• May 9, 2024

குடைவரைக் கோயில்களுக்கு முன்னோடி பல்லவர்களா? உண்மை நிலை என்ன? – ஓர் ஆய்வு அலசல்..

 குடைவரைக் கோயில்களுக்கு முன்னோடி பல்லவர்களா? உண்மை நிலை என்ன? – ஓர் ஆய்வு அலசல்..

Pallava

பல்லவர்களின் ஆட்சி காலத்திற்கு முன்பு தமிழகத்தில் கட்டப்பட்ட கோயில்கள் அனைத்துமே செங்கல், மரம், சுண்ணாம்பு, மண் போன்றவற்றைக் கொண்டு கட்டப்பட்டது. அப்படி கட்டப்பட்ட பல கோயில்கள் காலத்தை எதிர்த்து நிற்க முடியாமல் சிதைந்து போனதை புரிந்து கொண்ட பல்லவர்கள் கோயில்களை கட்டுவதற்கு செங்கற்களை பயன்படுத்தாமல் மலை பாறைகளை குடைந்து கோயில்களை உருவாக்கினார்கள்.


இப்படி மலைப்பாறைகளை குடைந்து உண்டான கோயில்களை குடைவரை கோயில்கள் என்று அழைத்தார்கள். மேலும் குடைவரைக் கோயில்களில் சாதனையைப் பற்றி பல்லவர்கள் கட்டிய மண்டகப்பட்டு கோவிலில் கல்வெட்டில் கூறி இருக்கிறார்கள்.

Pallava
Pallava

எனவே குடைவரைக் கோயில்களை உருவாக்கிய பெருமை பல்லவர்களை சாரும். அவர்களே இந்த குடைவரை கோயில்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார்கள். இதனை அடுத்து தான் பாண்டியர்கள், அதியமான்கள், முத்தரையர்கள், சேர மன்னர்கள், சாளுக்கிய மன்னர்கள் ஒரு சிறு, சிறு மாற்றங்களோடு குடைவரைக் கோயிலை அமைத்திருக்கிறார்கள்.


மலையை குடைந்து சிற்பங்கள் உருவாக்கிய பெருமை கொண்ட பல்லவர்கள் கிபி ஏழாம் நூற்றாண்டில் மாமல்லபுரத்தில் பெரும் கடற்பாறைகளை குடைந்து புராண சிறப்புக்களை சிற்பங்களாக செதுக்கியிருக்கிறார்கள். இங்கு காணப்படும் ஒற்றை கல் கோயில்களும் பல்லவர்களின் பெயரை இன்று வரை நிலைநிறுத்தி உள்ளது என்று கூறலாம்.

இந்த ஒற்றை கல் கோயில்களில் காணப்படக்கூடிய பஞ்சபாண்டவரதங்கள் மக்கள் மத்தியில் பேசும் பொருளாக உள்ளது. மேலும் தர்மராஜா தேர் எனப்படும் கோவில் மூன்று அடுக்குகளை கொண்ட விமானத்தை கொண்டுள்ளது. இரண்டாம் அடுக்கின் நடுவில் மடப்புறை போல் உள்ளிடும் வெட்டப்பட்டுள்ளது. இதனடியில் சோமஸ் கந்தர் சிற்பம் செதுக்கப்பட்டு இருப்பதை நீங்கள் கண்டு மகிழலாம்.

Pallava
Pallava

அதுபோலவே பீமனின் தேரில் நீண்ட சதுர அமைப்பில் இருக்கும் இடம் விமானத்தைச் சுற்றி வழிவிடங்கள் உள்ளது. 45 அடி நீளம் 35 அடி அகலம் 26 அடி உயரம் கொண்ட இக்கோயிலின் தூண்களின் அடிபாகத்தில் அமர்ந்த நிலையில் சிங்க உருவம் உள்ளது.

மேலும் அர்ஜுனன் தேர் என்று அழைக்கப்படும் கோவிலில் விமானம் நான்கு நிலைகளை கொண்டு 11 சதுர அடி அமைப்போடு உள்ளது.


பல்லவர்கள் கால கட்டுமான கற்கோயில் அனைத்தும் இன்று வரை அப்படியே உள்ளது. குறிப்பாக தமிழரின் தொன்மையை உணர்த்தக்கூடிய காஞ்சியின் அருகே இருக்கும் கூரம் என்ற ஊரில் பரமேஸ்வர வர்மன் காலத்தில் எடுக்கப்பட்ட வித்யா விநீத பல்லவ பரமேஸ்வர கிருகம் சிவன் ஆலயம் உள்ளது.

Pallava
Pallava

இங்கு தூங்காணை  மாட் வடிவில் அமைத்திருக்கிறார்கள். இதன் அடிப்பகுதி மட்டுமே எஞ்சியுள்ளது. அதுபோலவே காஞ்சி கைலாசநாதர் கோயில் திருக்கைலாயத்தை நினைவுபடுத்தும் வகையில் கட்டப்பட்டது.

 ராஜசிம்மன் கட்டப்பட்டதால் ராஜசிம்மேஸ்வரம் என்று இதனை அழைப்பார்கள். இந்த கோவிலின் சுற்றுச்சுவர் முழுவதும் சிவபெருமான், பார்வதி, முருகன், திருமால் போன்ற திரு உருவங்களை சிற்பங்களாக நீங்கள் காண முடியும்.


மேற்கூறிய தகவல்களின் மூலம் பல்லவர்கள் குடைவரை கோயில்கள் கட்டுவதில் வல்லவர்களாக இருந்ததோடு மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கு முன்னோடியாகவும் திகழ்ந்திருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் நாம் ஊர்ஜிதம் படுத்தி கொள்ளலாம்.