• October 7, 2024

“இதிகாசங்களில் கூறப்பட்ட நாகலோகம்” – மீதி கதவுகள் மூடினால் கலியுகம் முடியுமா? மிரட்டும் உண்மைகள்..!

 “இதிகாசங்களில் கூறப்பட்ட நாகலோகம்” – மீதி கதவுகள் மூடினால் கலியுகம் முடியுமா? மிரட்டும் உண்மைகள்..!

nagalogam

இந்து சமயத்தை பொறுத்தவரை நான்கு விதமான உலகங்கள் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதில் ஒன்று தான் இந்த நாகலோகம். இந்த நாகலோகத்தை பாதாள லோகம் என்றும் கூறுவார்கள்.

 

நாகலோகத்தின் தலைவனாக நாகராஜன் இருப்பதாகவும், அவரின் மனைவி நாகராணி எனவும் கூறப்படுகிறது. இந்த நாகலோகத்தில் நாக இனத்தவரும், முப்பத்து முக்கோடி தேவர்கள் ஒரு சேர இருப்பார்கள்.

nagalogam
nagalogam

நாம் வாழக்கூடிய பூலோகத்தைப் பற்றி தான் நமக்கு பல்வேறு விஷயங்கள் தெரியுமே தவிர நமக்கு மேலே இருக்கக்கூடிய மேலோகத்தைப் பற்றியும், நமக்கு அடியில் இருக்கக்கூடிய பாதாள லோகம் எனும் நாகலோகத்தைப் பற்றிய விஷயங்கள் அதிக அளவு அறிவியல் ரீதியாக தெரியாது.

 

ஆனால் ஆன்மீக ரீதியாக பாதாள லோகம் எனும் நாகலோகம் உள்ளதை உத்தரகாண்ட் மாநிலம் பித்தோகர்க் மாவட்டத்தில் இருக்கின்ற பாதாள புவனேஸ்வர் கோயில் நிரூபிக்கிறது.

 

இந்த கோயிலை அடைய அரை கிலோமீட்டர் அளவு நீங்கள் நடந்து செல்ல வேண்டும். இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. மேலும் இந்தக் கோயில் ஆனது கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

nagalogam
nagalogam

சூரிய வம்சத்தை சேர்ந்த ரித்து பர்னா என்பவர் இந்த கோயிலுக்குள் நுழைந்தாக புராணக் கதைகள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் பஞ்சபாண்டவர்கள் இங்கு சிவனை பூஜித்த பின்பு தான் மேலோகம் போய் இருக்கிறார்கள்.

 

சுண்ணாம்பு பாறைகளால் கட்டப்பட்டு இருக்கும் இந்த கோயிலை தாண்டிச் சென்றால் பாதாள லோகம் செல்லக்கூடிய குகை தெரியும். சுமார் 160 அடி நீளமும் 100 அடி அகலமும் கொண்ட இந்த குகைக்குள் நுழைந்து செல்வது என்பது அவ்வளவு சுலபமான செயல் அல்ல.

 

இந்த குகைக்குள் நுழைந்து செல்லும் போது அங்கு கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய சங்கிலிகளைப் பிடித்துக் கொண்டு உங்கள் உடலை புழுப்போல சுருக்கி கொண்டு செல்ல வேண்டும்.

 

குகைக்குள் இருக்கும் என்பது படிக்கட்டுகளைக் கடந்து சென்ற பிறகு ஒரு சுரங்கப் பாதை இருக்கும்.இந்த இடம் வழியாக கைலாயமே செல்ல முடியும் என்று கூறுகிறார்கள். ஆனால் அது தற்போது அடைக்கப்பட்டு உள்ளது.

 

மேலும் குகைக்குள் நுழையும் போதே நீங்கள் நரசிம்மரின் உருவத்தை காண முடியும். அதனை அடுத்து ஆதிசேஷன் மற்றும் பல கடவுள்களின் சிலைகளை காண முடியும்.

 

இதனை அடுத்து பத்ரிநாத், கேதாரிநாத், அமர்நாத் விக்கிரகங்கள் லிங்க வடிவில் காட்சி அளிக்கும் மேலும் கால பைரவர் ஆக்ரோஷத்தோடு வாயை திறந்த நிலையில் இருப்பார்.

nagalogam
nagalogam

சிவபெருமானோ, சிம்ம வாகனத்தில் பாதாள சண்டியுடன் இணைந்து காட்சி அளிப்பார். கருவறையில் ஆதிசங்கரர் வைத்து பூஜை செய்த செப்பு லிங்கங்கள் உள்ளது.

 

இதனை எல்லாம் கடந்து குகையின் வேறு வழியாகத்தான் நாம் வெளியே வர முடியும். அந்தப் பகுதியில் தான் நான்கு யுகங்களை குறிக்கக்கூடிய லிங்கங்கள் உள்ளது. இதில் கலியுகத்தை குறிக்கும் லிங்கம், மேல் இருக்கும் பகுதியை தொடும் போது கட்டாயம் கலியுகம் முடியும் என்று கருதுகிறார்கள்.

 

அது போலவே கந்த புராணத்தில் இந்தக் கோயிலில் நான்கு கதவுகள் இருந்ததாகவும், போன யுகத்தில் இரண்டு கதவுகள் மூடிவிட்டதாகவும் மீதி இருக்கும் இரண்டு கதவுகளும் மூடும் சமயத்தில் கலியுகம் முடியும் என்று ஆணித்தரமாக கூறியிருக்கிறார்கள்.