• July 27, 2024

யார் இந்த யட்சினி? மாந்திரீகம் தரும் விரிவான விளக்கம்..

 யார் இந்த யட்சினி? மாந்திரீகம் தரும் விரிவான விளக்கம்..

Yakshini

யட்சினி என்ற வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படி கேள்விப்பட்டிருந்தால் இந்த யட்சினி தேவதைகளோடு எப்படி பேசுவது என்ற வித்தை உங்களுக்கு தெரியுமா?

உதாரணமாக நீங்கள் உங்கள் ஜாதகத்தை பார்ப்பதற்காக ஒரு சில ஜோதிடங்களை சந்திக்க கூடிய வேளையில் நீங்கள் அவர்கள் முன் அமர்ந்து கொண்டாலே, உங்கள் உங்களைப் பற்றிய விஷயங்களை அக்கு வேறு ஆணிவேராக தரம் பிரித்து சொல்வார்கள்.

Yakshini
Yakshini

எப்படி இப்படி சொல்கிறார்கள் என்ற எண்ணம் உங்களுக்கு கட்டாயம் வந்தே தீரும். இதற்கு காரணம் இவர்கள் யட்சினைகளை வசியப்படுத்தி வைத்திருப்பார்கள். உங்களைப் பற்றிய விஷயங்களை அந்த ஜோதிடர்களின் காதுகளில் மிகத் தெளிவான முறையில் இந்த யட்சனிகள் சொல்லிவிடும்.

அப்படிப்பட்ட யட்சினிகள் யார்? என்று எந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். மலையாள தேசத்தில் பேய்களை யட்ச சக்திகள் என்ற பொருள் பட அழைப்பார்கள். இதில் யட்சன்,யட்சி என்று இருப்பார் வகைகள் உள்ளது. இவற்றுக்கும் பேய்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது.

யார் இந்த யட்சினி என்ற எண்ணம் உங்கள் சிந்தனையில் ஏற்படலாம். இந்த உலகில் எப்படி மனித இனம் உயிர் வாழ்கிறதோ, அது போல இந்த யட்சனி என்பது ஒரு வகையான உயிரினம் தான். இந்த உயிர்கள் உங்கள் கண்களுக்கு தெரியாது.

Yakshini
Yakshini

எப்படி தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள் என்ற வார்த்தைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோமோ, அதுபோல இந்த யட்சினிகள் பார்க்க முடியாத வகையில் இருக்கக்கூடிய சூட்சும தேகிகள் என்ற பெயரை சாஸ்திரங்கள் கூறுகிறது. நாம் வாழக்கூடிய உலகில் தான் அதுவும் வாழ்கிறது என்றாலும் அது வாழும் உலகம் ஒரு மாயா உலகம் என்று கூறலாம்.

இந்த யட்சினைகளின் 64 வகைகள் காணப்படுவதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு ஜனன, மரணம் என்பது கிடையாது. ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்கள் எப்படி விண்ணில் உள்ளதோ அதுபோல இந்த 64 யட்சினிகளும் மாய உலகத்தில் இருக்கிறார்கள்.

இந்த யட்சினைகளை மந்திரத்தால் கட்டுப்படுத்தியும் மனிதர்களின் சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாது. ஆனால் நல்ல காரியங்களுக்கு வசியப்படுத்தி பயன்படுத்த முடியும். மேலும் இந்த யட்சினைகளை வசியப்படுத்துவதற்கு என்று மந்திரங்கள் உள்ளது.

Yakshini
Yakshini

இந்த மந்திரங்களை பயன்படுத்தி நீங்கள் யட்சினிகளை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, நல்ல காரியங்களுக்கு இதனை பயன்படுத்துவதன் மூலம் நல்ல விஷயங்கள் நடக்கும் என கூறி இருக்கிறார்கள்.

மேலும் உங்களுக்கு யட்சினி பற்றி வேறு ஏதேனும் விஷயங்கள் தெரிந்திருந்தால், அவற்றை எங்களோடு பகிர்ந்து கொள்ள தயங்க வேண்டாம். உங்களது கருத்துக்களை எதிர்பார்த்து நாங்களும் காத்திருக்கிறோம்.