தந்தையை போல நாட்டிற்கு சேவை செய்ய துடிக்கும் சிறுமி !!!

சமீபத்தில் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதுமட்டுமின்றி இந்த கோர விபத்தில் முப்படைகளின் தலைமை பிபின் ராவத்தை நாடு இழந்தது.
இந்நிலையில் இறந்துபோன விங் கமாண்டர் பிரித்திவி சிங் சவுகானின் 12 வயது மகள் ஆரத்யா தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இந்திய விமானப்படையில் பைலட்டாக மாற விரும்புவதாக கூறியுள்ளார். விங் கமாண்டர் சவுகானின் மகள் ஆரத்யா அவரது தம்பியுடன் சேர்ந்து தாஜ்கஞ்ச் சுடுகாட்டில் தங்கள் தந்தையின் இறுதி உரிமையை நிகழ்த்தினார்.

இறுதி உரிமையை நிகழ்த்தும்போது பிரித்வி சிங் சவுகான்-ன் 12 வயது மகள் ஆரத்யா பிரித்திவி சிங்கின் தொப்பியை அணிந்துகொண்டார். தன் தந்தைக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், “விரைவில் நானும் இந்திய விமானப் படையில் சேர்ந்து நாட்டிற்காக பணியாற்றி என் தந்தையைப் போல இந்த தேசம் காக்க பாடுபடுவேன்” என கூறினார்.
ஆரத்யா கூறியதை நாடெங்கிலும் உள்ள நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். ஒரு பனிரெண்டு வயது சிறுமிக்கு இவ்வளவு தேசப்பற்றா என ஆரத்யாவை மக்கள் புகழ்ந்து வருகின்றனர். ஹெலிகாப்டர் விபத்தில் தந்தையை இழந்த ஆரத்யா மற்றும் அவரது தம்பி ஆகியோர் பிரித்திவி சிங்கின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தும் வீடியோ அடங்கிய டுவிட்டர் பதிவை கீழே காணுங்கள்.
இது போன்ற ராணுவ வீரர்களின் உயிர் தியாகம் இந்திய மக்கள் ஒவ்வொருவராலும் காலங்கள் தாண்டியும் போற்றப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் deep talks தமிழ் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் தந்தையை போல விமான படையில் பைலட்டாக வேண்டும் என கூறிய 12 வயது சிறுமி ஆரத்யாவுக்கும் deep talks தமிழ் சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ப்ரித்திவி சிங் போன்ற வீரர்கள் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டுள்ளார்கள் !!!
2 Comments
Super
Very nice . ????????????
Comments are closed.