• November 14, 2024

உங்கள் திறனை நம்புங்கள்..!” – நம்பினால் நீங்கள் தான் ராஜா..

 உங்கள் திறனை நம்புங்கள்..!” – நம்பினால் நீங்கள் தான் ராஜா..

Skill

உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து நீங்கள் உழைக்கும் போது கட்டாயம் அந்த உழைப்பு உங்களுக்கு உயர்வு கொடுத்து வெற்றியை ஏற்படுத்தித் தரும்.

உன்னிடம் ஒளிந்து இருக்கும் திறனை கண்டுபிடித்து, அதை நீ பயன்படுத்தும்போது கட்டாயம் நீ ராஜாவாகத்தான் வாழ்வாய்.

முரண்பாடான பேச்செல்லாம் வாழ்க்கைக்கு உதவாது. முன்னேற துடிப்பவனின் பேச்சிலே கண்டிப்பாக முரண்பாடு இருக்கக் கூடாது. புதிய சிந்தனைகள் அவனுக்குள் பூக்கும் போது கட்டாயம் சிறகு விரித்து பறக்க தயார் ஆவான்.

Skill
Skill

எதிலும் நிதானமாக எதையும் யோசித்து செய்யும் செயல் உங்களுக்கு தகுந்த வழியை வகுத்துக் கொடுக்கும். முன் யோசனை இன்றி செய்யும் செயலெல்லாம் பின்னால் நம்மை சிக்கலில் சிக்க வைத்து விடும்.

நடந்ததை மறந்து விட்டு நடப்ப போவதை எதார்த்தமாக எடுத்துக் கொள்ளும் போது நம் வாழ்க்கை சரியாகவும், சிறப்பாகவும் அமையும். நீ எடுத்து வைக்கும் அடி சரியாக இருந்தால் சரிவு இல்லாமல் வெற்றிகளை எளிதில் குவிக்கலாம்.

முன்னேற துடிப்பவனின் பேச்சில் முரண்பாடு இருக்காது. புதிய சிந்தனைகள் பயன்பாட்டுக்கு வரும்போது அவற்றை சரியான விதத்தில் ஆய்வு செய்து ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் இருக்க வேண்டும்.

Skill
Skill

நமது வாழ்க்கை அழகானது ஆனால் கடினமான சூழ்நிலைகள் ஏற்படுவது சகஜம் தான் இந்த சூழ்நிலைகள் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேலும் அந்த சூழலில் இருந்து நீங்கள் வெளிவரக்கூடிய திறனோடு செயல்படுவதின் மூலம் உங்களுக்கு எளிதில் முன்னேற்றம் ஏற்படும்.

பயம் நமது முதல் எதிரி என்பதை புரிந்து கொள்ளுங்கள். எதற்கும் பயப்படாமல் துணிவுடன் நீங்கள் செயல்படும் போது நம்பிக்கை உங்களுக்கு கை கொடுக்கும். இறைவனை முழுமையாக நம்புவதற்கு நீங்கள் தயாராக இருப்பது போல உங்களையும் நீங்கள் நம்ப தயாராக இருந்து விட்டால் எதற்கும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

Skill
Skill

தீர்க்க முடியாத பிரச்சனைகள் எதுவுமே இல்லை. மாற்ற முடியாத சூழ்நிலைகளும் கிடையாது. எனவே நம்பிக்கையோடு நடையிடுங்கள். உங்கள் திறன் மூலம் எல்லாவற்றிலும் நீங்கள் தனித்துவத்தோடு வெளிவருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவு உள்ளது.

எனவே எப்போதும், உங்கள் மீதும் உங்கள் திறன் மீதும் நம்பிக்கையோடு நீங்கள் நின்றால் நீங்கள் எடுக்கும் செயல்களில் கட்டாயம் வெற்றி கிடைக்கும். வெற்றி பெறுவோம் என்ற நேர்மறையான எண்ணங்களோடு நீங்கள் இருக்கும் போது, நிச்சயம் வெற்றி இலக்கை எளிதாக எட்டிப் பிடித்து விடலாம்.