• July 27, 2024

“தமிழ் தாத்தா உவேசா..!” – தமிழ் வளர்க்க செய்த செயல்கள் தெரியுமா?

 “தமிழ் தாத்தா உவேசா..!” – தமிழ் வளர்க்க செய்த செயல்கள் தெரியுமா?

U. V. Swaminatha Iyer

தமிழ் தாத்தா என்று அனைவராலும் அழைக்கக்கூடிய உவேசா பற்றி உங்களுக்கு எந்த அளவு தெரியும் என எங்களுக்கு தெரியவில்லை. எனினும் உவேசா தமிழுக்காக செய்த அளப்பரிய செயல்களைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் தாத்தா உவேசா என்பது உ வே சாமிநாதயர் என்ற பெயரில் சுருக்கம் தான். இவர் மிகச்சிறந்த தமிழ் அறிஞர் என்பதோடு மட்டுமல்லாமல் அற்புதமான பதிப்பாளராகவும் திகழ்ந்து இருக்கிறார்.

U. V. Swaminatha Iyer
U. V. Swaminatha Iyer

தமிழ் மொழிக்காக இவர் ஆற்றிய அரும் பணி பார்த்து தான் அனைவரும் இவரை தமிழ் தாத்தா என்று அழைத்தார்கள். தமிழ் மொழியில் இயற்றப்பட்ட பண்டைய தமிழ் இலக்கியங்கள் பலவற்றை தேடித்தேடி கண்டுபிடித்து அதை அச்சிட்டு பதிப்பித்தவர்.

இவர் இல்லையென்றால் இத்தனை தமிழ் புத்தகங்கள் நமக்கு இலக்கியத்தில் கிடைத்திருக்குமா? என்பது கேள்வி குறிதான். சுமார் 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை கண்டுபிடித்து பதித்தோடு மூவாயிரத்திற்கும் மேற்பட்ட எட்டு சுவடிகளையும், கையேடுகளையும் சேகரித்த பெருமை இவருக்கு உண்டு.

1855 ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் இவர் பிறந்திருக்கிறார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தமிழுக்காக தொண்டாற்றியவர்களுள் உவேசா முக்கிய இடத்தை பிடித்திருக்கிறார்.

U. V. Swaminatha Iyer
U. V. Swaminatha Iyer

ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழிகளை பற்றி புகழுபவர்களின் மத்தியில் தமிழ் மொழி எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை அன்று எடுத்து உணர்த்தக்கூடிய வகையில் விவாதம் செய்வார்.

விழா சிறப்பு என்கின்ற நூலில் எழுதப்பட்ட 86 பாடல்களில் 8 பாடல்களை எழுதியதோடு அந்த நூலை முதல் முதலில் பதிப்பித்தார். மேலும் சீவக சிந்தாமணியை புதுப்பிக்க முடிவு செய்து அதற்கான குறிப்புகளை தேடி அலைந்து பல சிக்கல்களையும் தடங்கல்களையும் தாண்டி வெற்றிகரமாக அதனை வெளியிட்டார்.

இதனை அடுத்து சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, புறநானூறு, மதுரைக்காஞ்சி,  குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் போன்ற சங்க இலக்கிய நூல்களை கண்டறிந்து அதை புதுப்பித்து வருங்கால தலைமுறைக்கு வழங்கும் விதத்தில் வடிவமைத்தார்.

மணிமேகலை நூலுக்கு  எழுதிய உரை இன்றளவும் சங்க இலக்கிய நூல்களில் சிறந்த உரை நூலாக உள்ளது. வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவும், தமிழில் வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட மிகச்சிறந்த தமிழ் அறிஞர் இவர்.

U. V. Swaminatha Iyer
U. V. Swaminatha Iyer

இதனால் தான் 1931 மார்ச் 21ஆம் தேதி உ வேசா வின் தமிழ் பணியை பாராட்டி மகாமகோபத்தியார் என்ற பட்டத்தை வழங்கி சென்னை பல்கலைக்கழகம் அவரை கௌரவித்தது. தழிழில் பேச்சுக்களை மிகச் சிறப்பான முறையில் தருவார். இவர் சங்க கால தமிழும், பிற்காலத் தமிழும் என்கின்ற தலைப்பில் சென்னை பல்கலைகத்தில் பேசிய பேச்சு பிற்காலத்தில் நூலாக வெளிவந்தது.

தற்போது உவேசா பிறந்த இல்லம் அரசால் நினைவில்லமாக மாற்றப்பட்டு இருப்பது, ஒரு 1942 சென்னையில் அவர் பெயரில் அமைக்கப்பட்ட நூலகம் இன்றளவும் செயல்பட்டு வருகிறது.

தமிழுக்காக தன் வாழ்நாள் முழுவதும் பணி புரிந்த இவரைப் பற்றி மேலும் சில கருத்துக்கள் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அப்படிப்பட்ட கருத்துக்களை நீங்கள் எங்களோடு தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.