Skip to content
January 10, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil

Deep Talks Tamil

Uncover the Depths of Tamil Culture & Literature | Daily Motivational Inspiration | Tamil Audiobooks

cropped-website-banner-copy.jpg
Primary Menu
  • Home
  • கட்டுரைகள்
    • சிறப்பு கட்டுரை
    • சுவாரசிய தகவல்கள்
    • மர்மங்கள்
    • Viral News
    • வெற்றி உனதே
    • Uncategorized
  • Podcast
  • சினிமா
    • Cinema News
  • Videos
    • தமிழனின் அறிவியல்
    • Deep Interesting Facts
    • மதுரை தெருக்கள் வரலாறு
    • தமிழும் தமிழர்களும்
    • Tamil Motivation – தன்னம்பிக்கை வீடியோ
    • சிவ தத்துவம்
    • தமிழ் மாவீரர்கள்
    • சித்தர்கள் வரலாறு
  • கவிதைகள்
  • Contact Us
    • About Us – Deep Talks Tamil
    • Privacy Policy
    • Terms and Conditions
Watch Video
  • Home
  • Viral News
  • “எங்கள் நிலத்தில் எங்களுக்கு இடமில்லையா?” – கடைக்கோடி கிராமத்தின் கதறல் கேட்கிறதா?
  • Viral News

“எங்கள் நிலத்தில் எங்களுக்கு இடமில்லையா?” – கடைக்கோடி கிராமத்தின் கதறல் கேட்கிறதா?

Vishnu March 14, 2025 1 minute read
oru
565

கரடிபுத்தூர் – ஓர் எல்லைப்புற கிராமம்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ள கரடிபுத்தூர் கிராமம், ஒருபுறம் விவசாய நிலங்களும், மறுபுறம் தொழிற்சாலைகளும் சூழ்ந்த ஆந்திர மாநில எல்லையோரக் கிராமமாகும். பட்டியல் சமூக மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இக்கிராமத்தில் நெல், நிலக்கடலை போன்ற பயிர்கள் பிரதானமாக விளைவிக்கப்படுகின்றன.

இந்த கிராமத்தின் மக்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். ஆனால் அரசு ரெகார்டுகளில் இவர்கள் அதிகாரப்பூர்வமான “வீட்டு மனை பட்டா” இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள்.

மண் குவாரிக்கு அனுமதி – மக்களின் கனவுகள் கலைந்த நேரம்

தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் மூலம் நடைபெறும் சாலைப் பணிகளுக்காக இக்கிராமத்தில் உள்ள கிராவல் மண்ணை எடுக்க எல் அண்ட் டி நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரபுசங்கர் அனுமதி அளித்தார்.

சுமார் 3 ஹெக்டேர் நிலப்பரப்பில் இருந்து 22,223 சதுர மீட்டரில் ஒன்றரை மீட்டர் ஆழத்துக்கு கிராவல் மண் எடுப்பதற்கான அனுமதியை அரசு வழங்கியது. இதையடுத்து, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அந்த நிறுவனம் மண் எடுக்கும் பணிகளில் இறங்கியது.

ஆனால் இந்த செயலுக்கு கரடிபுத்தூர் கிராம மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். காரணத்தை விளக்குகிறார் அனுசுயா.

“நாங்கள் மேய்க்கால் (மேய்ச்சல்) புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகிறோம். இதுவரை எங்களுக்கு பட்டா இல்லை. பட்டா கொடுக்குமாறு நீண்டகாலமாக அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வருகிறோம்”

புறம்போக்கு நிலத்தில் வீடுகள் – பட்டாவுக்கான போராட்டம்

மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் பட்டா கொடுப்பதற்கு விதிகள் அனுமதிக்காது என்பதால், கிராமத்தில் உள்ள கல்லாங்குத்து வகை புறம்போக்கு நிலத்தை ஒதுக்கி பட்டா தருமாறு கோரிக்கை வைத்ததாக அனுசுயா கூறுகிறார்.

“ஆனால் எங்கள் கோரிக்கையை ஏற்காமல் அந்த நிலத்தை கிராவல் மண் எடுக்கும் குவாரி பணிகளுக்கு அரசு ஒதுக்கிவிட்டது”

அடையாள ஆவணங்களை ஒப்படைத்த கிராம மக்கள்

மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கரடிபுத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ஜான் பிரிட்டோவிடம் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதியன்று தங்களின் ஆதார் அட்டை, ரேசன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை கிராம மக்கள் ஒப்படைத்தனர்.

அரசு அளித்த குவாரி அனுமதியை ரத்து செய்யுமாறு வி.ஏ.ஓ-விடம் கூறியபோது, வருவாய்த்துறை உயர் அதிகாரிகளிடம் பேசிவிட்டு பதில் அளிக்க அவகாசம் கோரியதாக அனுசுயா கூறுகிறார். இதனால் அனைவரும் வீடுகளுக்குத் திரும்பிவிட்டதாகவும் தெரிவித்தார்.

“எங்களை அகதிகளாக அறிவியுங்கள்” – கடைக்கோடி கிராமத்தின் கதறல்

“கடைக்கோடி கிராமத்தில் இருப்பதால் எங்களை யாரும் திரும்பிப் பார்ப்பதில்லை. அதனால் எங்களை அகதிகளாக அறிவித்துவிடுமாறு வி.ஏ.ஓ-விடம் கூறினோம்”

இந்த வார்த்தைகள் எவ்வளவு ஆழமான வலியைக் காட்டுகின்றன! நான்கு தலைமுறையாக வசித்து வரும் இக்கிராம மக்களின் அடிப்படை உரிமைக்கான போராட்டம் இது.

See also  ரம்ஜான் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்கிறீர்களா? சென்னையில் இருந்து பெங்களூர், திருச்சி, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

காவல்துறையால் தாக்குதல்? – பதற்ற நிலை

மார்ச் 1 ஆம் தேதியன்று கிராம நிர்வாக அலுவலரைச் சந்திப்பதற்கு கிராம மக்கள் சென்றபோது அங்கு பதற்றம் ஏற்பட்டது. காவல்துறையால் தாக்கப்பட்டதாக பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இக்கிராமத்தைச் சேர்ந்த சரளா கண்ணீருடன் கூறுகிறார்:

“போராட்டம் செய்வதற்காக நாங்கள் அங்கு செல்லவில்லை. ஆனால் எங்களை ரொம்பவே அவமானப்படுத்திவிட்டனர். எந்தத் தப்பும் பண்ணாத எங்களை இந்தளவுக்கு அடிப்பார்கள் எனத் தெரியவில்லை.”

தனக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் வீட்டு மனை வாங்கும் அளவுக்கு வசதி இல்லை எனக் கூறும் சரளா, “அந்த இடம் வேண்டும் எனக் கேட்டு போராடினோம். இந்தக் கிராமத்தில் நான்கு ஏரிகள் உள்ளன. அதில் மண் எடுக்குமாறு கூறினோம். அதைப் புரிந்து கொள்ளாமல் போலீஸார் அடித்தனர்” எனக் கூறினார்.

மக்களைக் கைது செய்து அரசுப் பேருந்துகளில் காவல்துறை அழைத்துச் சென்றபோது, இக்கிராமத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் பேருந்துக்குள் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காவல்துறை விளக்கம் – 44 பேர் மீது வழக்கு

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி ஜெயஸ்ரீ.

“அவர்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை. கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதிக்கு செல்லும் வழியை மூடிவிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினர். இது சட்டத்துக்குப் புறம்பான செயல் என்பதால் காவல்துறை நடவடிக்கை எடுத்தது.”

இந்த விவகாரத்தில் 44 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“நான்கு தலைமுறைகளாக வசித்தும் எந்த உதவியும் இல்லை”

“நான்கு தலைமுறைகளாக வசித்தும் அரசிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை” எனக் கூறுகிறார் இப்பகுதியைச் சேர்ந்த எஸ்தர்.

“குவாரிக்கு அனுமதியை வழங்கியது எங்களுக்கு தெரியாது. இது தெரியவந்தபோது மண் எடுக்கும் லாரிகளை நிறுத்தினோம். அப்போது அங்கு வந்த அதிகாரிகளிடம், ‘எங்கள் மண் எங்களுக்கு உரிமையானது’ எனக் கூறினோம். அவர்களிடம் பதில் இல்லை. கலெக்டரும் வந்தப் பார்ப்பதாக கூறினார். ஆனால், உரிய பதில் கிடைக்கவில்லை.”

தொடர்ந்து, குவாரியின் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் வீடுகளில் இப்பகுதி மக்கள் கறுப்புக் கொடி கட்டியுள்ளனர். குவாரிக்கு எதிராக மீண்டும் பதற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஊரில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

“விவசாயம் பாதிக்கும்” – கிராம மக்களின் அச்சம்

“அனுமதிக்கப்பட்ட இடத்தில் மண் தோண்டப்பட்டால் ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்து விவசாயம் பாதிப்படையும்” எனக் கூறுகிறார் இப்பகுதியைச் சேர்ந்த மைக்கேல் ராஜ்.

அவர் மேலும் விளக்குகிறார்: “குவாரிக்கு ஒதுக்கப்பட்ட இடம் சமநிலையாக உள்ளது. இந்த இடத்தில் பள்ளம் தோண்டினால் தண்ணீர் இங்கேயே நின்றுவிடும். ஏரிக்கு நீர் செல்வதற்கு வாய்ப்பில்லை. ஆடு, மாடுகளை மேய்க்க வருகிறவர்கள் குழிக்குள் விழுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.”

“மேடு பள்ளம் இல்லாமல் சமதளத்தில் நிலம் உள்ளதால் குவாரிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை மக்களுக்கு அரசு ஒதுக்க வேண்டும்” எனக் கூறும் மைக்கேல் ராஜ், “எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் அருகில் உள்ள ஆந்திராவுக்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை” என்கிறார்.

See also  கல்மா என்றால் என்ன? பஹல்காம் பயங்கரவாதிகள் பாதிக்கப்பட்டவர்களிடம் ஓதச் சொன்னது எது? இஸ்லாத்தில் அதன் முக்கியத்துவம் என்ன?

அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் மண் எடுப்பு? – ஆர்வலர் குற்றச்சாட்டு

குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக மண்ணைத் தோண்டி எடுத்துள்ளதாக கூறுகிறார் சமூக ஆர்வலர் சரவணன்.

“குவாரியில் அரசு அனுமதித்த மண்ணின் ஆழ அளவு என்பது 1.5 மீட்டர். ஆனால், 2.5 மீட்டர் ஆழம் வரை மண் எடுத்துள்ளதை ஆதாரப்பூர்வமாக அதிகாரிகளிடம் தெரிவித்தோம்.”

“கூடுதலாக மண் எடுப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலத்தை விட்டுவிட்டு ஏரிகளில் மண் எடுக்குமாறு கூறியும் கேட்கவில்லை. மக்கள் தொடர் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக குவாரியின் செயல்பாட்டை நிறுத்தியுள்ளனர்.”

மாவட்ட ஆட்சியர் விளக்கம் – “35 பேருக்கு மட்டுமே பட்டா தகுதி”

அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக மண் எடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் கூறுகிறார்: “எட்டு இடங்களில் 2 இடங்களில் மட்டும் அரை அடி மண்ணை கூடுதலாக எடுத்துள்ளனர். அதுகுறித்து விசாரித்து வருகிறோம்.”

கரடிபுத்தூர் கிராம மக்களின் பட்டா கோரிக்கை குறித்து அவர் கூறுகையில், “கிராமத்தில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் 150 பேர் வீடுகளைக் கட்டியுள்ளனர். அவர்களில் 35 பேர் மட்டுமே பட்டாவுக்கு தகுதியானவர்கள். அவர்களுக்கு பட்டா கொடுப்பதாக உறுதியளித்துள்ளோம்.”

“பொதுமக்கள் மீது காவல்துறை தாக்குதலை நடத்தவில்லை” எனக் கூறும் மாவட்ட ஆட்சியர், “வாகனங்களை மறித்ததால் காவல்துறை அவர்களை வெளியேற்றியது” என்கிறார்.

குவாரிக்காக குழி தோண்டுவதால் விவசாயப் பணிகள் பாதிக்கும் எனக் கூறப்படுவது குறித்துக் கேட்டபோது, “தண்ணீர் தேங்கினால் நிலத்தடி நீர் மட்டும் உயரும். அதனால் விவசாயம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை” என்கிறார்.

“அங்குள்ள அனைத்து ஏரிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் ரோடு போடுவதற்கு சாலைகளை சமப்படுத்துவதற்கு கிராவல் மண்தான் சரியானதாக இருக்கும். தவிர எந்த தனிநபருக்காகவும் அரசு இதைச் செய்யவில்லை” எனக் கூறுகிறார் மாவட்ட ஆட்சியர்.

நிலைமை என்ன?

கரடிபுத்தூர் மக்களின் தொடர் எதிர்ப்பு காரணமாக குவாரியில் மண் எடுக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் தங்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தைத் தொடர உள்ளதாக கூறுகின்றனர் இப்பகுதி மக்கள்.

ஊர்ப்புறங்களில் அரசு கொள்கைகள் – மறுபரிசீலனை தேவையா?

கரடிபுத்தூர் மட்டுமல்ல, தமிழகத்தின் பல கிராமங்களில் இத்தகைய பிரச்சனைகள் எழுகின்றன. நாட்டின் வளர்ச்சிக்காக தேவைப்படும் மண், மணல் போன்ற கனிம வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்தான். ஆனால் அதே நேரத்தில் அங்கு வாழும் மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டியது இன்றியமையாததாகும்.

பல தலைமுறைகளாக வசிக்கும் மக்களுக்கு முறையான பட்டாக்கள் வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும் அரசின் கடமையாகும். குவாரிகள் அமைப்பதற்கு முன் உள்ளூர் மக்களின் கருத்துக்களைக் கேட்டு, அவர்களின் ஒப்புதலோடு மட்டுமே அத்தகைய திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

See also  தங்கமான தலைவர் கக்கன்: இன்று பிறந்தநாள்… பொதுவாழ்வில் நேர்மைக்கு ஒரு முகவரி உண்டா?

மூன்று அடிப்படை கேள்விகள் எழுகின்றன:

  • பல தலைமுறைகளாக வசிக்கும் மக்களுக்கு பட்டா இல்லாமல் போவதற்கு காரணம் என்ன?
  • அரசுப் புறம்போக்கு நிலங்களில் நெடுங்காலமாக வசிப்பவர்களை முறைப்படுத்துவதற்கான கொள்கை ஏன் செயல்படுத்தப்படவில்லை?
  • சாலை அமைப்பதற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் இடையே சமரசம் காண முடியாதா?

இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், கரடிபுத்தூர் போன்ற போராட்டங்கள் தொடர்ந்து எழக்கூடும்.

About the Author

Vishnu

Editor

View All Posts
Tags: agricultural land gravel quarry Karadiputhoor protest L&T land rights police action poramboke land Thiruvallur எல் அண்ட் டி கரடிபுத்தூர் போராட்டம் காவல்துறை தாக்குதல் கிராவல் மண் கும்மிடிப்பூண்டி திருவள்ளூர் பட்டா கோரிக்கை புறம்போக்கு நிலம் மண் குவாரி விவசாய நிலம்

Post navigation

Previous: தமிழ்நாடு பட்ஜெட் 2025: 20 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப், புதிய நகரம் உருவாக்கம் – இது வரையில் இல்லாத மாபெரும் அறிவிப்புகள்!
Next: தமிழில் ‘ரூ’ குறியீடு: 200 ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் பயன்படுத்தியது தெரியுமா?

Related Stories

ens
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

Vishnu August 30, 2025 0
vi
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

Vishnu August 25, 2025 0
vijay
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

Vishnu August 22, 2025 0

Motivation

Untitled-1-thum
  • Tamil Motivation Videos
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

பல்லாங்குழி: நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அறிவுக் களஞ்சியமா?

Vishnu September 11, 2024 0
idQK7Buuk8Q-HQ
  • Tamil Motivation Videos

தோல்வி தடைகளை உடைத்தெறிவது எப்படி?

Brindha August 6, 2023 0
GoMD6uHHGYo-HQ
  • Tamil Motivation Videos

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

Brindha August 6, 2023 0
mS70MkocDlE-HQ
  • Tamil Motivation Videos

21 நாட்களும் அதன் இரகசியமும்

Brindha August 6, 2023 0
4i8Iz_Hfk5I-HQ
  • Tamil Motivation Videos

வேண்டிய நேரத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா? 

Brindha August 6, 2023 0

Mystery

rg
  • மர்மங்கள்

ஒரு பெண்ணுக்குள் இப்படியொரு மின்சார சக்தியா? விஞ்ஞான உலகையே மிரள வைத்த 14 வயது சிறுமியின் அமானுஷ்ய கதை!

Vishnu July 28, 2025 0
5
  • மர்மங்கள்

சென்னையின் இந்த 5 இடங்களுக்கு தனியாக செல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா? ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் திகில் ஸ்பாட்ஸ்!

Vishnu July 23, 2025 0
Black-Holes
  • மர்மங்கள்

கருந்துளையின் மையம் ‘சிங்குலாரிட்டி’: இயற்பியல் விதிகள் உடையும் பிரபஞ்சத்தின் விசித்திரமான இடம்!

Vishnu June 21, 2025 0
je
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025 0
mar
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025 0
11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்! Manifesting 1
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

November 13, 2025 0
எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை ens 2
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

August 30, 2025 0
விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா? vi 3
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

August 25, 2025 0
விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன? vijay 4
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

August 22, 2025 0
மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்! fg 5
  • சுவாரசிய தகவல்கள்
  • சிறப்பு கட்டுரை

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

August 22, 2025 0
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram

You may have missed

Manifesting
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

Deepan November 13, 2025 0
ens
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

Vishnu August 30, 2025 0
vi
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

Vishnu August 25, 2025 0
vijay
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

Vishnu August 22, 2025 0
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil Copyright © All rights reserved. | MoreNews by AF themes.