• July 27, 2024

நாடி ஜோதிடம்.. அதனுள் மறைந்திருக்கும் மர்மங்கள் என்னென்ன?

 நாடி ஜோதிடம்.. அதனுள் மறைந்திருக்கும் மர்மங்கள் என்னென்ன?

Nadi Astrology

நமது முன்னோர்கள் வருங்கால சந்ததியினரின் வாழ்க்கை குறித்து எழுதிச் சென்ற ஓலைச்சுவடிகளை நாடி ஜோதிடம் என்று கூறுகிறோம். இதன் மூலம் ஆண்களின் வலது கை கட்டை விரல் ரேகையும், பெண்களின் இடது கை கட்டை விரல் ரேகையை கொண்டு நாடி ஜோதிட ஏடுகள் கணிக்கப்படுகிறது. 

 

சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இந்த சுவடிகளை சப்தரிஷிகள் எனப்படும் அகத்திய, கௌசிகர், வைசியர், போகர், பிருகு, வசிஸ்டர் மற்றும் வால்மீகி ஆகிய ரிஷிகள் எழுதியதாக கருதப்படுகிறது. ஆனால் பெரும்பாலான ஜோதிடர்கள் அகத்திய முனிவர் எழுதிய ஓலை சுவடிகள், கவிதையாக இருப்பதால், வாசிக்கும் போது அவரது பெயரைக் கூறி வாசிக்கிறார்கள். 

Nadi Astrology
Nadi Astrology

ஒருவரின் கைரேகையை பதிவு செய்து, அதன் மூலம் அவருக்கு நாடி ஜோதிடம் பார்க்கப்படுகிறது. கை ரேகையை கொண்டு அவரைப் பற்றி ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டதாக கருதப்படும் ஓலையை கண்டுபிடித்து, அதில் உள்ள அவர் தொடர்பான விடயங்களை வாசித்து சொல்வதாக நம்பப்படுகிறது. 

 

நாடி ஜோதிடர்களில் சிலர் மட்டுமே ஒருவரின் எதிர்காலம் குறித்து உண்மையான தகவல்களை  கூறியுள்ளனர். ஒவ்வொரு சுவடிகளும் பெயர், வயது, தாய், தந்தை பெயர், உற்றார், உறவினர், தொழில், கடந்தகாலம், எதிர்காலம் என அனைத்தும் கூறப்பட்டிருக்கும். 

 

இதனை வைத்து அவர்களின் எதிர்கால குறிப்புகள் பற்றி அறிந்து கொண்டு வாழ்வில் உள்ள பிரச்சனைகள், கர்மவினை போன்றவற்றை சரி செய்ய பரிகாரங்களையும்  நாடி ஜோதிடம் கூறுகிறது. 

 

நாடி ஜோதிடத்தில் பொதுவாக பன்னிரண்டு காண்டங்கள் உள்ளது. அதை தவிர தனி காண்டம் என்று ஒரு தொகுதியும் உள்ளது. இந்த 12 காண்டகளில் முதல் காண்டம் வாழ்க்கையின் பொதுப்பலன் பற்றி கூறுகிறது.

Nadi Astrology
Nadi Astrology

இரண்டாவது காண்டம் குடும்பம், வாக்கு, கல்வி, தானம், நேத்திரம் ஆகியவற்றின் பலன்களைச் எடுத்துக் கூறுகிறது. மூன்றாவது காண்டம் சகோதர்கள் தொடர்பான விடயங்களை கூறுகிறது. நான்காவது காண்டம் வாகனம், வீடு மற்றும் வாழ்க்கையில் அடையக்கூடிய சுகங்கள் பற்றிய தகவல்களை கூறுகிறது. 

 

ஐந்தாவது காண்டம் பிள்ளைகள் பற்றி கூறுவது. ஆறாவது காண்டம் வாழ்க்கையில் உள்ள எதிரிகள் நோய் கடன் பற்றி கூறுகிறது. ஏழாம் காண்டம் திருமணம் மற்றும் வாழ்க்கை பற்றிய கருத்துக்களை கூறுகிறது.

 

எட்டாம் காண்டம் உயிர் வாழும் காலம், ஆபத்துக்கள் பற்றி கூறுகிறது. ஒன்பதாவது காண்டம் தந்தை, செல்வம், குரு இவற்றைப் பற்றி கூறுகிறது .பத்தாவது காண்டம் தொழில் பற்றிய செய்திகளைத் தருகிறது. 

Nadi Astrology
Nadi Astrology

பதினோராம் காண்டம் லாபங்கள் பற்றி கூறுகிறது. 12 ஆவது காண்டம் செலவு, அடுத்த பிறப்பு, மோட்சம் பற்றி கூறுகிறது . தனி காண்டம், சாந்தி காண்டம்  வாழ்வில் உள்ள பிரச்சனைகள், கர்மவினைகள் போன்றவற்றுக்கான பரிகாரத்தை கூறுகிறது.

 

தீட்சை காண்டம் மந்திரம், எந்திரம், தந்திரம் போன்றவற்றை கூறுகிறது.ஔஷத காண்டத்தில் மருத்துவம் பற்றிய செய்திகள் உள்ளது. மேலும் தசாபுத்தி காண்டத்தில் வாழ்க்கையில் நடக்க இருக்கும் திசைகள் மற்றும் அதன் விளைவுகளை பற்றிய குறிப்புகள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.