“கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்லும் டைம் மெஷின்..!” – வேதம் மற்றும் சங்க கால நூல்களில் குறிப்புக்கள்..

Time Machine
டைம் மிஷின் என்பது கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் நம்மை அழைத்துச் செல்கின்ற ஒன்று என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இந்த டைம் மெஷினை தான் நமது முன்னோர்கள் கால எந்திரம் என்று அழைத்திருக்கிறார்கள்.
இந்த மிஷினின் உதவியோடு நம்மால் நிச்சயம் கடந்த காலத்தில் நடந்ததை மிக நன்றாக பார்க்க முடியும். குறிப்பாக நம் உடலுக்குள் நாம் நம்முடைய முற்பிறவிகளை ஒரு படச் சுருளை போல் சுருட்டி வைத்திருக்கிறோம் என சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கிறார்.

அந்த வகையில் இந்த கருத்துக்களை நமது இரண்டு புராணக் கதைகளும், உண்மை என்றே கூறுகிறது. அந்த வகையில் சங்க இலக்கிய நூலான சிலப்பதிகாரத்தில் ஒரு பெண் சாமி வந்து ஆடும் போது கண்ணகி மற்றும் கோவலனின் முற்பிறப்பு வரலாற்றை கூறுவதாக கூறியிருக்கிறார்கள்.
அது மட்டுமா சுந்தரரும், அப்பரும் காலத்தில் பயணம் செய்து இறந்த பையனையும், பெண்ணையும் மீட்டு வந்ததை எழுதி இருக்கிறார்கள். அது மட்டுமா? அவர்கள் இப்போது என்ன வயதோடு இருப்பார்களோ.. அந்த வளர்ந்த நிலையில் தான் திரும்பி வந்திருக்கிறார்கள் என சேக்கிழார் பாடியிருக்கிறார்.
இந்துக்களின் கூற்றுப்படி காலம் என்பது வட்ட வடிவமானது. அதில் முதலும் இல்லை முடிவும் இல்லை என்பது அவர்கள் தீர்க்கமான நம்பிக்கையாக உள்ளது. ஆனால் ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளின் கருத்துப்படி காலமானது ஒரு நேர்கோட்டில் பயணம் செய்கிறது எனக் கூறுகிறார்கள்.

எனினும் நமது முன்னோர்கள் கூறிய கூற்று உண்மை என்பதை அவர்கள் விரைவில் ஒப்புக்கொள்வார்கள். அதுமட்டுமல்லாமல் தேவர்கள் ஒளி வடிவில் இருப்பதால் தான் ஒளியின் வேகத்தில் செல்வதோடு மனோ வேகத்தில் செல்ல முடியும் என்பது இந்துக்களின் கண்டுபிடிப்பு.
அந்த வகையில் ஒளியின் வேகத்தில் ஒருவர் பயணம் செய்யும் போது அவர்களுக்கு என்றுமே 16 வயது. அதாவது நித்தியா மார்க்கண்டேயன் என்று கூறலாம். ஆனால் அந்த வேகத்தில் பயணம் செய்வது என்பது அவரவர் துணிவை பொறுத்தது.
மேலும் பகவத் கீதையில் விஸ்வரூப தரிசனத்தை அர்ஜுனனுக்கு கண்ணன் காட்டும் போது போர் நடக்கும் முன்பே எதிரிகளை கொன்று கிருஷ்ணன் வாயில் அவர்கள் புகுவதை கிருஷ்ணன் காட்டுகிறார். ஆக எதிர்காலத்தில் நடக்கப் போவதையும் நாம் காணலாம் என்பதை தான் இவை உணர்த்துகிறது.

அரியலூர் காவிரி வெள்ளத்தில் முழு ரயிலும் அடித்துச் செல்ல போவதை அறிந்து கொண்ட காஞ்சி பரமாச்சாரியார் சுவாமிகள் எம்.எஸ். சுப்புலட்சுமி அந்த ரயிலில் போக வேண்டாம் என்று தடுத்தது அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.
அது மட்டுமா மைக்கேல் ஜாக்சன் தற்கொலை, பிரேமதாசா குண்டுவெடிப்பில் உயிரிழந்து போவது பற்றி முன்னரே சத்ய சாய்பாபா கூறியிருக்கிறார்.
நாரத மகரிஷி பற்றி குறிப்புக்கள் தமிழ் மட்டுமல்லாமல் சமஸ்கிருதத்தில் அதர்வண வேதத்தில் வருகிறது. திரிலோக சஞ்சாரியான இவர் மனோ வேகத்தில் பல உலகங்களுக்கு சென்று வந்ததை நீங்கள் சற்று நினைத்துப் பாருங்கள்.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது கால பயணம் அதாவது டைம் டிராவல் செய்ய முடியும் என்பதை நாம் உறுதிப்படுத்தலாம்.