• October 12, 2024

“காடுகளில் புதைந்திருக்கும் மாயா நகரம்..!” – விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு..

 “காடுகளில் புதைந்திருக்கும் மாயா நகரம்..!” – விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு..

Maya city

மாயா நாகரிகம் என்பது  பண்டைய கால மத்திய அமெரிக்க நாகரிகம் என்று கூறலாம். தற்போது இது மெக்சிகோ, குவாத்தமாலா,ஹொண்டுராஸ் போன்ற நாடுகள் வரை பரவியுள்ளது.

 

இந்த மாய இனத்தவர்கள் கணிதம், எழுத்து, வானவியல் போன்ற துறைகளில் விசாலமான அறிவினை பெற்றிருந்தார்கள். இவரது கட்டிடக்கலை போற்றுதற்கு உரிய வண்ணம் இருந்துள்ளதாக பல அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள்.

Maya city
Maya city

இந்த இனத்தின் பொற்காலம் என்பது கிபி 150 காலகட்டத்தில் மிகவும் உச்சத்தை அடைந்து பிறகு படிப்படியாக வீழ்ச்சியை சந்தித்தது. இதனை அடுத்து இவர்கள் தொடர்பான ஆய்வுகள் இன்றும் பல பகுதிகளில் நடந்த வண்ணம் உள்ளது.

 

அந்த வகையில் யுகடன் (Yucatan) தீபக்கத்தில் இருக்கின்ற பாலமாகு (Balamaku) என்ற காடுகள் நிறைந்த பகுதியில் சமீபத்தில் விஞ்ஞானிகள் ஆய்வுகள் மேற்கொண்ட போது அந்தப் பகுதியில் ஒரு பண்டைய மாயா நகரத்தின் தோற்றத்தை கண்டறிந்து இருக்கிறார்கள்.

 

இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்று தகவல்கள் வந்துள்ளது. மேலும் இதனை வான்வெளி லேசர் ஸ்கேனிங் (LiDAR) மூலமும் தொல் பொருள் அகழ்வாய்வும் தொடர்ந்து தற்போது நடைபெற்று வருகிறது.

 

1996 ஆம் ஆண்டு முதலில் இந்த பகுதியில் ஸ்லோவேனியாவை சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளரான இவான் ப்ராஜ்க் தலைமையில் சுமார் 37 மைல் அளவு இந்த காட்டில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

 

இதன் மூலம் பழமையான மாயா நகரத்தின் கட்டிடங்கள் விளையாட்டுத் தளங்கள் 50 அடிக்கும் மேற்பட்ட பிரமிடுகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது.

Maya city
Maya city

இந்த பகுதிக்கு ஒகாம்டன் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழு மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் படிகட்டுக்கள், ஒற்றை கல் நெடு வரிசைகள் மற்றும் பலிபீடங்கள் போன்றவை கண்டறியப்பட்டது.

 

அது மட்டுமல்லாமல் லாரிகுவா நதியை நோக்கி செல்லும் கட்டமைப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சந்தைகள் மற்றும் சமூகக்கூடங்கள் மைதானங்களும் இருந்ததாக சொல்லப்படுகிறது.

 

மேலும் இந்த பகுதியில் அதிக அளவு ஆய்வுகளையும் மேற்கொள்ளும் போது இன்னும் கணக்கில் அடங்காத விஷயங்கள் வெளி உலகத்திற்கு வெளிவரும் என்று அறியப்படுகிறது.