யார் இந்த நாயக்கர்கள்? பாண்டிய மண்டலத்தில் இவர்கள் செய்தது என்ன?
தமிழகத்தில் பொதுவாக சேர சோழ பாண்டிய மன்னர்களின் ஆட்சி நீண்ட நெடும் நாட்கள் நடந்தது என்பது நமக்கு மிக நன்றாக தெரியும். அந்த வகையில் தமிழகத்தை ஆண்டவர்கள், பாளையத்தை ஆண்டவர்கள் என பல்வேறு வகைகளில் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் குறு நிலத்தை பகுதியை ஆண்டவர்களை நாயக்கர் என்று அழைத்திருக்கிறார்கள்.
இந்த நாயக்கர்களின் பல வகைகள் காணப்படுகிறது. ஆந்திராவில் இருக்கக்கூடிய மக்கள் தொகையில் அதிகளவு காப்பு, ராஜ கம்பள, கொல்லா, பலிஜா, கவரா, கம்மா போன்ற நாயக்கர் வகைகள் உள்ளது.
எனினும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிகளவு வன்னிய மக்கள் இருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் நாயக்கர் என்ற பட்டத்தை வட தமிழக பகுதியில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
விஜயநகர பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்த பாண்டிய மண்டலத்தில் அரசியல் குழப்பங்கள் தலைதோக்கிய போது அதை அடக்குவதற்காக விஸ்வநாத நாயக்கர் படையுடன் அனுப்பப்பட்டார். இதனை அடுத்து அவர் அந்த பகுதியில் நிலவிய குழப்பத்தை சிறப்பான முறையில் அடக்கியதின் காரணமாக மதுரை மண்டல நிர்வாகியாக விஜய நகர பேரரசால் நிர்வகிக்கப்பட்டார்.
இந்த விஸ்வநாத நாயக்கர் பரம்பரை தான் பின்னால் மதுரை நாயக்கர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். மதுரை நாயக்கர் நாயக்கர்களின் திருமலை நாயக்கர் பற்றி அதிக அளவு உங்களுக்கு கூற வேண்டிய அவசியம் இல்லை.
திருமலை நாயக்கர் மதுரையை ஆண்ட சமயத்தில் தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மட்டுமல்லாமல் ,திருமலை நாயக்கர் மஹாலும் மதுரையில் ஏற்படுத்தப்பட்டது. இவரது காலத்தில் கட்டிடக்கலை மிகவும் சிறப்பான உச்சத்தை எட்டியது.
கிபி 1623 முதல் 1659 வரை திருமலை நாயக்கர் சிறப்பான முறையில் மதுரையை ஆண்டு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். மேலும் நாயக்கர்கள் பாமினி சுல்தான்களை எதிர்த்து போரிட்டவர்கள்.
திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் தான் போர்ச்சுகீசிய, டச்சுக்காரர்கள் வணிகத்தையும் சமயத்தையும் பரப்ப முற்பட்டனர். இவரையடுத்து பல நாயக்கர்கள் விஜயநகர பேரரசை எதிர்த்து துணிவோடு போராடியும் ஆட்சி செய்து வந்தார்கள்.
எனினும் ஆரம்ப காலத்தில் அவர்களுக்கு உதவியாக செயல்பட்ட நாயக்கர்கள் பின்னாளில் ஒவ்வொரு மண்டலத்திலும் தனித்து தங்களுடைய ஆட்சியை நிலை நிறுத்த போராடினார்கள். அந்த வகையில் தொண்டைமான்கள், செஞ்சி நாயக்கர்கள், தஞ்சையை ஆண்ட நாயக்கர்கள் என பல நாயக்கர்கள் பற்றி வரலாறு தெளிவாகக் கூறியிருக்கிறது.
உங்களுக்கும் நாயக்கர்கள் பற்றி இதுபோன்று வேறு ஏதேனும் கருத்து தெரிகின்றதா எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.