• December 5, 2024

தேநீர் பிறந்த வரலாறு எப்படி?  – சுவாரசிய விஷயங்கள்..

 தேநீர் பிறந்த வரலாறு எப்படி?  – சுவாரசிய விஷயங்கள்..

Tea

சீனாவில் தோன்றியதாக கூறப்படும் தேநீர் இன்று உலக நாடுகளில் இருக்கக்கூடிய எல்லா தரப்பு மக்களும் பருகக் கூடிய ஒரு முக்கிய பானங்களில் ஒன்றாக உள்ளது.

தேநீரைப் பொறுத்தவரை சைனா, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளில் அதிக அளவு பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை தெருமுனை தோறும் ஒரு டீக்கடை இருப்பதை நீங்கள் பார்த்திருக்க முடியும்.

Tea
Tea

ஒரு நேரம் தேநீர் குடிக்கவில்லை என்றால் வாழ்க்கையில் எதையோ பறி கொடுத்தது போல உணரக்கூடிய மக்கள் பலரும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட தேனீரில் பல வகைகள் காணப்படுகிறது.குறிப்பாக கருப்பு தேநீர், பச்சை இலை தேநீர், பால் கலந்த தேநீர், மசாலா தேனீர், நறுமணத் தேனீர் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

கிமு 2737 சீனாவில் ஆட்சியில் அந்த மன்னரான சென் நங் சீனாவின் தெற்கு பகுதிக்கு செல்கிறார். கையில் சல்லி பைசா இல்லாத நிலையில் அவருக்கு பசி எடுக்க பக்கத்தில் இருந்த மரத்தில் இருந்த இலைகளை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஒருவர் தர அதை மன்னர் பருகுகிறார். இதனை அடுத்து தேநீர் குடிக்கும் பழக்கம் ஏற்பட்டதாக செவி வழி செய்தி கூறுகிறது.

அதுமட்டுமல்லாமல் எந்த தேநீரானது சீனாவில் இருக்கும் சிச்சுவான் மற்றும் யுனானை சுற்றியுள்ள மலைகளில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதை அந்த மன்னர் பிரபலப்படுத்தினார் என்றும் கதைகள் உள்ளது.

Tea
Tea

அப்படிப்பட்ட இந்த தேநீரில் இருக்கக்கூடிய பாலிஃ பினால்கள் குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்க உதவி செய்கிறது. நுண்ணுயிர் எதிர்பண்பு கொண்ட தன்மை இதற்கு உள்ளதாக அறிவியல் விளக்கியுள்ளது.

மேலும் கிமு 616 முதல் 907 காலகட்டங்களில் தான் சீனாவில் இருந்த டாங் அரச வம்ச காலத்தில் தேநீர் உலகம் எங்கும் பரவியதாக கூறுகிறார்கள். உலகின் மத்திய கிழக்குக்கு சென்ற வணிகர்கள் சீனாவில் பட்டுணியோடு, தேயிலையும் வாங்கி சென்று இருக்கிறார்கள். இதன் மூலம் தான் இது ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பிற கண்டங்களுக்கும் பரவியது.

Tea
Tea

மேலும் தேயிலையை பயிரிட அனைத்து நாடுகளும் கற்றுக் கொண்டது. இதன் மூலம் இந்தியா, சீனா, இலங்கை, இந்தோனேசியா போன்றவை தேயிலை உற்பத்தியில் முக்கிய இடத்தை பெறுகிறது.

தற்போது இந்தியாவை பொறுத்தவரை அஸ்ஸாம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கேரளாவில் பெருமளவு தேயிலை எஸ்கேட்டுக்கள் உள்ளது சர்வதேச சந்தைகளும் இந்திய தேயிலக்கி நல்ல வரவேற்பு உள்ளது.