• September 10, 2024

இறந்தபின் 12 மணி நேரம் நெருக்கமான நண்பர்களுக்கு போன் செய்த நபர்… எப்படி சாத்தியம்?

 இறந்தபின் 12 மணி நேரம் நெருக்கமான நண்பர்களுக்கு போன் செய்த நபர்… எப்படி சாத்தியம்?

சார்லஸ் இ. பெக்

அமெரிக்காவில் ரயில் விபத்தினால் உயிரிழந்த ஒருவர் செல்போனில் இருந்து 35 முறை தனக்கு நெருக்கமானவர்களோடு போன் செய்து உள்ளதாக செய்திகள் தெரிய வந்துள்ளது. 

 

1950 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி கலிபோனியாவில் பிறந்தவர் சார்லஸ் இ. பெக். இவர் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏஜென்ட் ஆக பணி புரிந்திருக்கிறார்.

​சார்லஸ் இ. பெக்

மேலும் இவர் தான் காதலித்து வந்த காதலியை திருமணம் செய்து ஒன்றாக வாழ வேண்டும் என்று நினைத்திருக்கிறார். ஏற்கனவே திருமணம் செய்து கொண்டு விவாகரத்தை பெற்று விட்ட இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி புதிய வேலைக்கான நேர்காணலுக்காக லாஸ் வேகாஸ் சென்று இருக்கிறார்.

 

இவர் லாஸ் வேகாஸ் செல்வதற்காக மெட்ரோ ரயிலில் ஏறி பயணித்தார். இந்த பயணத்தின் போது சுமார் 225 பேர் இவருடன் சேர்ந்து பயணம் செய்து இருக்கிறார்கள். 

 

இந்த மெட்ரோ ரயில் சாட்ஸ் வோர்ட் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது தீடிரென விபத்துக்கு உள்ளானது.

சார்லஸ் இ. பெக்
சார்லஸ் இ. பெக்

இந்த விபத்தில் சுமார் 135 பேர் காயம் அடைந்து 25 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த பயணத்தில் பெக்கும் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் உயிரிழந்த விஷயம் இவரது காதலிக்கு தெரியாது.

 

எனினும் விபத்தில் நடந்து சில மணி நேரங்களுக்கு பிறகு தான் அந்த விபத்து பற்றிய செய்தியை அவரது காதலி ரேடியோவின் மூலம் கேட்டறிந்து அதிர்ச்சி அடைந்தார். அத்தோடு தனது காதலன் உயிருடன் இருக்க வேண்டும் என்று அவள் பிரார்த்தனை செய்தாள்.

 

இந்த சூழ்நிலையில் ரயில் விபத்து நடந்து 11 மணி நேரங்கள் கடந்து விட்ட நிலையில் பெக்கின் செல்போனில் இருந்து அவரது  குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் செல்போன் கால்கள் வந்து கொண்டிருப்பதை உணர்ந்து தன் காதலன் உயிரோடு இருக்கிறான் என்றே அவரின் காதலி நினைத்தார்.

சார்லஸ் இ. பெக்
சார்லஸ் இ. பெக்

ஆனால் அந்த போன் காலை எடுத்த போது எதிர் முனையில் அமைதி மட்டுமே நிலவியது. வேறு எந்த பேச்சுக்களும் இல்லை, பலமுறை இப்படி இறந்து போன அவரின் செல்போனில் இருந்து போன் செய்யப்பட்டுள்ளது.

 

ஆனால் பெக் ஒரு முறை கூட யாரிடமும் பேசவில்லை. விபத்து நடந்த நேரத்தில் இருந்து மறுநாள் காலை 3 மணி வரை மட்டுமே அந்த செல்போனில் இருந்து கால்கள் வெவ்வேறு நபர்களுக்கு சென்றுள்ளது.

 

மேலும் 3 மணிக்கு பிறகு எந்த கால்களும் வரவில்லை. இதனை அடுத்து மறுநாள் காலை நாலு மணி அளவில் பெக்கின் உடல் கணக்கெடுக்கப்பட்டு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

சார்லஸ் இ. பெக்
சார்லஸ் இ. பெக்

பல மணி நேரம் இதுக்கு முன்பே பெக் உயிர் பிரிந்து விட்டது என்று மருத்துவர்கள் கூறிய நிலையில் அவரது செல்போனில் சுமார் 11 மணி நேரமாக யார் போன் செய்தது என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

 

இது வரை அவரது செல்போனை யார் பயன்படுத்தியது என்ற கேள்வி மர்மமாகவும், புரியாத புதிராகவே உள்ளது.