
இந்தியா பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய நாடாக இருந்தாலும் இன்னும் சில விஷயங்களில் பின்னடைவுகளோடுதான் இருக்கின்றது. இதில் மிகப் பெரியது உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லாததும், ஆண்-பெண் பாலின வேறுபாடும். இந்தியாவில் உழைக்கும் வர்க்கம் ‘ஆண்களைச் சார்ந்தே இருக்கிறது’ என்ற ஒரு தவறான பார்வையால் பல பொருளாதார சிக்கலுக்குள் இந்தியா சிக்கிக்கொண்டிருக்கிறது. இந்த கருத்து ஒரு யூகம் அல்ல. இது “ஓக்ஸ்பாம்”(Oxfam) என்ற நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டவை.
ஏறக்குறைய 90% இந்திய மக்களின் மாத வருமானம் 10000 ரூபாய்க்கும் கீழேதான் உள்ளது.
இதில் அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவல் என்னெவென்றால், நகர்ப்புற பகுதிகளில் ஒரு நபர் பெறக்கூடிய ஊதியம், கிராமப்புற பகுதிகளை விட இருமடங்கு அதிகம் என்பதாகும். 2011-12 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கைப்படி இந்தியாவின் நகர்ப்புற மக்களின் சராசரி தினசரி ஊதியம் ரூ.387/- ஆகவும், கிராமப்புற மக்களின் சராசரி ஊதியம் ரூ 175/- ஆகவும் இருந்துள்ளது. ஆனால் அந்த சமயத்தில் ‘தேசிய சராசரி தினசரி ஊதியம்’ ரூ.247/- ஆக இருந்தது என நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
2015 ஆம் ஆண்டு 82% ஆண்கள் மாதத்திற்கு ரூ.10000/-க்கு கீழ் சம்பாதிக்கும் நிலையில் இருந்த போது 92%
பெண்கள் மாதம் ரூ.10000/-க்கு கீழ் சம்பாதிக்கும் நிலையில் இருந்தனர்.

பெண் உழைப்பு விகிதத்தில் மோசமான உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது.
உலகளவில் 195 நாடுகளில் ‘ஆண்-பெண் சமமாக மதிக்கப்படுவதில்லை’ (Gender Inequality Index) என்கிற பட்டியலில் இந்தியா 127 வது இடத்தில் இருந்தது. ‘ஆண்-பெண் வளர்ச்சி பட்டியலில்’ (Gender Development Index) இந்தியா இன்னும் மோசமாக 195 நாடுகளில், 149 வது இடத்தில் இருந்ததையும் மறக்க முடியாது*. இந்திய மொத்த மக்கள் தொகையில் வெறும் 30.8% பெண்கள் மட்டுமே, பெண் தொழிலாளர் பங்களிப்பவர்களாக (FLFP), இருக்கிறார்கள்.
பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு வழங்கும் 187 நாடுகள் கொண்ட பட்டியலில், இந்தியா 20 இடத்தில் தான் உள்ளது. இந்தியாவில் ‘வேலை வாய்ப்பு பங்களிப்பில்’ பெண்களின் பங்களிப்பு 30.8% ஆகவும், ஆண்களின் பங்களிப்பு 79.7% ஆகவும் இருக்கிறது.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Discover Crime SeriesRajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Now2011-12 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆண்-பெண் இருபாலருக்கும் இடையில் உள்ள ஊதிய சதவிகித வித்தியாசம் வெறும் 34% தான். அதாவது ஒரு ஆண் பெறும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும், ஒரு பெண் 66 ரூபாய்தான் சம்பளமாக பெற முடிந்தது. மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் மட்டுமே பணி புரியும் நிலை, ஆண்கள் பெறும் ஊதியத்தில், மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே பெண்கள் பெரும் நிலை இருந்தது. இது மிகவும் வருத்தமளிக்கக்கூடிய உண்மையாகும். இதே ஆண்டில் சைனாவில் பெண்களின் வேலைவாய்ப்பு பங்களிப்பு (FLFP) 61.5% ஆக இருந்தது. இதே அளவில் அன்று இந்தியா இருந்திருந்தால், இன்று சக்திவாய்ந்த நாடிகளின் பட்டியலில் ஒரு தனி இடத்தை இந்தியா பெற்றிருக்கும்.

இந்தியாவில் இருக்கும் பெண்களில், ஊதியத்திற்கு வேலை செய்யும் பெண்களை விட, ஊதியம் இல்லாமல் வீட்டுவேலைகளை செய்யும் பெண்களே அதிகமாக இருக்கிறார்கள்.
புள்ளிவிபரங்கள் என்பது யாரையும் காயப்படுத்த கணக்கிடப்படுவதில்லை. பல தவறான முன்னெடுப்புகளை தடுக்கவே அது செய்யப்படுகின்றன. பல்வேறு புள்ளி விபரங்களின்படி, வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களில் ஆண்களை விட, பெண்கள்தான் அதிகம் இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் புள்ளிவிபரங்களை முழுமையாக படித்தபின் ஆச்சரியப்படுவீர்கள்.
இந்தியா முழுவதும் வீட்டுவேலை செய்யும் பணியாளர்களில் 89% பேர் பெண்கள். இந்த 89% பெண்களும் ஊதியத்திற்கு வேலை செய்து, பின் ஊதியம் இல்லாத அவர்கள் வீட்டு வேலைகளையும் செய்கிறார்கள். ஒரு பெண் தினமும் 16 மணிநேரம் ஊதியமில்லா வீட்டுவேலைகளை தன் வீடுகளில் செய்கிறாள். இது இரண்டு பில்லியன் மக்கள் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் ஊதியமில்லாமல் உழைப்பதற்கு சமமாகும்.
நகர்ப்புறங்களில் பெண்கள் ஒரு நாளைக்கு 312 நிமிடங்களை ஊதியமில்லா வீட்டுவேலைகளுக்கு ஒதுக்குகிறார்கள். அதே சமயத்தில் நகர்ப்புற ஆண்கள் வெறும் 29 நிமிடங்களையே இவ்வேலைகளுக்கு ஒதுக்குகிறார்கள். கிராமப்புறங்களில் பெண்கள் ஒரு நாளைக்கு 291 நிமிடங்களை ஊதியமில்லா வீட்டுவேலைகளுக்கு ஒதுக்குகிறார்கள். அதே சமயத்தில் கிராமப்புற ஆண்கள் வெறும் 32 நிமிடங்களையே இவ்வேலைகளுக்கு ஒதுக்குகிறார்கள். பெண்கள் ஊதியமில்லா வீட்டுவேலைகளை ஆண்களை விட பத்து மடங்கு முழு ஈடுப்பாட்டுடனும், அதிக கனிவுடனுமே செய்கிறார்கள்.
இந்த ஊதியமில்லாத வீட்டுவேலைகள் செய்யும் பெண்களை, ஊதியதோடு வேலைசெய்ய வைத்தால், இந்தியாவில் பெண்களின் வேலைவாய்ப்பு பங்களிப்பு 81.7% ஆகா இருக்கும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஊதியமில்லாத வேலை 3.5% சதவீதமாகும். இதில் 3.1% பெண்களின் பங்களிப்பாகும்.
இவர்களின் வீட்டுவேலைகள் அங்கீகரிக்கப்பட்டால் தோராயமாக 11 மில்லியன் வேலை வாய்ப்புகள் பெண்களுக்கு உருவாக்கப்படக்கூடும்.
“வீட்டுவேலை தானே செய்கிறாய்” என்று இனி எந்த பெண்களையும் குறைவாக எடைப்போடாதீர்கள்.
காலம் மாறலாம். புதிய பாதையும் இனி உருவாகலாம்.
*As per June 2019 survey