்டம் என்பதால் இரும்பு சத்து அதிக அளவு நமக்கு கிடைக்கிறது.