• May 10, 2024

பல்லவர்களின் பூர்வீகம் எது? எப்படி தமிழகத்தில் வேரூன்றினார்கள்..!

 பல்லவர்களின் பூர்வீகம் எது? எப்படி தமிழகத்தில் வேரூன்றினார்கள்..!

Pallava

கி.பி நான்காம் நூற்றாண்டில் பல்லவர்கள் தமிழகத்தை ஆள ஆரம்பித்தார்கள் என கூறலாம். ஆனால் பல்லவர்களின் ஆட்சியானது ஏழாம் நூற்றாண்டில் வலிமையோடு விஸ்வரூபம் எடுத்தது.


 

பல்லவ ஆட்சியானது சிவ ஸ்கந்தவர்மனால் துவங்கப்பட்டு, சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்மவிஷ்ணு காலத்தில் விரிவடைந்தது. பல்லவர் காலத்தில் தமிழ்நாட்டில் இலக்கியம், கலை, ஓவியம் போன்றவை சிறப்பாக வளர்ச்சி அடைந்தது.


Pallava
Pallava

தமிழகத்தில் பல்லவர்கள் ஆண்ட காலத்தை ஒரு பொற்காலம் என்று கூறலாம். இந்த சமயத்தில் தமிழ்நாட்டில் கணக்கில்லா கற்கோயிலும், பல வகையான இலக்கியங்களும் தோன்றி வளர்ந்தது.

 

தமிழகத்தில் காஞ்சிபுரம் பகுதியில் தான் ஆறு நூற்றாண்டு காலம், கிபி 300 முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் ஆட்சி இருந்து வந்தது.

 


எனினும் இந்தப் பல்லவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள், இவர்களின் உண்மையான பூர்வீகம் எது? தமிழகத்திற்குள் எப்படி நுழைந்தார்கள் என்பது இன்று வரை தெரியாத ஒரு மர்மமாகவே உள்ளது.

 

சங்க இலக்கியங்களில் பல்லவர்கள் பற்றி எந்த ஒரு குறிப்புகளும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் அவர்கள் எழுதி வைத்துள்ள கல்வெட்டுக்கள், செப்பேடுகள் போன்றவற்றை கொண்டு அவற்றை நாம் ஆய்வு செய்ய முடியும். அதன் மூலம் பல்லவர்களின் பூர்வீகம் எது என கண்டுபிடிக்கலாம்.


Pallava
Pallava

அந்த வகையில் பல்லவர்களுடைய கல்வெட்டுக்கள் மகேந்திரவாடி, தளவானூர், பல்லாவரம், திருச்சிராப்பள்ளி, வல்லம், மாமண்டூர், சித்தன்னவாசல், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 


மேலும் இவரது கல்வெட்டுகள் அனைத்தும் பிராகிருத மொழியில் உள்ளது. சில செப்பேடுகள் சமஸ்கிருத மொழியிலும் உள்ளது. கிபி ஏழாம் நூற்றாண்டுக்கு பிறகு கிடைத்த கல்வெட்டுக்கள் கிரந்த-தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது.

 

சாளுக்கியர்கள், பல்லவர்களுக்கு பகைவர்களாக இருந்திருக்கிறார்கள். சாளுக்கியர்களுக்கு பிறகு வந்த இராட்டிரகூடர்கள், பல்லவர்களோடு உறவும், பகையும் கொண்டு இருந்தார்கள். பாண்டிய மன்னர்களும், பல்லவர்களோடு பலமுறை போர் தொடுத்திருக்கிறார்கள்.


 

சீனர்களோடு பல்லவர்கள் கடல் வணிக உறவுமுறை கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் ஆட்சிக் காலத்தில் நாகப்பட்டினம் மிகச்சிறந்த துறைமுகமாக விளங்கியது. மேலும் இந்தப் பகுதியில் பௌத்த கோயில் ஒன்றும் இருந்தது.


 

பல்லவர்களைப் பற்றி தமிழ் இலக்கியங்களில் சில குறிப்புகள் காணப்படுகிறது. குறிப்பாக தனி பாடல்கள், தேவாரத்தில் காணப்படும் பல்லவரைப் பற்றிய குறிப்புகள், மூன்றாம் நந்திவர்ம பல்லவன் பற்றி நந்தி கலம்பகத்தில் பல செய்திகள் உள்ளது.



 

பல்லவர் காலத்தில் காசுகள் பெரும்பாலும் செம்பு, வெள்ளி, ஈயம் போன்றவற்றால் செய்யப்பட்டுள்ளது. இவை பல இடங்களில் இருந்து கிடைத்துள்ளது. மேலும் சில தங்க நாணயங்கள் கிடைத்துள்ளதாக திருஞானசம்பந்தர் தம் நூலில் குறிப்பிட்டு இருக்கிறார்.


 

அதுமட்டுமல்லாமல் இவர்கள் காசுகளில் காளை, சங்கு, சக்கரம் கப்பல் போன்ற உருவங்கள் உள்ளது. மேலும் சென்னை பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை 1970 மற்றும் 76 ஆண்டுகளில் நடத்திய அகழ்வாய்வின் மூலம் பிற்காலப் பல்லவர்களின் காசுகள், வார்ப்பு கருவிகள் ஆகியவற்றை காஞ்சிபுரத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.



 

பல்லவர்களிடம் காலாட் படை, குதிரைப்படை, யானைப்படை, கடற்படை இருந்தது. கடற்படையால் பல்லவர்கள் ஈழநாட்டில் செல்வாக்கை ஏற்படுத்தி கடல் வணிகத்தை மிகவும் சிறப்பாக செய்து வந்தார்கள்.

Pallava
Pallava

பல்லவ மன்னர்களில் சிம்ம விஷ்ணு, மகேந்திர வர்ம பல்லவன், நரசிம்ம வர்மன், இரண்டாம் மகேந்திரவர்மன், முதலாம் பரமேஸ்வரன், இரண்டாம் நரசிம்மன், இரண்டாம் பரமேஸ்வரன், இரண்டாம் நந்திவர்மன், தண்டிவர்மன், மூன்றாம் நந்திவர்மன் போன்றவர்களின் ஆட்சி காலம் மிகவும் சிறப்பான முறையில் அமைந்திருந்தது.

 


இந்த பல்லவர்கள் சாதவாகனர் ஆட்சியின் கீழ் பணி புரிந்தவர்கள் என்றும், அவர்கள் ஆட்சி குன்றிய  சமயத்தில் தொண்டை மண்டலத்தை கைப்பற்றி ஆட்சி புரிய ஆரம்பித்தார்கள் என்று சில கருத்துக்கள் உள்ளது.

 


வேறு சிலர் அவர்கள் சாகர்களுடன் சேர்ந்து மேற்கத்திய பகுதி மற்றும் சிந்து வெளியிலும் பஹலவா அல்லது பார்த்தியா என்ற பெயரில் குடியேறி வாழ்ந்ததாக கூறி வருகிறார்கள். என்றாலும் இவர்களிடம் அஸ்வமேத யாகம் செய்யக்கூடிய பழக்கம் இருந்ததால் இந்த பழக்கமானது, பஹலவர்களிடம் இல்லாததால் அந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள் என உறுதியானது.


 

பல்லவர்கள் பற்றிய ஆய்வுகளில் இருந்து ஒன்று மட்டும் மிகத் தெளிவாக தெரிந்துள்ளது. அது அவர்கள் தமிழர்கள் அல்ல. ஏனெனில் பல்லவ மன்னர்களின் பெயர்கள் தமிழ் பெயர்கள் அல்ல. அவர்களது பட்டயங்கள் அனைத்தும் பிராகிருத, சமஸ்கிருத மொழியில் உள்ளது.


2 Comments

  • அழகான வரிகளை மாலையாக கோர்த்து deep talks தமிழ் பக்கத்தில் அணிவித்தமைக்கு நன்றிகள் பல. மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க தமிழ்!
    வளர்க தங்கள் பணி ❤️

  • அழகான வரிகளை மாலையாக கோர்த்து deep talks தமிழ் பக்கத்தில் அணிவித்தமைக்கு நன்றிகள் பல. மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
    வாழ்க தமிழ்!
    வளர்க தங்கள் பணி ❤️

Comments are closed.