தங்கத்தில் ஒளிந்திருக்கும் உண்மைகள்.. அட இவ்வளவு இருக்கா?
தங்கம் ஒரு உலோகம் என்றாலும் அனைவரது வாழ்விலும் விரும்பக் கூடிய ஒரு பொருளாக உள்ளது. குறிப்பாக பெண்களின் மனதை கவர்ந்திருக்கும் தங்க ஆபரணங்களை பற்றி அதிக அளவு பேச வேண்டிய அவசியமே இல்லை. அந்த அளவு இந்த தங்கமானது அவர்கள் வாழ்வோடு ஒருங்கிணைந்திருக்கும்.
அப்படிப்பட்ட இந்த தங்கமானது பூமியில் இருந்து சுமார் 2.44 லட்சம் மெட்ரிக் டன் அளவு வெட்டி எடுக்கப்படுகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படுகின்ற உலோகங்களான இரும்பை விட அதிக அளவு தங்கத்தை தான் வெட்டி எடுக்கிறார்கள், என்றால் அது உங்களுக்கு மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
விலை மதிப்பு மிக்க இந்த தங்கமானது மஞ்சள் நிறத்தில் ஜொலிப்பதால் அனைவரும் மனதையும் கவர்ந்து விட்டது என்று கூறலாம். இந்த உலோகத்தை நகைகளாக செய்து அணிவதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது.
இதனால் தான் தொன்று தொட்டு தங்க நகைகளை அணியக்கூடிய பழக்கம், பாரம்பரியம் நம்மிடையே இருந்து உள்ளது. தங்கத்தில் ஆபரணங்கள் மட்டுமல்ல தங்க காசுகளும் புழக்கத்தில் இருந்தது.
மேலும் சிலர் தங்கத்தை சிலைகள் செய்யவும் பயன்படுத்தி இருக்கிறார்கள். தங்கம் ஒரு மிகச்சிறந்த வெப்ப கடத்தியாக உள்ளது. இது மின்சாரத்தையும், வெப்பத்தையும் கடத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. காற்றில் வைத்து இருந்தாலும் இதன் நிறம் மங்காது. இரும்பை போல துருப்பிடிக்காது.
தங்கத்தை அளக்க கேரட் என்ற அலகை பயன்படுத்துகிறோம். பொதுவாக 24 கேரட் என்பது சுத்தமான தங்கமாக உள்ளது. இதில் நாம் நகை செய்ய முடியாது என்பதால் 22 கேரட் தங்கத்தை நகை செய்வதற்காக பயன்படுத்துகிறோம்.
மேலும் இதில் செம்பு மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களை சேர்ப்பதால் இது 91.6% தங்கமாகவும், 8.4% செம்பு அல்லது இரும்பு கலந்து இருக்கும்.
தங்கத்தின் பயன்பாடானது சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. மேலும் தங்கம் எத்தனை ஆண்டுகளானாலும் அழியாமல் அப்படியே இருப்பதால் மதிப்பு உடைய பொருளாக கருதப்படுகிறது.
பூமியில் மட்டுமே இருக்கும் இந்த தங்கத்தை எடுக்க ஆசைப்பட்டு வேற்றுக்கிரகவாசிகள் கூட பூமிக்கு வந்திருக்கிறார்கள் என்று சில அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் தங்கம் ஏன் இவ்வளவு மதிப்புமிக்க பொருளாக உள்ளது என்று. எனவே நீங்களும் தங்கத்தை அதிகளவு வாங்கி சேமியுங்கள்.
1 Comment
Deep sir தங்கம் வாங்க jewellery க்கு போகிறோமோ இல்லையோ தவறாமல் தங்களின் பதிவை பார்த்துவிடுவோம். அழகான பதிவிற்கு நன்றிகள் பல ❤️
Comments are closed.