மனிதர்கள் அவர்களின் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்பதை ஒரு சிலர் லட்சியமாக வைத்திருப்பார்கள். அதற்காக கடுமையாக பயிற்சிகளை மேற்கொண்டு வெற்றியும் பெறுவார்கள்.
அந்த வகையில் கின்னஸ் ரெக்கார்டில் ஒரு கோழி இடம் பிடித்து உள்ளது என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எதற்காக இந்த கோழிக்கு கின்னஸ் ரெக்கார்டில் இடம் கிடைத்தது என்பதை பற்றி யோசிக்க தோன்றும்.
அந்தக் கோழி எதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது என்பது பற்றி விரிவாக இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
ஒரு கோழியின் ஆயுட்காலம் பொதுவாக 5 முதல் 10 ஆண்டுகள் வரை தான் இருக்கும் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். வெவ்வேறு இனங்களில் இருக்கக்கூடிய உயிரினங்களின் ஆயுட்காலம் அவற்றின் ஆரோக்கியத்தை பொறுத்து மாறுபடலாம்.
அந்த வகையில் உலகில் மிகப் பழமையான கோழி 20 வயது 27 நாட்கள் வரை உயிர் வாழ்ந்துள்ள அதிசய செய்தி உங்களுக்கு தெரியுமா? இந்த கோழியானது அமெரிக்காவின் மெக்ஸிகன் பகுதியில் உள்ள தம்பதியர் வைத்திருக்கும் கோழி பண்ணைகள் இருந்து கிடைத்தது.
பீனட் என்ற பெயர் கொண்ட கோழி தான் அந்த கின்னஸ் சாதனையை படைத்திருக்கிறது. இந்த கோழியின் உரிமையாளர் மார்சி பார்க்கர் டார்வின் அந்தக் கோழி பற்றி கூறுகையில் சராசரியாக கோழி ஐந்து முதல் எட்டு ஆண்டுகள் வரை தான் வாழும். ஆனால் இந்த கோழியானது 20 வயதை தாண்டி சாதனை படைத்ததாக கூறியிருக்கிறார்.
இந்த கோழியின் தாய் முட்டைகளை எட்டு சென்ற போது தற்செயலாக அந்தப் பக்கம் சென்ற இவர் முட்டைகளை எடுத்து குப்பையில் போடும் போது குஞ்சின் கூக்குரல் ஒன்று கேட்டுள்ளது. இதை அடுத்து முட்டையிலிருந்து அந்த குஞ்சை எடுத்து சுத்தம் செய்து கூண்டுக்குள் வைத்து வளர்த்திருக்கிறார்.
அப்படி வளர்க்கப்பட்ட கோழிக்கு தான் தற்போது 21 வயதாகிறது. நீண்ட காலம் வளர காரணம் என்ன என்று பார்க்கும் போது அந்த கோழிக்கு ஆரோக்கியமான உணவான தயிரில் கலந்து தரப்பட்ட வைட்டமின் டி மாத்திரைகள், பழங்கள், காய்கறிகள், உடற்பயிற்சி தான் காரணம் என்று கூறியிருக்கிறார்.
மேலும் 21 வயதை அடைந்திருக்கும் இந்த கோழி நாய்கள் மற்றும் பூனைகள் இருக்கக்கூடிய ஒரே அறையில் வசித்து வருகிறது. இதுவரை 21 வயது வரை எந்த கோழியும் உயிர் வாழ்ந்ததாக தெரியவில்லை. இதனை அடுத்து இந்த கோழி கின்னஸ் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளது.